கோவை மெஸ் - நியூ கமாலியா ஹோட்டல், விருதுநகர்
நெல்லையில் இருந்து ரிட்டர்ன் வரும்போது விருதுநகர் ஊர் வந்தவுடன் புரோட்டா ஞாபகம்..அட....இங்க புரோட்டா பேமஸ் ஆச்சே ...சரி ஒரு பதிவை சாப்பிடலாம்னு சாரி தேத்தலாம்னு பைபாஸ் ரோட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் பயணித்து விருது நகர் பஸ் ஸ்டாண்ட் வந்தோம்.உள்ளே ஊருக்குள் நுழையும் போதே சின்ன சின்ன ஹோட்டல்களில் சூடாய் அந்த மதிய வேளையிலும் கல்லிலே எண்ணையில் பொரித்து ரெடியாகிக் கொண்டிருந்தது.
அங்கே இருந்த ஆட்டோ டிரைவரிடம் எந்த ஹோட்டல் நன்றாக இருக்கும் என்று நம்ம சிங்கத்தின் உள்ளே இருந்து கேட்கவும் அவர்கள் நம் வண்டியை பார்த்துவிட்டு கொஞ்சம் பெரிய ஹோட்டலாக சொல்லிவிட்டனர். விருதுநகரிலேயே ஏசி போட்ட ஹோட்டல் இதுவாகத்தான் இருக்கும் போல...வண்டியை கொஞ்ச தூரம் முன்பே நிறுத்திவிட்டு அந்த அடிக்கிற வெய்யிலில் நடக்க கொஞ்சம் சோர்ந்து தான் போனோம்...அம்புட்டு வெயில்...இருக்கிற கொஞ்ச நஞ்ச பூஸ்டும் காணாமல் போகவும் ஹோட்டலை அடையவும் சரியாய் இருந்தது.
ஹோட்டல் .நியூ கமாலியா போர்டில் நிறைய எழுத்துக்கள் காணோம்.. ஹோட்டல் முழுக்க முழுக்க வெறும் போர்டுகளால் நிறைந்து இருக்கிறது.உள்ளே நுழைய மக்கள் கொஞ்சம் நிறைந்து இருந்தனர்.நம்மைப்பார்த்தவுடன் மேலே ஏசி இருக்கிறது என்று அனுப்பிவைத்தனர்.
கொஞ்சம் பேர் மட்டுமே ரசித்து ருசித்து கொண்டு இருந்தனர்.எப்பவும் போல வாஸ்து படி அமர்ந்து விட்டு நிமிர்கையில் கையில் ஆர்டர் எடுக்க தயாராய் சர்வர்...என்ன ஸ்பெசல் என்று கேட்க புறா வறுவல் இருக்கிறது என்று சொல்லவும் புரோட்டாவை விட்டு விட்டு புறாவை பிடிக்க சொன்னோம்.
புறாவுக்கு இணையாய் கோழி இருக்கட்டுமே என்று பிரியாணி சொன்னோம்.
அப்படியே ஒரு ஆட்டு குடல் ஒன்றும் சொல்ல பறந்தோடி சென்றார் புறாவினை பிடிக்க...
கொஞ்ச நேரத்தில் தெம்பாய் இருக்க வேண்டும் என்பதற்காகவே சூப் வந்தது. அதை குடித்து முடிப்பதற்குள் பிரியாணி வர...கோழி வேட்டையில் இறங்கினோம்.
பாசுமதி அரிசி தான்..கொஞ்சம் சுமார்தான்.அரிசி உதிரியாகவே இல்லை.கோழி அப்படியே பாதி பீஸ் ...நல்ல பொல பொல வென்று நன்றாக வெந்து இருந்தது.ஆனால் கொஞ்சம் கூட கோழியின் உடம்பில் மசாலா நிறம் இல்லை..ஆனால் சுவையாய் இருந்தது.
