Thursday, March 14, 2013

அகஸ்தியர் அருவி - பொதிகைமலை, பாபநாசம், திருநெல்வேலி

அகஸ்தியர் அருவி…
நெல்லை அம்பாசமுத்திரம் சென்றபோது பாபநாசம் அருகே இருக்கும் அகஸ்தியர் அருவியில் எப்பொழுதும் தண்ணீர் வரத்து இருக்குமாம் என்று பாசக்கார பயபுள்ளங்க சொல்லவும் அங்கே செல்ல ஆசையாய் மனம் துடித்தது.சரி...போய் ஒரு விசிட் விட்டுட்டு வரலாம் என்று கிளம்பினோம்…
பாபநாசம் என்கிற ஊர் வர...... வழியிலேயே ஒரு சிவன் கோவில் நம்மை வரவேற்றது.கோவில் கோபுரம் வெள்ளை நிறத்தில் இருக்கிறது.அன்று விசேச நாள் போல…..ஏகப்பட்ட பக்தர்களின் கூட்டம்..தத்தம் பாவத்தை போக்க குவிந்து இருந்தனர்…
 
அந்த கோவிலை தாண்டி செல்லவும் பசுமை நிறைந்த வயல்வெளிகள் கண்ணுக்கு குளிர்ச்சியாய்.....இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும் அடக்க ஒடுக்கமாய் கிராமத்து அம்மணிகள் கூட்டம்.....க…க…க..க.....கல்லூரிச்சாலை ஏதோ ஒரு தமிழ்க்கல்லூரி போல….அப்படியே கொஞ்சம் நோட்டம் விட்டுவிட்டு பயணித்தோம்…..மலைப்பாதை வரவேற்கிறது…..அருகிலேயே செக்போஸ்ட் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம்………நிறைய எச்சரிக்கை போர்டுகள்……நம்மை மிரட்டியபடி புலிகளின் படங்கள்….
மலைப்பாதையில் பயணிக்க ஆரம்பித்தவுடன் இருபுறமும் பசுமை அன்னை தன் இயற்கையை போர்த்தியிருக்கிறாள்…மேலே இருந்து பார்க்கும் போது அருவி அழகாய் வழிந்து ஓடுவது மிக ரம்மியமாக இருக்கிறது..மலைப்பாதையில் இருந்து இடது பக்கம் பிரியும் ரோட்டில் இறங்க அருவிக்கு செல்லும் இடத்தினை அடைந்தோம்.
 
இயற்கை அன்னையின் மடியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நீர்மின்தொகுப்பு இருக்கிறது. அதைத்தாண்டி சென்று கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தினோம்…...ஒற்றை ஆலமரம்…அதில் ஏகப்பட்ட நம் முன்னோர்கள்…அதிலும் சிங்கவால் குரங்குகள் அதிகம்…
அவைகளை ரசித்தபடியே அருவிக்கு சென்றோம்..பாறை முகடுகளில் தண்ணீர் வழிந்து கொண்டுருக்கிறது.பெண்களுக்கு என்று தனியாக உடைமாற்றும் வசதிகள் இருக்கின்றன.
 
 
 
அருவியில் நீர்வரத்து எப்பொழுதும் வந்து கொண்டே இருக்கிறது.வருடம் முழுவதும் நீர் வரக்கூடிய ஒரே அருவி இந்த அகஸ்தியர் அருவி…கொஞ்ச நேரம் அருவியின் அழகை ரசித்துவிட்டு கை நனைக்க அருவியை தொட்டபோது செம குளிர்ச்சி…..சில்லென்ற சாரலில் நனைந்தபடி அருவியின் அழகைப் பருகினோம்….சூழ்நிலை மிக ரம்மியமாக இருக்கிறது…ஆங்காங்கே…எண்ணை தேய்த்து குளித்தபடி ஆண்களும் பெண்களும்…..எலே…….இங்க பாருல…..என்கிற நெல்லைத் தமிழ் கேட்க சுவையாய் இருக்கிறது…
 
ஏற்கனவே குளித்துவிட்டு வந்தபடியால் அகஸ்தியர் அருவியில் குளிக்கவில்லை…கைகால் முகம் அலம்பிவிட்டு மேலேறினோம்.
அருவிக்கு அருகிலேயே காவல் தெய்வமாய் ஒரு விநாயகப்பெருமான்....அவருக்கு ஒரு வருகைப்பதிவை உறுதி செய்துவிட்டு கிளம்பினோம்...
அங்கே இருக்கிற பாறை குழிகளில் மீன்களின் ராஜ்ஜியம் இருக்கோ இல்லையோ ஆனால் தவளையின் தலைப்பிரட்டைகள் நிறைய இருக்கிறது….
அகஸ்தியர் அருவிக்கு செல்லும் முன் வலதுபக்கம் ஒரு செங்குத்தான படிகள் இருக்கின்றன…அது கல்யாண தீர்த்தம் எனப்படும் இடமாகும்…(அதை அடுத்தபதிவில் பார்க்கலாம்...)
நல்ல ஒரு ரம்மியமான இடம்......சுற்றிலும் பசுமை .பசுமை…தாமிரபரணி தண்ணீர் உருவாகும் அகத்தியமலை அங்கிருந்து வந்து விழும் அகஸ்தியர் அருவி என அழகாய் இருக்கிறது…
நல்ல அமைதியும் இறைவன் அருளும் பெற சிறந்த இடம்...

