Showing posts with label பரளிக்காடு. Show all posts
Showing posts with label பரளிக்காடு. Show all posts

Thursday, July 28, 2011

பரளிக்காடு - பயணம் 2

நல்ல சுவையான உணவை உண்டு, கொஞ்சம் ஒய்வு எடுத்தோம்


இந்த செயல் பாட்டினை திறம் பட செயல் படுத்தி வரும் வன அலுவலர் திரு.ஆண்டவர் அவர்களிடம் விடை பெற்று கொண்டு ரசிது வாங்கி கொண்டு பின்னர் குளிப்பதற்கு சிறுகனாறு என்னும் ஆறு சென்றோம்.






அந்த ஆற்றின் நீரோட்டம் நல்ல இழுவை , வேகம் கொண்டது.அங்கு கூழாங் கற்கள் நிறைய உள்ளன.அதில் நல்ல ஒரு குளியல் போட்டோம்.அந்த ஆற்று நீர் மூலிகை கலந்த நீராம்.நல்ல புத்துணர்ச்சி ஏற்பட்டது.மேலும் அங்கு ஆதி வாசிகள் கும்பிடும் கோவில் ஒன்றும் உள்ளது.பின்னர் அங்கிருந்து கிளம்பி கோவை வந்து சேர்ந்தோம்.ஒருநாள் சுற்றுலா செல்ல சிறந்த இடம் பரளி.
பெரியவர்களுக்கு 300 மற்றும் சிறியவர்களுக்கு 100 வசூலிக்கிறார்கள்.இந்த தொகை ஆதிவாசிகளின் நலனுக்கு செலவு செய்கிறார்கள்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Monday, July 25, 2011

பரளிக்காடு -பயணம் 1

சனி அன்றே போன் பண்ணி பதிவு செய்து விட்டபடியால், ஞாயிறு காலை புதிய பயணத்தை தேடி சென்றோம்.என் வீட்டிலிருந்து 8 மணிக்கு கிளம்பி 8 .30 மணிக்கு காரமடை அடைந்தோம்.பின்னர் அங்கிருந்து தோலம்பாளையம் செல்லும் வழியில், தாயனுர் என்ற ஊரிலிருந்து வெள்ளியங்காடு செல்லும் ரோடு பிரிகிறது.



அவ்வழியே சென்றால் வெள்ளியங்காடு ஊரை அடையலாம்.இதுதான் அடிவாரம்.முதல் செக்போஸ்ட் நம்மை வரவேற்கிறது .அனுமதி பெற்று மலை யில் பயணிக்கிறோம்.மொத்தம் 10 ஹேர் பின் வளைவுகள் இருக்கின்றன. 30 நிமிட பயணத்தில் பவானி ஆறு செல்லும் பாலம் அடைந்தோம்.


இந்த பவானி ஆறு சிறுகனாறு என்றும் சொல்லபடுகிறது.அங்கே காலை உணவை முடித்துவிட்டு (தயாராய் கொண்டு சென்றிருந்தோம் ) அங்கிருந்து மீண்டும் மலையில் ஏறி இறங்கினால் இரண்டாவது செக்போஸ்ட் வருகிறது.

அங்கேயும் அனுமதி பெற்று பரளி பரிசல் செல்லும் இடத்தினை 10 நிமிடத்தில் அடைந்தோம்.நாங்கதான் முதலில் வந்து சேர்ந்து இருந்தோம்.(நேரம் 10 .20 )



அங்கே உள்ள ஊஞ்சலில் இளைப்பாறினோம்.கொஞ்ச நேரத்தில் ஒரு மகளிர் குழு வேனில் வந்து இறங்கினர்.எங்களின் வறட்சியை போக்கினர்.பின்னர் ஆதிவாசி மகளிர் வந்து சுக்கு காபி கொடுத்தனர்.அதை அருந்தி விட்டு பரிசலில் செல்ல ஆயத்தம் ஆனோம்.




பரிசல் பயணம் சுகமாய் இருந்தது.பில்லூர் அணை தேக்கதினை காட்டினார்கள்.தண்ணீர் மிகவும் சில்லென இருந்தது.அத்தீகடவு தண்ணீராம்.இதுதான் கோவையின் தாகத்தினை தீர்க்கிறதாம்.கொஞ்ச தூரம் பயணித்ததும் ஒரு காட்டில் இறக்கி விடுகின்றனர்.

அங்கே ஒய்வு எடுத்தபின் திரும்ப புறப்பட்ட இடத்தினை அடைந்தோம்.கொஞ்ச நேரம் கயிற்று கட்டிலில் ஒய்வு எடுத்து பின் சாப்பிட சென்றோம்.நல்ல உணவினை அளித்தனர்.வெஜ் பிரியாணி, தயிர் சாதம், சப்பாத்தி, களி, கீரை , மீன் குழம்பு, சிப்ஸ் தந்தனர்.


பபே சிஸ்டத்தில் பரிமாறினார்கள் யுனிபாரம் அணிந்த அங்குள்ள ஆதிவாசி சுய உதவி குழு மகளிர்.

இன்னும் இருக்கு ...தொடரும்

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...