Friday, March 22, 2013

கோவையின் பெருமை - வெள்ளிங்கிரி மலை, தென் கயிலாயம், பூண்டி, கோவை. - 1

வெள்ளிங்கிரி மலை, தென் கயிலாயம், பூண்டி, கோவை.
ரொம்ப நாளா இந்த மலைக்கு போகனும்னு நினைச்சிட்டு இருந்தேன்.எதேச்சையா நம்ம நண்பர் தீடீர்னு அழைப்பு விடவும், ராவோடு ராவா கிளம்பினோம்.....
கோவையில் இருந்து பூண்டி 35 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.காருண்யா செல்லும் வழியில் வலது புறம் இருட்டுப்பள்ளம் என்கிற ஊருக்கு ரோடு பிரிகிறது.செம்மேடு , ஈஷா யோகமையம் தாண்டி பூண்டி மலை அடிவாரம் வரவேற்கிறது...
அந்த இருட்டு வேளையில் மலை ஏறுவதற்கு ஆயத்தமானோம்..டார்ச் லைட், தேவையான உணவு, கொறிப்பதற்கு தின்பண்டங்கள், குடிதண்ணீர், மேலே குளிரினை தடுக்க போர்வைகள் என அனைத்தும்.....மேலும் அதிக எடை இல்லாத படியும் பார்த்துக் கொண்டோம்..கிட்டத்தட்ட ஏழு மலை பயணிக்கவேண்டிருப்பதால் குறைவான பொருட்களையே எடுத்துக் கொண்டோம்...
மலையில் ஊன்றிச்செல்லவும் எதிரே எதாவது விலங்கினங்கள் வந்தால் அவைகளிடமிருந்து தப்பிப்பதற்கும் ஏதுவாக தடி தேவைப்படுவதால் அடிவாரத்தில் நல்ல தடியினை வாங்கிக்கொண்டோம்...
இரவு 9 .45 க்கு அடிவாரத்தில் இருக்கிற கோவிலில் சாமியைக் கும்பிட்டுவிட்டு படியேற ஆரம்பித்தோம்...
முதல் மலையைக் கடக்கவே கிட்டத்தட்ட இரண்டுமணி நேரங்கள் ஆகிவிட்டிருந்தது.... முதல் முறையாய் காட்டுப்பகுதியில் பயணம்...இருட்டுவேளை...சுற்றிலும் காடு..எதுவும் தெரியவில்லை...இரவு பூச்சிகளின் ரீங்காரம்....செங்குத்தாக ஏறும் படிகள்...பாறைகள்..என கவனமாக அடி எடுத்து வைத்தோம்....
குளிர்ந்து இருந்த எங்களது உடம்பு மேலேறுவதால் வியர்க்க ஆரம்பித்தது.அவ்வப்போது ஈரம் உலர்ந்த நாக்கினை தண்ணீர் கொண்டு நனைக்க ஆரம்பித்தோம்....கொண்டு வந்த தண்ணீர் குறைய ஆரம்பித்தது...
தண்ணீர் குறைவதைப் பார்த்த நண்பர் இன்னும் பல மலைகள் கடக்க இருப்பதால் தண்ணீர் அதிகம் சாப்பிட வேண்டாம் என்றும் மேலே தண்ணீர் இருக்காது என்றும் , மூன்றாவது மலையில் தான் தண்ணீர் கிடைக்கும் என்று சொல்லவும்....இன்னும் வறண்டு போனது உள்ளம்....இனி நாவை மட்டுமே நனைக்கவேண்டும் என்று உறுதி பூண்டு பயணத்தினை தொடர்ந்தோம்... வியர்க்க ஆரம்பித்ததால்.....உடைகளை களைந்து வெற்றுடம்புடன் பயணித்தோம்... எங்களைப்போலவே இன்னும் சில பேர் தங்கள் பயணத்தை தொடங்கிவிட்டிருந்தனர்...