நேசங்களுடன்
ஜீவானந்தம்
 

18 comments:

  1. ஒரு "மேட்டர்" மறந்துட்ட மச்சி..

    ReplyDelete
  2. சென்றதுண்டு... இனிய பயணம்...

    ReplyDelete
  3. பம்பு செட்டில் குளிப்பது போன்ற அனுபவம் கிடைக்கும் ..இங்கு..! தண்ணீர் கொஞ்சம் வெதுவெதுப்பாகவே இருக்கும் ! மாலை 6 மணிக்கு மேல் அனுமதிக்க மாட்டர் ! சாப்பிட ஏதும் கிடைக்காது ! அம்பையிலிருந்தோ..தென்காசியிலிருந்தோ தான் வாங்கியாரணும் ! குற்றாலம் வந்து ஏமாந்தவர்களை..ஆறுதல் படுத்தும்..அகத்தியர் அருவி !

    ReplyDelete
  4. அது இல்லாமலா......ஹிஹிஹி....காரையார் டேம் போய்ட்டு அங்க அடிவாரத்துல மீன் சாப்பிட்டு விட்டு வந்தோம்...

    ReplyDelete
  5. வாங்க தனபாலன்...இன்னிக்கு உங்க முதல் இடத்தினை மச்சி பிடிச்சிட்டான்....

    ReplyDelete
  6. நானும் போயிருக்கேன் பாஸ்

    ReplyDelete
  7. கோவை கமல் சார்,,,வணக்கம்...ரொம்ப நாள் ஆச்சு...உங்களின் அனுபவம்....?

    ReplyDelete
  8. வாங்க சக்கர....
    நன்றி...

    ReplyDelete
  9. நம்மூருக்கு வந்துட்டு போயிருக்கீக ! ! திருவள்ளுவர் அரசு கல்லூரி அது....
    என்னோட வீட்டம்மா அதுலதான் படிச்சாக ! ! காரையார், பாணதீர்த்தம், சொரிமுத்து அய்யனார் கோவில் எல்லாம் பார்த்திருப்பீக-ன்னு நெனைக்கேன்

    ReplyDelete
  10. வாங்க பொன்சந்தர்...
    ஆமா...எல்லா இடங்களும் சென்றேன்...சொரிமுத்து அய்யனார்கோவில் மட்டும் செல்லவில்லை...காரையார்டேம் செல்லும்போதே இந்தகோவிலுக்கு போகனும் என்றிருந்தேன்...திரும்பி வருகையில் மறந்துவிட்டேன்..

    ReplyDelete
  11. என் மேலும் இந்த சாரல் அடித்தது.. நீங்கள் பதிவு எழுதினால், ஓடோடி வருவேன்.. படங்களைக் காண.. அவ்வளவு பிடிக்கும். நிறைய சுற்றுங்கள்..இன்னும் பகிருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி,,,விஜி...உங்க ஊருக்கும் வரேன்...

      Delete
  12. தகவல் படங்கள் அனைத்துமே அருமை.

    ReplyDelete
  13. அகஸ்தியர் கோயிலும், அருவியும் எனக்கு மிகவும் பிடித்த இடங்கள்.
    நான் எனது முதல் காரை வாங்கி அங்குதான் பூஜை போட்டேன்.
    அதைத்தொடர்ந்து வாங்கிய எல்லாக்கார்களுக்கும்
    அங்குதான் பூஜை போட்டேன்.

    இறுதியாக வாங்கிய காரை
    சென்னையில் பூஜை போட்டேன்.
    சரியாக மூன்று மாத்த்திலேயே விற்க வேண்டிய நெருக்கடி வந்து விட்டது.

    பவர்ஃபுல்லானவர் அகஸ்தியர்.
    இந்த வருடம் கார் வாங்கி அவரிடம்தான் ஆசி வாங்கி
    பூஜை போட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உங்க பலன் நிறைவேறட்டும்

      Delete
  14. ஒரு எட்டு வருசம் முன்பு டூர் போனப்ப போய் இருக்கேன்! அருமையான அருவிதான்! நன்றி!

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....