அடுத்து புறா நல்ல மணத்துடன் நம்மை நோக்கி தூது செல்ல வருவது போல குழம்பு பதத்தில் வந்தது.முழு புறாவாக நன்கு வேக வைக்கப்பட்டு நன்றாக இருந்தது.ரொம்ப சின்ன புறா போல...சைஸ் சிறிது தான்.சுவை நன்றாக இருக்கிறது.
அடுத்து வந்த மட்டன் குடல் நன்றாகவே இல்லை.குடல் குழம்பாய் வந்தது. பிரை செய்து கொடுங்கள் என்று சொல்லவும், குழம்பை வடிகட்டி விட்டு வெங்காயம் போட்டு ஃபிரை செய்து கொண்டு தந்தனர்.சுவைத்து பார்க்கையில் நான் சமைக்கும் அளவிற்கு கூட இந்த குடல் குழம்பு இல்லை.அவ்ளோ மோசம்.மணம், சுவை, திடம் என்று திரி ரோசஸ் போல எதுவுமே இல்லை...
பில் வந்தது...விலை மிக அதிகம்.அந்த ஊருக்கு அதிக விலை.நல்ல வேளை..ஏசிக்கு என்று தனியாக பில் போடவில்லை.அந்தப்பக்கம் போனால் கண்டிப்பாக புரோட்டா இருக்கா என்று கேட்டு விட்டு அந்த ஹோட்டலுக்கு செல்லுங்கள்...
விருது நகர் வந்த நோக்கமே புரோட்டா சாப்பிடத்தான்..ஆனால் இந்த ஹோட்டலில் வந்து கேட்கவும் புரோட்டா மதியம் இல்லை என்று கை விரித்து விட்டனர்.ஆனால் சாயந்திரம் கிடைக்கும் என்று சொல்லிவிட்டனர்.ஒருவேளை புரோட்டா சாப்பிட்டால் பில் குறைவாக வரும் என்று தவிர்த்து விட்டனரா என்று தெரியவில்லை.வெளியூரில் இருந்து வரும் என்னைப்போன்ற சாப்பாட்டு ரசிகர்களுக்காவது வைத்து இருக்கலாம்.
இந்த ஹோட்டல் அருகிலேயே இரண்டு கடைகள் இருக்கின்றன.சுட சுட தயாராகிகொண்டிருந்தது.நாம் தான் ஏமாந்து விட்டோம் போல...
சரி..விருதுநகர் எண்ணைய் புரோட்டா தான் கிடைக்கல...நம்ம சாதா புரோட்டாவது நம்ம ரசிகர்களுக்கு காட்டலாம் என்று ஒரு கடையில் எடுத்த போட்டோ..
நேசங்களுடன்
ஜீவானந்தம்
சகோ கோவை நேரம்,
ReplyDeleteவணக்கம். பதிவுலகில் பலர் உணவகங்கள் பற்றி எழுதுவதைப் படிப்பது,வித்தியாசமான சுவையான உணவு வைஅக்கள் பற்றி அறிய வசதியாக உள்ளது.
இந்த பதிவில் ஒரு குறிப்பிட்ட உண்வகத்டை பெயருடன், புகைப்படத்துடன் விமர்சிப்பது எனக்கு த்வறாக படுகிறது சகோ மன்னிக்கவும்.
ஒருவேளை நீங்கள் சாப்பிட்ட அன்று மட்டுமே, கொஞ்சம் சுவை குறைந்து இருக்கலாம். ஆகவே நிறைகளை வெளியிலும்,குறைகளை எங்களிடமும் சொல்லவும் எனக் கூட சில உணவகங்களில் எழுதி இருப்பார்.
நிறைகள் மட்டும் எழுதினால் நலம்.
பதிவில் எழுதுவது பலரையும் எளிதில் சென்றடையும் என்பதால் மட்டுமே சொல்கிறேன்.
நன்றி!!
அவ்வளவுதானா இன்னும் இருக்கா சார்?