எப்பொழுது சமதளத்தினை அடைவோம் என்கிற ஏக்கம் முதல் முறையாய் துளிர்விட்டது...சமதளம் எங்குமே இல்லை....நடந்து கொண்டு இருக்கிற பாறைகளில் அவ்வ்ப்பொழுது இளைப்பாறிக்கொண்டோம்....மேலே ஏற ஏற அடிவாரத்தில் இருக்கிற வெளிச்சப்புள்ளிகள் குறைந்து கொண்டே வந்தன.முதல் மலை முடிவில் மெல்லிதாய் ஒரு வெளிச்சம் தோன்ற பார்த்தால்......அங்கே ஒரு கடை இருக்கிறது..அந்த காட்டுப்பகுதியிலும் பக்தர்களின் வசதிக்காக கடையினை ஏற்படுத்தி இருக்கின்றனர்....ஒவ்வொரு மலை முடிவிலும் எதாவது ஒரு கடை இருக்கிறது.....கோலி சோடா கடையில் சோடா வாங்கி நிரப்பிக்கொண்டோம்...உப்பும் எலுமிச்சையும் கலந்த பானமாய்...அந்த நேரத்தில் தேவாமிர்தமாய் இருந்தது...என்ன விலை கொஞ்சம் அதிகம்...20 ரூபாய்...கொஞ்ச நேரம் அங்கு நின்று ஆசுவாசுப்படுத்திக்கொண்டோம்...
(புகைப்படங்கள் அனைத்தும் பகலில் எடுத்தவை...புனிதப்பயணம் முடிந்து திரும்பி வருகையில் எடுத்தவை..)

பயணம் தொடரும்....

நேசங்களுடன் 
ஜீவானந்தம்

21 comments:

  1. நல்ல படங்கள்....

    புனிதப்பயணம் தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மாப்ளே, நீ கொண்டு வந்த பெட்ரொமாக்ஸ் லைட் பத்தி ஒண்ணும் சொல்லலியே??

    ReplyDelete
    Replies
    1. அந்த லைட் எல்இடி பல்பு இருக்கு.சைனா மேக், பேட்டரி பேக்கப், 6 மணி நேரம் வருது.எடை குறைவு.. ஹி ஹி ஹி ஹி
      இது போதுமா....
      மச்சி...அந்த லைட் இல்லேனா மேலே ஏறி இருக்க முடியாது....

      Delete
  3. புகைப்படங்கள் அருமை ஜீவா...

    ReplyDelete
  4. வித்தியாசமான பயணங்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. ஐஸ் வெள்ளீங்கிரி மலைக்கு..இதுவரை செல்லவில்லை..அடுத்தவருடமாவது சென்ற்வருவதாக இருக்கிறேன் !

    ReplyDelete
    Replies
    1. ஐஸ் லாம் இல்ல...ஆனா செம குளிரு....சென்றுவாருங்கள்

      Delete
  6. என்ன திடீர்ன்னு ஆன்மீக பயணம்?! திருந்திட்டியலோ!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி...யாரு சொன்னா....மலையில் இருந்து இறங்கியவுடன் போனதே அங்கதான்...

      Delete
  7. கோவை உங்களால் பெருமையடைகிறதா...கோவையால் நீங்கள் பெருமையடைகிறீர்களா... நிஜமான மண்ணின் மைந்தன் நீங்கதான் பாஸ்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...பொங்க வைக்கிறீங்க.. ஹி ஹி ஹி

      Delete
  8. நல்ல பயணம். தொடரட்டும்.

    ReplyDelete
  9. நான் இன்று தான் மலையிலிருந்து இறங்கினேன்

    ReplyDelete
    Replies
    1. ஓ...அப்படியா...இறைவன் அருள் பெற்று விட்டீர்...உங்களின் அனுபவத்தினை எதிர்பார்க்கிறேன்

      Delete
  10. வெள்ளியங்கிரி இதுதான் முதல் முறையா நண்பரே? அற்புதமான அனுபவம்.இன்னும் எம் பதிவு http://www.mayaththirai.com/2012/03/blog-post_24.html தொடர்ச்சி பதிவிட முடியாமலே தள்ளி போகிறது.விரைவில் .....

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....