Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Monday, December 9, 2013

சினிமா - மெமரிஸ் - (Memories - 2013) - மலையாளம் - விமர்சனம்

சமீபத்தில் கோழிக்கோடு கேரளா போயிருந்த போது அங்கிருந்து நிறைய படங்கள் வாங்கிவந்தேன்.எல்லாம் பார்த்தபின் அதில் ரொம்ப பிடிச்ச படம் மெமரிஸ்.ப்ருத்விராஜ் நடிச்ச சூப்பரான திரில்லர் மூவி.படம் பார்க்க பார்க்க செம இண்ட்ரஸ்ட்டிங்காக இருக்கு.

குற்றவாளிகளை பிடிக்கப்போய் அதில் தன் குடும்பத்தினை இழந்து  அவர்கள் ஞாபகமாகவே எப்பவும் குடிபோதையிலேயே இருக்கிற ஒரு போலீஸ் அதிகாரி.வேலைக்கு போகாம லீவ் போட்டுட்டு குடிக்கிற ஆசாமி.அந்த ஊர்ல ரெண்டு கொலை ஒரே மாதிரியா நடக்குது.காவல் துறையால் அதைக்கண்டுபிடிக்கமுடியல.அதனால இந்தப்பொறுப்பு கள்ளுகுடியன் என்று செல்லமா அழைக்கப்படும் ப்ருத்விக்கு வருது.அதுக்குள்ள தொடர்ச்சியா இன்னொரு கொலை நடக்குது.இப்படி எல்லா கொலைகளும் ஒருத்தரால் மட்டுமே செய்யப்படுகிறது என்பதை அவர் எப்படி ட்ரிங்க்ஸ் அடித்துக்கொண்டே கொலையாளியை கண்டுபிடிக்கிறார் என்பது தான் கதை.

ப்ருத்வி எப்பவும் ரொம்ப ஹேண்ட்ஸம்மா இருப்பாரு.போலீஸ்னா கொஞ்சம் மிடுக்கு இருக்கும்.ஆனா இந்தப்படத்துல லேசா டிரிம் பண்ணின முகத்தோட படம் புல்லா குடிகார வேடத்துல வருவாரு.அவர் கொலைக்கான காரணங்களை கண்டுபிடிக்கிற ஸ்டைலே ரொம்ப வித்தியாசமா இருக்கும்.எப்பவும் மப்போடு பேசுகிற மேனரிசம் செமயா இருக்கு.நாலு கொலைகளுக்குண்டான காரணத்தினை கண்டுபிடிச்சி அடுத்து தன் தம்பிதான் அடுத்த டார்கெட் என தெரிந்து குற்றவாளியை நெருங்கிய பின்னர் கொலைகாரன்கிட்ட எப்படி தம்பியை காப்பாத்தறார், அதே சமயம் தன் மனைவி குழந்தைக்கு ஏற்பட்ட கதி தன் தம்பிக்கும் ஏற்பட கூடாதுன்னு பழைய ஞாபகத்தினை நினைச்சி கொலைகாரனை டேலண்டா கொல்றதுதான் படத்தோட முடிவு.

படம் ரொம்ப நல்லா விறுவிறுப்பாக இருக்கு.யார் கொலையாளி என்பதை கிளைமாக்ஸ் வரை கண்டுபிடிக்கும் காட்சிகள் நன்றாக இருக்கு.ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும்தான்.கெளரவ வேடத்தில் மேக்னா ராஜ் நடித்து இருக்கிறார்.


நடிப்பு :
ப்ருத்விராஜ்
விஜயராகவன்
மேக்னாராஜ்
சுரேஷ் கிருஷ்ணா

இயக்கம் : 
ஜீத் ஜோசப்

பார்க்கவேண்டிய  படம்.  

நேசங்களுடன்
ஜீவானந்தம்


 

இன்னும் கொஞ்சம்...

Wednesday, September 11, 2013

சினிமா - அடிமைப்பெண் (1969) - தமிழ் - விமர்சனம் - 40++

                                    சிறுவயதில் எம்ஜிஆர் படங்களைப் பார்க்கின்ற போது ஒரு ஈர்ப்பு எப்பவும் இருக்கும்.வில்லன்கள் யாரையாவது கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கும் போதோ, இல்லை யாருக்காவது உதவி செய்ய வருகின்ற போதோ, படம் பார்க்கும் நம்மை  எப்படா வருவார், சண்டை போடுவார் என எதிர்பார்க்க வைக்கும், ஏங்க வைக்கும் காட்சிகள் மூலம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர்.  படத்தில் அவர் போடும் கத்தி சண்டைக் காட்சிகளை பார்த்துவிட்டு பள்ளி மைதானத்தில் வாழை மட்டை, தென்னையின் அரக்குமட்டை இவைகளை வைத்து சண்டை போட்டது இன்னும் ஞாபகம் இருக்கிறது.எங்க ஊர்ல ஏதாவது திருவிழான்னா மைதானத்துல திரை கட்டி படம் போடுவாங்க.10 மணிக்கு படம் அப்படின்னாலே 8 மணிக்கே பாயை தூக்கிட்டு போய் திரைக்கு முன்னாடி மண்ணைக் குவிச்சு அதுல பாய் போட்டு இடம் பிடிச்சி உட்கார்ந்து விடுவோம்.

               படம் ஓட்டறவன் 10 மணிக்கு பத்து நிமிசம் முன்னாடிதான் வருவான்.அதுவரைக்கும் நம்மாளுங்க மைக்க பிடிச்சு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த திரைப்படம் இன்னும் சற்று நேரத்தில் திரையிடப்படும் அப்படின்னு 8 மணியில இருந்தே கூவ ஆரம்பிச்சிடுவாங்க.ஆனாலும் பொட்டி வந்தபாடிருக்காது.அப்புறம் அவன் வந்தப்புறம் திரை கட்டி புரஜெக்டரை கரக்டா வச்சு ரீல் சுத்தி போடும் போது சவுண்ட் இருக்காது.அப்புறம் அதை சரிபண்ணி படம் போட எப்படியும் அரைமணி நேரம் ஆக்கிடுவாங்க.அந்த நேரத்துல திட்டிகிட்டே இருந்தாலும் திரையில எம்ஜிஆரை காண்பித்தவுடன் கோபம்லாம் போய் வர்ற மகிழ்ச்சி இருக்கே..அதை விவரிக்க முடியாது.விசில் பறக்கும், பேப்பர் பறக்கும்.