ReplyDeleteவணக்கம் நண்பர் சார்வாகன்,
ReplyDeleteஒவ்வொரு ஹோட்டலிலும் சாப்பிடும் போது அந்த ஹோட்டல் ஸ்பெசல் என்னவென்று கேட்டுத்தான் ஆர்டர் செய்கிறேன்.ஒரு சில உணவு பதார்த்தங்கள் மிக நன்றாக இருக்கும்.மற்றவை மிக மோசமாக இருக்கும்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை என்பது ஏற்க முடியாது.திண்டுக்கல் வேணு பிரியாணியில் ஒரே சுவைதான் எப்போ போனாலும்....அது எப்படி...?ஒருமுறை வத்தலகுண்டு தல்ப்பாகட்டி பிரியாணியில் பாயா சாப்பிட்டேன்..ரொம்ப மோசம்..உடனே அந்த கடை மேனேஜரை அழைத்து சுத்தமாக சரியில்லை என்று சொல்லிவிட்டேன்.விலை குறைவாக இருந்தால் பரவாயில்லை.மினிமம் 130 என்று வாங்குகிறார்கள்.எப்படி பொறுத்துக்கொள்வது.
நிறை என்றால் கண்டிப்பாக பாராட்டுகிறேன்.குறை என்பது இல்லாமல் இல்லை.அதை நாசூக்காய் சொல்கிறேன்.அவ்வளவுதான்.
எவ்வளவு நாசூக்காய் சொல்றீங்க...
ReplyDeleteபசி தான் அதிகமாகுது...!
அது சரி... திண்டுக்கல்லில் உள்ள எல்லா வேணுவிலும் அப்படியா இருக்கு...? நன்றி...
இங்கே வந்தால் போன் செய்ய மாட்டீர்களா...?
விருதுநகர் என்றாலே பரோட்டாதான் பேமஸ்... அதற்கு பர்மா கடை என்ற ஓட்டல் தான் விருதுநகரின் உண்மையான சுவையை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தியது.. பை பாஸ் ரோடிலேயே ஒரு பர்மாகடை உள்ளது.. முழுவதும் ஏ சி ஓட்டல் அது.. விருதுநகரில் பரோட்டா மற்றும் இதர எல்லா வகையான நான் வெஜ் என்றால் அந்த ஓட்டல் தான் பெஸ்ட்..விலை ஸ்டார் ஓட்டல் அளவிற்கு இருக்கும்.. தரம் குறைசொல்ல முடியாது. அப்புறம் பானு என்ற ஓட்டல் சுமாராக இருக்கும்.. மற்றவை எல்லாம் சாதாரண ரோட்டோர கடைகள் மட்டுமே.. நீங்கள் சரியான நபரிடம் கேட்காமல் ஏமார்ந்து விட்டீர்கள் நன்பரே!! இன்னொரு சுவையான பரோட்டா தகவல்..பத்தாண்டுகளுக்கு முன்பு நான் இதே மாதிரி குடும்பத்துடன் அவ்வழியாக வரும்போது பரோட்டா வாங்கி செல்ல ஆசைப்பட்டு, காரை உள்ளே விட்டு ஒரு நபரிடம் எங்கு வாங்கலாம் என்று கேட்க, அவர் இதே கமாலியாவை காட்ட, மாலை நேரத்தில் அங்கு பரோட்டாவை வாங்கிச்சென்று சாப்பிட்டோம்.. வெகு சுமார்தான் அப்போது... இப்போது உடைந்த போர்டு அப்போது வைக்கபடவில்லை.. ஆனால் விதி என்ன செய்தது தெரியுமா? என்னை விருதுநகரிலேயே 2 ஆண்டுகளுக்குப் பின் குடியமர்த்தியது... இப்போது நான் விருதுநகர் வாசி.... எப்போதுமே ருசிக்கு உண்பவன் என்பதால் எனக்கு இங்கு உணவகங்கள் குறித்த தகவல்கள் அத்துபடி... மீண்டும் வந்தால் மறக்காமல் பர்மாகடை டிரை பண்ணுங்கள்..
ReplyDelete