ஜெய் கொரோனோ
சாலைகளின் இருபக்கமும் நடைபாதை வியாபாரிகளை அதிகம் உருவாக்கி இருக்கிறது.பெரும்பாலும் காய்கறி வண்டிகள் தான்.புதிதாய் பல தொழில் முனைவோர்களையும், ஏற்கனவே தொழிலதிபர்களாய் இருந்தவர்களை சாமானியனாவும், கடன்காரனாகவும் மாற்றி இருக்கிறது.கடை உரிமையாளர்கள் நிறைய பேர் கடையையே காலி செய்து போய்விட்டனர்.எந்த தெருவை எடுத்தாலும் அதிகம் டூலெட் போர்டுகளே காணப்படுகின்றன.பல லட்சம் மதிப்புள்ள இன்னோவா காரிலும், மாருதி டிசையர் காரிலும் சாலையோரத்தில் மாஸ்க் மற்றும் வாழைப்பழம் விற்று கொண்டிருக்கின்றனர்.ஒரு சிலபேர் சைக்கிளிலும், டூவீலர்களிலும் டீக்கடை, மாஸ்க், பூ, காய்கறி, இறைச்சி என தங்களின் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கின்றனர்.
மாணவர்கள் தங்கள் கல்வியையும் இழந்து விட்டனர்.அரசுப்பணியில் இருப்பவர்களை தவிர தனியாரில் உள்ள அனைவர்களுக்கும் பலத்த பாதிப்புகளை உருவாக்கி இருக்கிறது.கொரோனோவுக்கு முன் காண்ட்ராக்டர், இண்டீரியர், எஞ்சினீயர் என இருந்தவனையும் இப்பொழுது ஆடு, வாத்து, கோழி மேய்ப்பவனாகவும், தேங்காய் வியாபாரியாகவும் ஆக்கி இருக்கிறது.
உலகம் தழுவிய இந்த கொரோனோவில் அனைவருக்கும் மிகப்பெரும் பாதிப்புதான்.இந்திய வரைபடத்தில் அத்திப்பட்டி என்கிற கிராமமே இல்லாமல் போனதை போல இந்த காலண்டரில் 2020 என்கிற ஆண்டே இல்லாமல் ஆக்கி இருக்கிறது.
ஐந்து மாதங்களுக்கும் மேலாக லாக்டவுன் லாக்டவுன் என நீட்டித்து அம்மணிகளை வெளிவர விடாமல் செய்து, அவர்களையும் கொழுக் மொழுக் என மிகப்பருமனாய் குண்டாக்கி விட்டதும் இந்த கொரோனா தான்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
தீதுண்மி பலரையும் வேலை இழக்க வைத்திருக்கிறது. சூழல் விரைவில் சரியாக வேண்டும்.
ReplyDeleteலாக் டவுன் பலரையும் வெளியே வரவிடாமல் செய்திருப்பது, அதனால் பருமனான பலர்! நேற்று கூட ஒரு நண்பரை நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்தேன் - பெரிய தொப்பையுடன்! :)
வாவ்..வருகைக்கு நன்றி......இன்னமும் பிளாக் படிக்கறீங்களா...நான் தொடர்பு விட்டு விட கூடாது என்பதற்காக பதிவு பண்ணிட்டு இருக்கிறேன்.
ReplyDeleteபடிப்பது மட்டுமல்ல! எழுதிக் கொண்டும் இருக்கிறேன் ஜீவா!
Delete