                             அப்படித்தான் எம்ஜிஆர் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திருவிழாவிற்கும் எனக்கு அறிமுகம் ஆனது.அப்புறம் எப்பவாது தூர்தர்சனில் போடும் படங்களை பார்ப்பதோடு முடிந்துவிடும்.எம்ஜியார் அவர்கள் காலமான போது அவரின் படங்களை ஒரு வீட்டில் டெக் போட்டு காண்பித்தனர்.அப்போது தான் மலைக்கள்ளன், மதுரைவீரன் போன்ற படங்களை பார்த்தேன்.
அடிமைப்பெண் படமும் அப்படித்தான்.எங்கள் ஊரில் ஒரு திருவிழாக் காலத்தில் பார்த்த ஞாபகம்.வில்லன் நம்பியார் இல்லாத படம்.சமீபத்தில் என்னுடைய மொபைல் புரஜக்டஃரில் இந்த படத்தினை டவுண்லோடு செய்து வைத்து இருந்தேன்.அதை எனது கிராமத்தில் என் பெற்றோருடன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அதனால் தான் இந்த விமர்சனம்
வேங்கைமலை ராணியாக இருக்கும் மங்கம்மா (பண்டரிபாய்) மீது ஆசைப்படும் செங்கோடனின் காலை ராணி வெட்டிவிடுகிறார்.இதை அறிந்த வேங்கைமலை ராஜாவான எம்ஜியார்  மன்னிப்பு கேட்க சொல்லி அவனிடம் வருகிறார்.ஆனால் போர் புரியும் சூழ்நிலை ஏற்படும் போது இருவரும் சண்டை போடலாம் என தீர்மானம் எடுத்து ஒற்றைக்காலுடன் இருக்கும் செங்கோடனுடன் தானும் ஒரு காலை கட்டிக்கொண்டு சண்டையிடுகிறார். இதில் தோற்ற செங்கோடன் வஞ்சகமாக எம்ஜியாரை கொன்று விடுகிறான்.நாட்டையும் கைப்பற்றி விடுகிறான்.ராணி தப்பித்துவிடுகிறாள்.ஆனால் அவர்களது குழந்தை செங்கோடன் கையில் சிக்கி சிறையில் அடைக்கப்படுகிறது.

            செங்கோடன் அங்கிருக்கும் வேங்கை மலை பெண்களை சங்கிலி போட்டு அடிமைப்படுத்தி விடுகிறான்.சிறையில் குழந்தை வெளியுலகம் தெரியாத ஆளாக வளர்ந்து பின் வேங்கைமலை ஆளால் தப்பிக்க வைக்கப்படுகிறான்.ஜீவா எனப்படும் வேங்கைமலை பெண்ணிடம் புது மனிதனாக வளர்கிறார் புது எம்ஜியார்.பேச்சு முதல் காதல் வரை அனைத்து கலைகளையும் கற்று தேர்கிறார்.தன் தாயார் உயிருடன் இருப்பதை அறிந்து எம்ஜியார் அவரை சந்தித்து சபதம் எடுக்கிறார்.அடிமைப்பட்டு கிடக்கும் பெண் சமூகத்தை விடுதலை செய்து விட்டு வந்து சந்திக்கிறேன் என்று...


                           இதற்கிடையில் பவளநாட்டின் தளபதியின் சூழ்ச்சியால் எம்ஜியார் ஜீவா இருவரும் கைதாகின்றனர்.அந்நாட்டின் ராணி பவளவல்லியின் காதலை ஏற்காததால் எம்ஜியார் இருக்கும் இடத்தினை செங்கோடனிடம் சொல்லி விடுகிறாள்.அதே சமயம் மங்கம்மாவினை கண்டுபிடித்து செங்கோடன் கொடுமைப்படுத்தும் போது எம்ஜியார் செங்கோடனை கொன்று தன் தாயாரையும் தன் நாட்டையும் காப்பாற்றி அடிமைப்பெண்களின் விலங்கை உடைப்பது தான் கதை.
                        எம்ஜியார் இருவேடங்களில் நடித்து இருக்கிறார்.கூன் விழுந்தபடி நடித்து பின் ஒரு சண்டைக்காட்சியில் கல்லைத்தூக்கும் போது முதுகு நிமிரும் காட்சியில்  நமக்கே புல்லரிக்கிறது.அதே மாதிரி பவள நாட்டில் கைகளை கட்டி இழுக்கும் காட்சியில் கைதட்டல் காதைப் பிளக்கிறது.கிளைமாக்ஸ் காட்சியில் சிங்கத்துடன் சண்டையிட்டு அதன் வாயை பிளக்கும்போது நாம் வாயைப் பிளக்கிறோம் உற்சாகத்தில்.
செங்கோடன் எம்ஜியாருடன் வலையில் குதித்துக்கொண்டு கீழே இருக்கும் குத்தீட்டிகளில் மோதாமல்  நடக்கும் சண்டைக்காட்சியில் பிரமிக்க வைக்கிறது.அதே மாதிரி கிளைமாக்ஸ் காட்சியும் பவர்புல்..
                            இதில் ஜீவா, பவளவல்லியாக ஜெயலலிதா இருவேடங்களில் நடித்து இருக்கிறார்.கவர்ச்சி வேடங்களில் கலக்கி இருக்கிறார்.படம் முழுக்க கவர்ச்சி உடையிலேயே வலம் வருகிறார்.நடனத்திலும் பின்னி இருக்கிறார்.ஒரு பாடலில் தன் கால்கள் மற்றும் இடையினில் மத்தளத்தினைக் கட்டிக்கொண்டு அடிக்கும் நடனத்தில் இப்போதைய கவர்ச்சி நடிகைகள் எல்லாம் கை கட்டி நிற்க வேண்டும்.
படத்தின் வசனங்களும் அருமை.பவளநாட்டின் மந்திரவாதியாக சோ, வேங்கைமலை வைத்தியராக சந்திரபாபு, தளபதியாக மனோகர் நடித்து இருக்கின்றனர்.

பாடல்கள் அனைத்திலும் சமூகக்கருத்துக்கள் பொதிந்து இருக்கின்றன.

ஏமாற்றாதே....ஏமாறாதே...
தாயில்லாமல் நானில்லை...
அம்மா என்றால் அன்பு....
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது 
காலத்தை வென்றவன் நீ....காவியமானவன் நீ
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா 
என ஆறு பாடல்கள்...அனைத்தும் ரசிக்க வைக்கின்றன.


இதில் அம்மா என்றால் அன்பு பாடலை ஜெயலலிதா பாடியிருக்கிறார் முதன் முதலாக.
ஆயிரம் நிலவே வா பாடலை நம்ம எஸ்பிபி அவர்கள் முதன் முதலாக எம்ஜியார்க்கு பாடியிருக்கிறார்.தமிழ்த்திரையுலகிற்கு எஸ்பிபியின் முதல் பாடலாக இதுவே இருக்கிறது.

கே வி மகாதேவனின் இசையில்,  கே.சங்கரின் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக படம் இருக்கிறது (ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் போல..)
எம்ஜியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படம்.திரையிட்ட அனைத்து இடங்களிலும் நூறு நாட்கள் மேல் ஓடி சாதனை படைத்த படம்.

கண்டிப்பா எங்காவது உங்க ஊர்ல திரையிட்டாங்கன்னா பாருங்க...எம்ஜியார் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் கவரும் படம்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Tuesday, July 9, 2013

