வாத்து கறி - வேலாயுதம் பாளையம்-கரூர்
சேலம் கரூர் பைபாஸ் சாலையில் வேலாயுதம் பாளையம் என்கிற ஊரில் இந்த வாத்து கறி ரொம்ப பேமஸ் .ரோட்டு ஓரத்தில் நிறைய கடைகள் இருக்கின்றன.நல்ல சுவையுடன் இருக்கிறது.ஒரு நாளைக்கு கிட்ட தட்ட 100 முதல் 200 கிலோ வரை விற்பனை ஆகிறதாம்..நல்ல சுத்தமாகவும் சமைக்கிறார்கள்.சூடாக இட்லி தோசை எப்போதும் கிடைக்கும் .இந்த வாத்துகறி உடன் இட்லி சாப்பிட்டால் அப்படியே நாக்கில் சுவை ஊறும்..ஒரு கிலோ 150 ரூபாய் அரை கிலோ 80 ரூபாய்...அப்புறம் வாத்து முட்டை ஆப்பாயில், ஆம்லெட் கிடைக்கும் ...நானும் என் டிரைவரும் ஒரு கிலோ காலி பண்ணினோம் .பார்சல் பண்ணியும் தருகிறார்கள் .
பச்சை கறியும் கிடைக்கும்.வாங்கி வீட்டில் கூட சமைக்கலாம்.வாங்கும் போது ரத்தமுடன் சேர்த்து வாங்கணும்.கறியை கழுவ கூடாது.அப்போதுதான் ரொம்ப ருசி கிடைக்கும்.

கொசுறு 25.4.12 :
இப்போ கொஞ்சம் விலை ஏத்திட்டாங்க ன்னு நினைக்கிறேன்.போன வாரம் கூட இங்க சாப்பிட்டேன்.இப்போ கொஞ்சம் டேஸ்ட் கம்மியா இருக்கு போல.எப்பவும் கதிர்வேல் கடையில் தான் சாப்பிடுவேன் அங்க சரியில்லை.அதுக்கு எதிரில் மாணிக்கம் கடையில் ரொம்ப நல்லா இருக்கிறது..
கொசுறு 6.5.13 :
இப்போ விலை கிலோ 200 ஆகிவிட்டது.மொத்தம் அந்த பைபாஸ் ரோட்டில் 5 கடைகள் இருக்கின்றன.எல்லா கடைகளிலும் சாப்பிட்டு பார்த்துவிட்டேன்.ஒவ்வொரு கடையும் ஒருவித டேஸ்ட்.வாத்துக்கறி எப்பவும் டேஸ்ட்.என் அம்மா சமைத்து தரும் வாத்துக்கறி சமையலுக்கு ஈடில்லை எதுவும்..
நேசங்களுடன்
ஜீவானந்தம்
சூடு அதிகம் அல்லவோ...?
ReplyDelete