சினிமா - CHANTHUPOTTU - சாந்துபொட்டு - மலையாளம் - 2005 -விமர்சனம்

              எங்க கிராமத்துல பெண் தன்மையோட இருக்கிற ஆண்களை பொம்பளச்சட்டி அப்படின்னு தான் சொல்லுவாங்க.அப்போலாம் திருநங்கை, அரவாணி அப்படின்னு யாரும் கண்டுபிடிக்கல.அதுக்கப்புறம் அலி வருது போகுதுன்னு சொன்னாங்க.ஆனா பெரும்பான்மையோர் பொம்பளச்சட்டி தான் கூப்பிடுவாங்க.
         இவங்க எப்போதும் ஆண்கள் அணியிற சட்டையையும் லுங்கியையும் தான் கட்டிகிட்டு இருப்பாங்க.எப்ப பார்த்தாலும் பெண்கள் கூட தான் இருப்பாங்க.பெண்கள் செய்யுற வேலைகளான (மாதர்குல சங்கங்களே, பெண் சிங்கங்களே வம்புக்கு வந்திடாதீங்க) தண்ணி எடுப்பது, வாசல் பெருக்குவது, சமையல் செய்வது என இப்படித்தான் இருக்கும்.என்னதான் அழகா இருந்தாலும் குரல் மட்டும் கர்ண கொடூரமா இருக்கும்.பெண்களும் இவர்களை துணைக்கு எங்கு வேண்டுமானாலும் அழைத்து செல்வார்கள்.பெண்களின் வீட்டிலும் கண்டு கொள்ளமாட்டார்கள்.(ஒண்ணும் நடக்காது என்கிற தைரியத்தில்..ஹிஹிஹி).
          ஆனால் ஆண்களிடம் இவர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள்.முகத்தை திருப்பிக்கொண்டு செல்வார்கள்.என் கிராமத்தில் இப்படித்தான் ஒரு நபர் இருந்தார்.ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் அவமானப்படுத்தப்பட்டே அவர் தற்கொலை செய்து கொண்டார்.
            இப்போதிருக்கும் திருநங்கைகளுக்கு உண்டான விழிப்புணர்வு, சட்ட ஆலோசனைகள், அரசின் இலவச உதவிகள் என எல்லாம் கிடைத்திருந்தால் அவர் இன்னும் இருந்திருப்பார்.காலம் ஒரு நல்ல மருந்து என்பது தெரியாமல் போய்விட்டது.அப்படிப்பட்ட பெண் தன்மை இருக்கிற ஒரு நபரோட வாழ்க்கை கதைதான் இந்த சாந்து பொட்டு.

     மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சாந்துபொட்டு என்கிற படத்தினை அப்போ வெளியான போது கேரளாவில் கொச்சினில் பார்த்தேன்.அந்த படம் அப்போதிருந்து நேற்று வரை (ஏசியா நெட் சேனலில் ஞாயிறு ஒளிபரப்பானது) கிட்டதட்ட ஒரு பத்து முறையாவது பார்த்திருப்பேன் டிவிடியில்.அந்த படத்தில் வரும் ஒரு பாடலை எப்போதும் முணுமுணுத்துக்கொண்டே இருப்பேன்.செம ஹிட்டான பாடல் அது.
ஓமன புழ கடற்புரத்தின் ஓமனே...
நீ கரைஞ்ஞா இக்கரையில பாதிரா...
நீ சிரிச்சா இத்துறைக்கு சாகரா.... 
(எந்தா எண்ட...மலையாளம் கரக்டா....)

இந்த பாட்டை பாடினவர் சீனிவாசன் பையன் வினீத்.செம வாய்ஸ்.தட்டதின் மரையாது படத்தோட டைரக்டர் வேற..டிராபிக் படத்தின் ஒரு நாயகன்.

சரி கதைக்கு வருவோம்.
ஸ்டோரி – பெண் தன்மை இருக்கிற ஒரு ஆணின் கதை.

முழுக்கதை –
           பெண் குழந்தை வேண்டும் என்று எதிர்பார்த்து இருக்கிற ஒரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்து விடுகிறது.அந்த குடும்பத்தின் பாட்டி அந்த குழந்தையை பொட்டு வளையல் இட்டு பெண்ணாக பாவித்து வளர்க்கின்றனர். இதனால் பெண் தன்மையுடன் வளர்கிறது, ராதா கிருஷ்ணன் என்று பெயர் சூட்டிய குழந்தை ராதாவாக.ஒரு தகராறில் கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு போய் விடுகிறார் ராதாவின் தந்தை.வளரும் குழந்தை வாலிப பருவம் அடைகிறான்.அப்பவும் பெண்களுடன் விளையாடுவது, பரதம் சொல்லி தருவது என ஒரு பெண் தன்மையுடன் இருக்கிறான்.

              ஒரு பிரச்சினையில் சிலர் அவனது துணியை அவிழ்த்து விட மிக வெட்கப்பட்டு அழ, அதனால் அவனது தாய் நீ ஒரு ஆண் என்பதை நிரூபிக்கவேண்டும் என்று சொல்லிவிடுவதால் தன்னுடன் பழகும் மாலு என்கிற பெண்ணிடம் காதல் கொள்கிறான்.கூடலும் கொள்கிறான்.அந்த சமயத்தில் கடலில் மீன் கிடைக்காததால் மக்கள் அவ்வூரின் சாமியாரான மாலுவின் அப்பாவிடம் குறி கேட்க அவர், ஆண் தன்மையும் பெண் தன்மையும் இருக்கிற அவனால் தான் இந்த ஊருக்கு சாபம் எனவும் அவனை துரத்த வேண்டும் என சொல்கிறார்.மாலுவை ஒரு தலையாக காதலிக்கும் முரட்டு ஆசாமியாக குமார், (கொலையானவரின் பையன்) மற்றும் மாலுவின் அப்பா சாமியாரின் சதி திட்டத்தின் படி ராதையை அடித்து கடலில் மூழ்கடித்து விடுகின்றனர்.

             கடலின் இன்னொரு மறுபக்கம் பிஜி மேனனால் காப்பாற்றப்பட்டு அங்கு தங்கி இருக்கிறான் ராதை.கோர்ட்டு, கேஸ் என கஷ்டத்தில் இருக்கும் பிஜுமேனன் மற்றும் தங்கை பாவனாவுக்கு இவன் அங்கு வந்தவுடன் எல்லாம் சரியாகிவிடுகிறது.முதலில் வெறுக்கும் பாவனா பின் ராதையை பிரதராக ஏற்றுக்கொள்கிறாள்.அங்கு ஏற்படும் ஒரு சின்ன தகராறில் அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறான்.
                  வழியில் சந்திக்கும் தன் ஊர்க்காரர் ஒருவர் ராதாவிடம் மாலு இன்னும் உனக்காக காத்திருக்கிறாள் என்றும் உனக்கு குழந்தை பிறந்திருக்கிறது, தன் பையனின் வாரிசு உரிமையை கேட்க சென்ற உன் தந்தையை கொன்று விட்டார்கள் என்றும் சொல்கிறான்.ஊர் திரும்பும் ராதை, தன் பெற்றோரை கொன்ற குமாரை பழிவாங்கி மாலுவுடன் எப்படி ஒன்று சேர்கிறான் என்பது தான் கதை...

         ஷ்ஷ்ஷ்....அப்பாடி...இப்பவே கண்ணக்கட்டுதே...
           
ராதையாக திலீப். படம்...படம் முழுக்க நிறைந்திருப்பது திலீப். திலீப் மட்டுமே...என்ன ஒரு நடிப்பு..வாய்ஸ் மாடுலேசன்..பாடி லாங்வேஜ் என எல்லாம்...செம...

             இன்னும் கண்களை விட்டு அகலாத பாத்திரம்.இப்படி ஒரு நடிகன் இனி நடிப்பது கஷ்டமே.(தமிழில் விக்ரம் நடிப்பதாக சொன்னார்கள்.என்னவாயிற்று என்று தெரியவில்லை.)வித்தியாசமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிப்பது திலீப்க்கு நிகர் அவரே தான்.

அறிமுக காட்சியில் பரதம் சொல்லித்தரும் நடிப்பு அற்புதம்..

மாங்காய் பறி....களை கொத்து......அப்புறம் மத்திக்கு கடல்ல வலைவீசு என ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் விளக்கம் சொல்லி பரதம் கற்று தருவது சூப்பர்..
கண்ணுக்கு மை, நெயில் பாலிஷ், ஹேர்ஸ்டைல் , நடை உடை பாவனை  என ஒரு திருநங்கை போல படம் முழுக்க வாழ்ந்திருக்கிறார்.கடைசியில் ஹேர்கட்லாம் பண்ணிட்டு பேண்ட் போட்டு வந்தாலும் நடையில் கொஞ்சமும் மாற்றமும் இல்லாமல் வரும் காட்சியில் சூப்பர்.

படம் முழுக்க சின்ன சின்ன சுவாரசியங்கள்.ராதையாக திலீப், மாலுவாக கோபிகா, குமாராக இந்திரஜித், மற்றும் பிஜி மேன்ன் பாவனா, லால், இன்னும் நிறைய...

படம் முழுக்க நகைச்சுவை, நல்ல கதை, பாடல், செண்டிமெண்ட் என எல்லா விதத்திலயும் சூப்பராக இருக்கிறது.

இந்த படத்தினை இயக்கியவர் லால் ஜோஸ், இவரின் சிறந்த இயக்குனர்.சமீபத்தில் டயமண்ட்நெக்லஸ் கொடுத்தவர்.இசை வித்யாசாகர்.

இது 2005ல வெளியானது.ஆனாலும் இப்போ பார்த்தாலும் படம் பிடிக்கும்.எங்காவது டிவிடி சிடி கிடைச்சா பாருங்க...கேரளா மண்வாசனையுடன் திலீப்பின் நடிப்புடன் சூப்பரா இருக்கும். 

எல்லாரும் மார்க் போடறாங்க...நாமும் போடுவோம்
10/10 ஹிஹிஹி

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Saturday, June 22, 2013

சினிமா - DIAMOND NECKLACE - மலையாளம் - டயமண்ட் நெக்லஸ் - விமர்சனம்

சமீபத்துல இரண்டு மலையாளப்படங்கள் பார்த்தேன். இரண்டும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படங்கள்.ஒண்ணு 22 ஃபீமேல் கோட்டயம், இன்னொன்ணு டயமண்ட் நெக்லஸ் .
முதலில் டயமண்ட் நெக்லஸ் பத்தி பார்ப்போம்
டைரக்டர் - லால் ஜோஸ்
எழுத்து - இக்பால்
இசை - வித்யாசாகர்
நடிப்பு - ஃபாசில், சம்விருதா,அனுஸ்ரீ,
 

துபாயில் டாக்டராக பணிபுரியும் ஃபஹாத் ஃபாசில் கிரடிட் கார்டுகளின் துணையோடு, வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கேரக்டர்.(ஜல்சா பார்ட்டி) கூட பணிபுரியும் நர்சினை காதலிக்கிறார். தன் தாயின் லட்சியத்திற்காக துபாய் வந்து நர்ஸ் வேலை பார்க்கும் தமிழ்ப் பெண் கெளதமி நாயர் ஒரு கேரக்டர்.ஃபாசிலின் உயர் டாக்டராக வேலை செய்யும் ரோகினியின் உறவுக்கார பெண் சம்விருதா  கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு ஹாஸ்பிடலில் இருக்கிற ஒரு கேரக்டர்.

கிரடிட் கார்ட் லிமிட் தாண்டியதால் பணம் கட்ட வேண்டி நெருக்கடி கொடுக்கின்றன கார்ட் கம்பெனிகள்.மேலும் தாய்நாடு செல்ல முடியாத படி ஸ்டே வாங்கிவிடுகின்றனர்.கேரளாவில் அம்மாவின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கேரளா செல்ல நிர்ப்பந்தம் ஏற்பட லேபர் ஆபிசரின் உதவியால் வீட்டிற்கு செல்கிறார்.அம்மாவின் கட்டாயத்தால் கேரள பெண்ணை (துபாயில் உதவி செய்த லேபர் ஆபிசரின் உறவுக்கார பெண் ) மணக்கிறார்.அந்த பெண் அனுஸ்ரீ ஒரு வெகுளி கிராமத்து பெண்.வசதி இல்லாத இவர் ஒரு கேரக்டர்.

டாக்டர் மீண்டும் துபாய் வர அவருக்கு சிக்கல் ஏற்படுகிறது.பணம் இல்லாததால் இருக்கிற இடம், கார் எல்லாம் போய் நடுத்தெருவில் நிற்கிறார்.ஊர்க்காரரான சீனிவாசன் அவருக்கு உதவி செய்து அவருடைய லேபர் கேம்பில் தங்குகிறார்.இந்நிலையில் ஆஸ்பத்திரியில் இவருக்கு கல்யாணம் ஆன விவரம் தெரிந்து நர்ஸ் விலகுகிறார்.பின் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருக்கிற பெண்ணின் உதவியால் அவரின் அபார்ட்மெண்டில் தங்குகிறார்.அவர்களுக்குள் கசமுசா ஏற்படுவதற்குள் ரோகிணி தடுத்து டாக்டரின் மனைவியை துபாய் வரவழைக்கிறார்.

தன் கடன்களை அடைக்க கேன்சர் பெண்ணிடமிருந்து வைர நெக்லஸ் திருட டாக்டர் மயக்க மருந்து கொடுப்பதால் பின் விளைவு ஏற்பட்டு அப்போது பணியில் இருந்த நர்ஸ் கவனக்குறைவினால் தான் ஏற்பட்டது என அவரை டிஸ்மிஸ் செய்ய, ஒவர் டோஸ் மருந்தினால் பாதிக்கப்பட்ட கேன்சர் பெண் வேறு ஊருக்கு செல்ல நெக்லஸை டாக்டரிடம் அன்பளிப்பாய் கொடுக்க, மனம் திருந்தி டாக்டர் அதை தன் லட்சியம் நிறைவேறாமல் பாதியில் ஊர் திரும்புகிற நர்ஸ் க்கு கொடுத்துவிட்டு ஒரிஜினல் என்று போலியை மாட்டிக்கொண்டிருக்கிற மனைவியிடம் இருந்து எப்படி மீட்கிறார் பின் இருவரும் ஒன்று சேர்ந்தனரா என்பதுதான் கதை..
துபாயில் நடக்கிற கதை என்பதாலோ படம் படு ரிச்சாக இருக்கிறது.ஹீரோ தங்கி இருக்கும் புர்ஜ் கலிபா பில்டிங்  , பெல்லி டான்ஸ் நடக்கும் பாலைவனம், மருத்துவமனை என ஆலுக்காஸின் கைங்கர்யத்தால் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருக்கிறது.மிக அற்புதமான கதை.மனதை நெகிழ வைக்கும் சம்பவங்களுடன் பார்க்க படம் சுவாராசியமாக செல்கிறது.இவர்களுடன் ஒரு வைர நெக்லஸ் நடித்திருக்கிறது.ஜோய் ஆலுக்காஸ் ஓனரும் கூட ஒரு காட்சியில் வந்து செல்கிறார்.
லால் ஜோஸ் என்பவரின் இயக்கத்தில் மிக அருமையான படம்.ரொம்ப எதார்த்தமான படம்.
முழுசா சொல்லிட்டனா....என்ன பண்றது இந்த நெளிவு சுளிவு தெரிய மாட்டிங்குது.ஒரே கோவில் குளம், ஹோட்டல்ன்னு சுத்தி இப்போ சினிமா விமர்சனம் எழுத வரமாட்டேன்குது.இன்னும் நல்லா ட்ரை பண்றேன்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
 

இன்னும் கொஞ்சம்...

Wednesday, February 20, 2013

சினிமா - விஸ்வரூபம், இலக்கிய சந்திப்பு - 27

விஸ்வரூபம்:
கடந்தவாரம் கோவை சென்ட்ரல் தியேட்டரில் மிகுந்த கூட்டத்தினிடையே காணச்சென்றேன்.திருவிழா கோலம் பூண்டிருக்கிறது.எங்கெங்கும் கமலின் அவதாரங்கள்....விஸ்வரூபமாய்...ஏகப்பட்ட தடைகள், வில்லங்கங்கள் என அத்தனையும் தாண்டி வெற்றிகரமாய்.....
புதிதாய் பல மாறுதல்களுடன் சென்ட்ரல் தியேட்டர் அமைக்கப்பட்டு இருக்கிறது.புதிய சவுண்ட் சிஸ்டத்தில் படம் நன்றாக இருக்கிறது. விறுவிறுப்பான, பிரம்மாண்டமான காட்சிகள் என விழிகள் விரிய வைக்கிறது.கமலின் நடிப்பில் இன்னுமொரு பரிமாணம்.
பெண் தன்மை மிக்க கேரக்டரில் மலையாள ஸ்டார் திலீப் சாந்துபொட்டு என்கிற படத்தில் மிக அம்சமாக நடித்து இருப்பார்.அவரின் குரல்வளமும் மேனரிசமும் அந்த படத்திற்கு அழகினை சேர்த்தது.அதில் படம் முழுவதும் பெண் தன்மை மிக்க கேரக்டரில் வாழ்ந்திருப்பார்.
                     
                                  
ஆனால் இந்த படத்தில் ஒரு சில சீன்களில் மட்டுமே தோன்றும் கமல் அவரையே மிஞ்சி இருப்பார்.அந்த ஒரு பாடல் போதும் கமலின் நடிப்பிற்கு...
கமல் எடுக்கும் ஆக்சன் விஸ்வரூபம் இரண்டு இடங்களில்...ஒன்று முதல் சண்டைக்காட்சி...அடுத்து ஹேர் கட் பண்ணி ஸ்டைலாக படியில் இறங்கும் காட்சி...தியேட்டரில் கைதட்டல் விசில் சத்தம் காதை பிளக்கிறது...ஆப்கன் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் டாகுமெண்ட்ரி போல இருந்தாலும் புதிதாய் காணும் ஆவலில் அதுவும் நன்றாகவே செல்கிறது.
படம் எதையுமே யோசிக்க வைக்க விடாமல் காட்சிகளில் ஒன்ற செய்கிறது.இந்த படத்திற்கு எதற்கு தடை விதித்தார்கள் என்று இன்னமும் புரியவில்லை.பல்வேறு உலக சினிமா பார்த்ததில்லை.திரைப்பட அறிவு என்பது கொஞ்சம் கூட இல்லை..ஆனால் ஒரு சாதாரண ரசிகனாக என்னை ஈர்த்து விட்டிருக்கிறது.(இத்தனைக்கும் நான் கமல் ரசிகன் இல்லை.தீவிர ரஜினி ரசிகன்) மேலும் இந்த பதிவுலகில் பல்வேறு ஜாம்பவான்கள்  விஸ்வரூபம் பத்தி அலசி ஆராய்ந்து விட்டிருக்கின்றனர்.

அவர்களின்  பதிவுகள் தங்களின் பார்வைக்கு...



மெட்ராஸ்பவன்

அட்ராசக்க

கோவை ஆவி

பிலாசபி பிரபாகரன்

 ஜாக்கி சேகர்

அகிலா

அப்புறம் முக்கியமா ஒண்ணு...
கோவையில் நடக்கிற இலக்கிய சந்திப்பு விழா 27 ம் நிகழ்வில் கோவை ஞானி தலைமையில் பல்வேறு எழுத்தாளர்களின் புத்தகங்கள் அறிமுகப்படுத்தப் பட்டு பல்துறை சார்ந்த இலக்கிய ஆர்வலர்களின் மேற்பார்வையில்  கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

உலக சினிமா பாகம் - 1 
அறிமுக உரை 
இயக்குனர் ராம் (கற்றது தமிழ் ) 

உலக சினிமா பாகம் -2
அறிமுக உரை
ஆனந்த் (கோணங்கள் ஃபிலிம் சொஸைடி)
பீர் முகமதுவின் இரண்டு நூல்கள் 
அறிமுகம்
கோவை ஞானி மற்றும் அறிவன்

ரா.முருகனின் நாவல்
அறிமுகம்
சுப்ரபாரதிமணியன்
கோவை பதிவர்களின் புத்தகங்கள்  

அகிலாவின்
 சின்ன சின்ன சிதறல்கள்  குறித்து
கவிஞர் யாழி

கோவை மு சரளாவின்
மெளனத்தின் இரைச்சல்கள் குறித்து
கவிஞர் ப.தியாகு
ஜீவாவின்
கோவை நேரம் குறித்து
பொன் - இளவேனில்


 மேற்கண்ட புத்தகங்களின் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் நடைபெறுகிறது. அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

இடம் : எஸ்பி நரசிம்மலு நாயுடு உயர்நிலைப்பள்ளி
மரக்கடை, கோவை
நாள் - 24.2.2013
நேரம் - 10.00 மணி முதல் 1.30 வரை

மற்றும் இன்னொரு நிகழ்ச்சி
தா இளங்கோவனின் ஆவணப்படம் ”மாதவிடாய்” சிறப்புரை மற்றும் திரையிடல் 

கோவை காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் அதே தினம் மாலை 2 மணி முதல் 4 மணிவரை நடைபெற உள்ளது.

விரிவான பதிவிற்கு இனியவை கூறல்  பார்க்க

அன்புடன் வரவேற்கிறோம்...


நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Saturday, September 15, 2012

பாகனும் சுந்தரபாண்டியனும்

பாகன் : 
இந்த படம் புதன் அன்னிக்கு  நம்ம  ப்ரூக் ஃபீல்ட்ஸ் ல பார்த்தேன்.அங்க படம் பார்க்க போகிறமோ இல்லையோ...ஏகப்பட்ட அம்மணிகளை படம் பார்த்துவிட்டு வரலாம்.இருக்கிற எல்லா ஃபுளோர்ல யும் நல்லா சுத்தி பார்த்துட்டு மனசு வலிக்க தியேட்டர்க்குள் புகுந்தேன். சைக்கிள் தன்னோட பார்வையில் கதை சொல்ற மாதிரி படம் ஆரம்பிக்குது.படம் நம்மை ஒன்ற செய்கிறது ஒரு சில காட்சிகளில் மட்டும்.பரோட்டா சூரியின் காமெடி அங்கங்க கிச்சு கிச்சு மூட்டுது.அப்புறம் நமக்கு ரொம்ப பிடித்த பாட்டு ”இப்படி ஓர் கண்களை கண்டதில்லை” பார்த்தவுடன் மனம் கொஞ்சம் லேசாச்சு...
ஸ்ரீகாந்த் ரொம்ப அழகா இருக்கார்.காமெடி பரவாயில்லை.பார்க்கலாம் ஒருமுறை..

படம் சுமார்தான்.கொஞ்சம் காமெடிக்காக பார்க்கலாம்.

சுந்தரபாண்டியன் :
நேத்து இரவு காட்சி எங்க ஊர் ஏரியாவுல இருக்கிற கல்பனா தியேட்டர்க்கு போனேன்.இந்த தியேட்டர்ல கடந்த 14 வருசமா பார்த்துகிட்டு இருக்கேன்.சிட்டிகுள்ளே போக கஷ்டபட்டா இந்த தியேட்டருக்கு  போவோம்.நேற்று அப்படிதான் போக வேண்டியதாக போச்சு.முதல் நாள் ரிலீஸ் வேற.உள்ளே போனால் ஒரே அலப்பறை...சில்லு வண்டுகளோட...சசிகுமார் வந்தா விசிலு...பேசினா விசிலு...நட்பை பத்தி பேசினா விசிலு...இப்படி படத்தை பார்க்க விடாம பண்ணிட்டாங்க பாவிங்க..படம் ரொம்ப நல்லா இருக்கு.சூரி காமெடி ரொம்ப நல்லா இருக்கு.இடைவேளை வரை மிக சுவாரசியமாக செல்லுகிறது.அதற்கு அப்புறம் எதிர்பாராத திருப்பங்கள் என நன்றாக செல்கிறது.
சசிகுமார் நம்ம தலைவரை போல ஸ்டைல பண்றாரு.இருந்தாலும் ரசிக்க முடிகிறது.
கதாநாயகி ரொம்ப அழகா மாநிறமா இருக்காங்க. பார்த்த முகம் போல மனதுக்குள் பசை போட்டு ஒட்டிகிறாங்க.
சூரியின் காமெடி செம...நிறைய கைதட்டல் .. தியேட்டரில்...
படம் நன்றாக இருக்கிறது..

மறுபடியும் பார்க்க தூண்டியிருக்கிறது.கண்டிப்பா ப்ரூக் ஃபீல்ட்ஸ் தான் போகனும்.அப்போதான் மனசும் நிறையும்.கண்ணுக்கும் விருந்தாகும்.

இந்த படங்களை இவ்ளோ சீக்கிரம் பார்க்க தோன்றியதுக்கு ஒரு காரணம் ..சூரி...பயபுள்ள நம்ம தோஸ்த் தா போயிட்டான் (ர்).பயபுள்ள நல்லா நடிச்சு இருக்கு..வாழ்த்துக்கள் மச்சி...

இந்த இரண்டு படங்களை பத்தி சினிமா விமர்சகர் நம்ம சித்தப்பு பார்வையில்....
http://www.adrasaka.com/2012/09/blog-post_9799.html
http://www.adrasaka.com/2012/09/blog-post_8.html

நேசங்களுடன்
ஜீவானந்தம்.

இன்னும் கொஞ்சம்...

Thursday, March 29, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி - OKOK


ஒரு கல் ஒரு கண்ணாடி...

இந்த  படத்துக்கு கதை திரைக்கதை வசனம் இயக்கம் எதுவும் தேவையில்லை...

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்..



உதயநிதி ஸ்டாலின் ......இன்னிக்கு ஹன்சிகா...நாளைக்கு இன்னும் புத்தம் புதுசா...இன்னும் இளசா....அனேகமா...அடுத்த பவர் ஸ்டார்  மாதிரி வருவார்னு நினைக்கறேன்.

ம்கூம்...

என்ன பண்றது...காசு இருந்தா காக்கா கூட அழகாயிடும்... ( எல்லாம் ஒரு வயித்தெரிச்சல் தான்....)

நேசங்களுடன்
ஜீவானந்தம் 
இன்னும் கொஞ்சம்...

Wednesday, March 21, 2012

கோவை - தியேட்டர்கள் (Theatres of kovai)

கோவையில் உள்ள தியேட்டர்கள் பத்தின ஒரு பார்வை

கோவை ஒரு தொழில் நகரம் என்பதினால் என்னவோ இங்கு பொழுது போக்க கூடிய அம்சங்கள் எதுவும் அதிகம் இல்லை.பார்க் அப்படின்னு சொன்னா வ ஊசி பார்க், காந்தி பார்க் இதுதான்... அப்புறம் கோவில் ன்னு எடுத்துகிட்டா மருதமலை கோவில் , அனுவாவி சுப்பிரமணியர் கோவில், ஈச்சனாரி கோவில், பேரூர் கோவில், போன்ற இடங்கள் தான் இருக்கிறது.(நம்ம ஊர்  இளசு களுக்கு என்ன பக்தியா வேணும் ...கூட்டிட்டு போகிற தெய்வத்த கும்பிடணுமா... இல்ல அங்க இருக்கிற தெய்வத்த கும்பிடணுமா ....) அப்புறம் ரெண்டு குளம் இருக்கு போட்டிங் போற மாதிரி...சிங்காநல்லூர், அப்புறம் சூலூர்...சிங்கா நல்லூர்ல போட்டிங் நிறுத்தி யாச்சு. ஆனாலும் அங்க ஏதாவது ரெண்டு இளசு கள் கடலை போட்டுட்டு தான்  இருக்கும்... .சூலூர்ல மட்டும் சனி ஞாயிறு நடக்குது. ரொம்ப தூரம் போகணும்னா....சிறுவாணி, மங்கி பால்ஸ், ஆழியாறு, பொள்ளாச்சி, திருமூர்த்தி அணை, உடுமலை, ஆனைகட்டி இப்படி...இந்த பக்கம் போகணும்னா....கல்லாறு, குன்னூர் , ஊட்டி இப்படி....இங்கெல்லாம் போனால் சீக்கிரம் வீடோ ஹாஸ்டலோ திரும்ப முடியாது ...கிடைக்கிற நேரத்துல இருக்கிறத என்ஜாய் பண்ணனும் அப்படிங்கிறதால நம்ம ஊர்  இளசுகளுக்கு தியேட்டர் பக்கம் தான் ஏதோ கொஞ்சம் ஆறுதல் கிடைக்குது.

அதனால் கோவையில் இருக்கிற தியேட்டர்கள் பத்தின ஒரு பார்வை..

கே ஜி காம்ப்ளக்ஸ்
இந்த தியேட்டர் கோவை நீதிமன்றம் அருகில் இருக்கிறது.மொத்தம் 4 தியேட்டர் ராகம் தானம் பல்லவி, அனுபல்லவி என இருக்கு. ரொம்ப பேமஸ் ஆன தியேட்டர் இப்போ ரிலையன்ஸ் க்ரூப் பிக் சினிமாஸ் தத்து எடுத்து இருக்கிறது.இதன் அருகிலேயே கே ஜி மருத்துவமனை இருக்கிறது (படம் ரொம்ப மொக்கையா இருந்து யாருக்காவது ஹார்ட் அட்டாக் வந்துச்சுன்னா இங்கயே அட்மிட் பண்ணிகிடலாம் ..)


கற்பகம் காம்ப்ளக்ஸ்

காந்திபுரம் 100 அடி ரோட்டில் இருக்கிறது.இங்கு 3 தியேட்டர்கள் இருக்கு.கங்கா, யமுனா, காவேரி என இருக்கிறது.இங்க கேண்டீன் ல கொஞ்சம் விலை அதிகம்.
 
செந்தில் குமரன் காம்ப்ளக்ஸ் 

காந்திபுரம் பஸ்ஸ்டாண்ட் அருகில் இது இருக்கிறது.செந்தில், குமரன் என இரண்டு தியேட்டர் இருக்கிறது.கோவையில் ISO வாங்கின முதல் தியேட்டர். 

கவிதா தியேட்டர்
இதுவும் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் இருக்கிறது.இதுக்கு பக்கத்திலேயே நம்ம டாஸ்மாக் இருக்கு.

பாபா காம்ப்ளக்ஸ்
பூ மார்க்கெட் அருகில் இந்த தியேட்டர் இருக்கிறது.அர்ச்சனா தர்சனா,என இரண்டு தியேட்டர்கள். 


VR காம்ப்ளக்ஸ்
வடகோவை மேம்பாலம் அருகே இந்த தியேட்டர் இருக்கிறது.சென்ட்ரல் , கனக தாரா என இரண்டு தியேட்டர்கள் இருக்கிறது.ரொம்ப நாள் ஓடாம இருந்து இப்போ புதுபிக்கப்பட்டு இருக்கிறது.

மாருதி தியேட்டர்
இந்த தியேட்டரும் வட கோவையில் தான் இருக்கிறது.அதிகமான ஆங்கில படங்கள் மட்டுமே வெளி யாகும்.இப்போ இந்த தியேட்டர் ரொம்ப மோசமான நிலையில் இருக்கு.

சண்முகா தியேட்டர்
இந்த தியேட்டரும் பூ மார்க்கெட் அருகில் தான் இருக்கிறது.அதிகமான மலையாள, ஆங்கில பிட்டு படங்கள் மட்டுமே வெளி யாகும்.என்ன அதிசயம் ன்னு தெரியல..இப்போ எம் ஜி யார் படம் போட்டு இருக்காங்க

ஜி பி தியேட்டர்
கோவை டு சத்தி ரோட்டில் ஆம்னி பேருந்து நிலையம் அருகில் இந்த தியேட்டர் இருக்கிறது. பிரீதம் , கீதம் என இரண்டு தியேட்டர் இருக்கிறது அதிகமான ஆங்கில படங்கள் மட்டுமே தமிழ் டப்பிங் கில் வெளி யாகும்.அப்பப்ப பிட்டு படம் வரும்

கே என் எம் காம்ப்ளக்ஸ்
கோவை ரயில் நிலையம் அருகில் இந்த தியேட்டர் இருக்கிறது.சாந்தி சாரதா என இரண்டு தியேட்டர் இருக்கிறது. இதன் அருகில் கலெக்டர் ஆபீஸ் இருக்கிறது
.
கர்னாடிக் தியேட்டர்
கோவை கோனியம்மன் கோவில் அருகில் இந்த தியேட்டர் இருக்கிறது.அதிகம் ஹிந்தி படங்கள் மட்டுமே வெளி யாகும்.

ராயல் தியேட்டர்
இதுவும் ரயில் நிலையம் அருகில் தான் இருக்கிறது.மலையாள புது ரிலீஸ் படங்கள் அதிகம் வெளியாகும்.

நாஸ் தியேட்டர்
டவுன் ஹாலிலிருந்து உக்கடம் செல்லும் வழியில் இது இருக்கிறது.ரொம்ப பழைய படங்கள் செகண்ட் ரிலீஸ் படங்கள் வெளியாகும்.

டிலைட் தியேட்டர்
டவுன் ஹால் அருகில் இருக்கிற வெரைட்டி ஹால் ரோட்டில் இது இருக்கிறது.தமிழ் திரைப்பட முன்னோடி வின்சென்ட் அவர்களின் தியேட்டர் இது.இன்னும் இரு ஆண்டுகளில் நூற்றாண்டு விழா கொண்டாடப் போகும் தியேட்டர் ஆக இருக்கிறது.அதிகம் எம்ஜியார் சிவாஜி பழைய படங்கள் மட்டுமே வெளியாகும்.

 
சமீபத்தில் ஆரம்பிச்ச ஷாப்பிங் மால் பரூக் பீல்ட்ஸ் ல மொத்தம் 6 அரங்கு கள் இருக்கு.இதன் வரவு கோவைக்கு புதிய அடையாளத்தை கொடுத்திருக்கு எனலாம். (இளசுகளுக்கு ஏற்ற இடம்....)


மஹாராஜா மல்டிபிலக்ஸ்
நீலம்பூர் அருகில் மஹாராஜா தீம் பார்க் அருகிலே இது அமைந்து இருக்கு. இங்கேயும் இரண்டு அரங்குகள் இருக்கிறது.

இப்போ பீளமேடு அருகிலே ஒரு ஷாப்பிங் கட்டி கொண்டு இருக்கிறார்கள்.அங்கேயும் அரங்குகள் வர இருக்கிறது.


நகரத்திற்கு வெளியே கவுண்டம்பாளையம், துடியலூர், வடவள்ளி, பீளமேடு, சிங்காநல்லூர், கணபதி, பேரூர், வேலாண்டிபாளையம் இப்படி ஊருக்கு வெளியே  நிறைய தியேட்டர்கள் இருக்கின்றன..

வருத்தம்: கடந்த சில வருடங்களில் நிறைய தியேட்டர்கள் மூடப் பட்டு விட்டன (கோவை மட்டுமல்ல தமிழகம் முழுவதும்) ...இது இன்னும் தொடரும் என்பது தான் உண்மை...

கிசுகிசு : எப்படியோ இப்போதைக்கு இருக்கிற போட்டோ வச்சி ஒரு பதிவை தேத்திட்டேன்..இனி மத்த தியேட்டர் களை போட்டோ எடுத்து அப்லோட் பண்ணனும்....

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Friday, December 16, 2011

மம்பட்டியான் - சிபியின் ஞாபகம்

இன்னிக்கு மம்பட்டியான் படம் பார்த்தேன்.ஏற்கனவே பார்த்த படம் தான் என்றாலும் இந்த படம் ஒளிப்பதிவில் மிகவும் நன்றாக இருக்கிறது.சின்ன பொண்ணு சேலை பாடலில் மீரா ஜாஸ்மின் அவ்ளோ அழகு.கேமரா மேன் க்கு ஒரு சல்யூட்.அப்புறம் பிரசாந்த் முறுக்கி கொண்டு நடித்து இருக்கிறார்.படத்தில் வசனம் அதிகம் இல்லாததால் நன்றாக இருக்கிறது.வடிவேல் உடன் அலப்பறை செய்யும் ஒரு சிறுவனின் காமெடி அருமை.சில்க் பதிலாக முமைத் கான் .பார்க்க சகிக்காத முகம்...ஒட்ட வில்லை படத்துக்கு.

படம் பார்க்கும் போது சிபியின் ஞாபகம் வந்தது.அவர் இயக்குனரிடம் என்ன என்ன கேள்விகள் கேட்பார் என்று ..
1 ) திருவிழாவில் ஆடும் முமைத் கானுக்கு காலில் தங்க கொலுசு எப்படி
2 ) மீரா ஜாஸ்மின் வீட்டில்  பிரசாந் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது அடுப்பில் பாத்திரத்துடன்  இன்னமும் எரிந்து கொண்டு இருக்கும் .அது யாருக்காக சமைக்கிறார்..?
3 ) பிரசாந்த் சாட்டை அடி  50 வாங்கும் போது அவரின் உடம்பில் காயம்பட்ட வரிகள் 5  அல்லது  6 மட்டுமே இருந்தது ஏன்  ?
4 ) மீரா ஜாஸ்மின் தண்ணீர் பானையை இடுப்பில் வைக்காமல் கையில் பிடித்து கொண்டு இடுப்பில் வைத்தது போல இருக்கிறார் .ஆனால் அவர் கூட வரும் பெண்கள் சரியாய் வைத்து இருக்கின்றனர்..
இது மாதிரி நிறைய சொல்லி கொண்டு போகலாம் ...








இந்த படம் பரூக் பீல்ட்ஸ் தியேட்டரில் இன்னிக்கு ரிலீஸ்.இந்த தியேட்டரில் படம் பார்த்தே ஆக வேண்டும் என்பதினால் சென்றேன்.இங்கு மொத்தம் 6 ஸ்க்ரீன் இருக்கிறது.சத்யம் தியேட்டர் இதனை நடத்துவதால் ரொம்ப ரிச் ஆக இருக்கிறது.எல்லாம் டிஜிட்டல் மயம்.கோவைக்கு இது புதுசு.நான் பார்த்த ஸ்க்ரீனில் மொத்தம் 190 சீட்கள் என நினைக்கிறேன்.ஒளிப்பதிவு துல்லியம்.

ப்ரூக் பீல்ட்ஸ் பத்தி அடுத்த பதிவு போடறேன்.
இன்னும் கொஞ்சம்...

Thursday, December 8, 2011

ஒஸ்தி - போராளி

ஒஸ்தி  இன்னிக்கு படம் ரிலீஸ் ஆவதினால் போலாம்னு நினைச்சு தியேட்டருக்கு போனால் இன்னிக்கு காட்சி ரத்து அப்படின்னு போர்டு போட்டிருக்கு.சிம்பு ரசிகர்கள் கூட்டம் அள்ளுது.ஆனால் அங்க ஒரே களேபரம்.ரசிகர்கள் உள்ளே வந்துவிட கூடாது என்பதற்காக ஆளுங்க தடி கொண்டு மிரட்டி கொண்டு இருந்தனர்...எதுனால ரத்து அப்படின்னு தெரியல....ஒருவேளை பொட்டி வரலையோ ...
        வந்த வேலை வீணாய் போய்விட கூடாது என்பதற்காக போராளி போனேன்.படம் நன்றாக இருக்கிறது.நல்ல காமெடி ஆக படம் போகிறது.ஒரு சில பதிவர்கள் சொல்லும் விமர்சனம் கண்டு போக வேணாம்.அவங்க தான் படத்தோட தலைவிதியை  நிர்ணயிக்கிறதா நினைச்சுகிறாங்க.ஒவ்வொருத்தருக்கும் ஒரு ரசனை இருக்கும்.உங்க ரசனைய நீங்க தான் கண்டு பிடிக்கணும்.
             அப்புறம் இங்க தியேட்டரில் டிக்கெட் விலை அதிகம்.அப்புறம் காண்டீனில் எல்லாம் விலை அதிகம்.ஒரு முட்டை பப்ஸ் - 25 ரூபாய், பாப்கார்ன்  - 20 ரூபாய், கோன் ஐஸ் - 15  ரூபாய்...இப்படி அநியாத்திற்கு விலை விற்றால் எவன் தியேட்டருக்கு வருவான்.தள்ளிட்டு வர்றவனும், கடலை போடறவனும் மட்டும் தான் வருவான்.(சத்தியமா நான் யாரையும் தள்ளிட்டு போகல , கடலை போடவும் போகல ..)



இங்க சாந்தி, காவேரி தியேட்டரில் படம் ஓடுகிறது.



இன்னும் கொஞ்சம்...

Monday, October 31, 2011

சூரி.....வெண்ணிலா கபடி குழு

சூரி...
தற்போது வெள்ளித்திரையில் பவனி வரும் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்.காமெடியில் தற்போது பிரபலம் அடைந்து வரும் சூரி அவர்களை பற்றிய ஒரு சிறு குறிப்பு.



தமிழ் திரை உலகில் காமெடியனாக  முன்னேறி கொண்டு இருக்கும் சூரி மதுரை மாவட்டத்தில்  ராஜாக்கூர் என்னும் ஒரு சிற்றூரில் பிறந்து இன்று சென்னையில் மையம் கொண்டுள்ள காமெடி புயல்.இவர் ஆரம்பத்தில் திரையுலகில் நுழைய பட்ட கஷ்டங்கள் ஏராளம்.பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக உள்ளே நுழைந்து திரை உலகில் காலடி வைத்தார்.இவரின் முதல் படம் கார்த்திக் நடித்த கண்ணன் வருவான்.பத்தோடு பதினொன்றாக நடித்த படம்.பின்னர் ஜி.இந்த படத்திலும் அப்படியே.அப்புறம் காதல் படத்தில் முதன் முதல் ஆக  டயலாக் உடன் பேசி நடித்தார்.அதற்கு அப்புறம் தீபாவளி என்ற படத்தில் கொஞ்சம் நிறையவே பேசி நடித்தார்.அதன் பின்னர் நல்ல வாய்ப்புக்கு எதிர்பார்த்த போது தான் சுசீந்திரன் என்ற அற்புத விளக்கு அவரை ஏற்றி வைத்தது.வெண்ணிலா கபடி குழுவில் இடம் பெற்ற சூரி நகைச்சுவை கலந்த குண சித்திர வேடத்தில் படம் முழுவதும் வந்து கலக்கி இருப்பார்.



பரோட்டா சாப்பிடும் காட்சியில் தான் அவரது முகம் பரிட்சியம் ஆனது.அதன் பின்னர் தான் அவர் தமிழகம் முழுவதும் தெரிய ஆரம்பித்தார்.அப்புறம் நாய்க்குட்டி என்ற ஒரு படத்தில் இரண்டாவது கதா நாயகனாக  நடித்து இருந்தார்.படம் பப்படம் ஆகவே மறுபடியும் முயற்சி.அப்புறம் களவாணி படம் கை கொடுத்தது .கஞ்சா கருப்பு வுடன் இவர் அடித்த லூட்டி மிகவும் ரசிக்க தகுந்தவை..


மீண்டும் அற்புத விளக்கு சுசீந்திரன் நான் மகான் அல்ல படத்தில் கார்த்திக்கின் நண்பன் வேடத்தில் நடிக்க வைக்க மீண்டும் தெரிய ஆரம்பித்தார்.


அப்புறம் குள்ள நரிக்கூட்டம், போடி நாயக்கனூர் கணேசன், அழகர் சாமியின் குதிரை , பிள்ளையார் தெரு கடைசி வீடு என நிறைய படங்களில் நடித்து இருந்தாலும்





இளைய தளபதி விஜய் உடன் நடித்த வேலாயுதம் படம் மிக வெற்றியை கொடுக்க இப்போது நிறைய படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார்.


பாராட்டுகளும் விமர்சனங்களும் நிறைய குவிந்து இருப்பதாக சொல்லி இருக்கிறார்.அதுவும் தளபதியும் இயக்குனர் ராஜாவும்  பாராட்டியதில் மனுஷர் ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறார்.விஜய் உடன் நடித்த சந்தோஷத்தில் இன்னும் இருந்து கொண்டு இருக்கிறார்.(ட்ரெயின் காமடியில் ரொம்ப கலக்கி இருப்பார்.கண்ணில் நீர் வர கூடிய காமெடி அது.)அப்புறம் தற்போது சசி குமாரின் போராளி படம் முடிவடைந்து திரைக்கு வர காத்திருக்கிறது.அந்த படம் இன்னும் தன்னை மேலே கொண்டு போகும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் .இவர் இன்னும் மென் மேலும் பல வெற்றிகளை பெற நாமும் வாழ்த்துவோம்......

கிசுகிசு  : சூரி எனது நண்பர் என்கிற முறையில் தனிப்பட்ட பதிவு ....
நேசங்களுடன்
ஜீவானந்தம் 


இன்னும் கொஞ்சம்...