Sunday, April 5, 2015

தீக்குச்சி - தயாரிப்பு ஒரு பார்வை

தீக்குச்சி...
இது ஒரு அத்தியாவசியப்பொருள் என்பது எல்லோருக்கும் தெரியும்.ஆண்கள் முதல் பெண்கள் வரை தினமும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள்.பீடி, சிகரெட் பத்தவைப்பது என்றாலும், வீட்டில் அடுப்பு பத்தவைப்பது என்றாலும் இல்லை அடுத்தவன் வீட்டை கொளுத்துவது என்றாலும் எல்லாரும் உபயோகப்படுத்துவது தீப்பெட்டியும் அதனுள்ளே இருக்கின்ற தீக்குச்சியும் தான்.என்னதான் சிகரெட் லைட்டர் கேஸ் லைட்டர் வந்தாலும் இன்னமும் பயன்பாட்டில் இருக்கிறது இந்த தீக்குச்சி..இப்பொழுது மெழுகில் குச்சி வந்தாலும் இன்னமும் இதன் புழக்கம் குறையவில்லை.

தீக்குச்சி தயாரிக்கும் மரத்தின் பெயர்  பெரு மரம், பீமரம், பீநாரி அல்லது பீதனக்கன்.இதன் அறிவியல் பெயர் அய்லாந்தல் எக்செல்ஸா(Ailanthus excelsa).இது ஒரு இலையுதிர் மரமாகும்.இந்தியாவில் இதன் உற்பத்தியில் தமிழகத்தில் முதலாவது இடமும் கேரளா இரண்டாவது இடமும் வகிக்கிறது

தீக்குச்சி எப்படி தயாராகிறது:
தீக்குச்சி மரத்தினை துண்டு துண்டாக ஒரு அடிக்கும் மேலான அளவில் வெட்டிக் கொள்கின்றனர்.அதன் பட்டையை உளித்து இருபுறமும் அதன் மத்தியில் பிடிக்ககூடிய மாதிரி ஒரு உலோக கருவியில் மாட்டி அதற்கென்று இருக்கும் மெசினில் பொருத்தி விடுகின்றனர்.மெசின் வேகமாய் உருளும் போது அதன் அருகே இருக்கிற பிளேடு உருளை வடிவ மரத்தினை பட்டை போல் வெட்டுகிறது. வேக வேகமாக சுத்தும் போது பிளேடு தேவையான அடர்த்தியில் மற்றும் அகலத்தில் ஒரு பெல்ட் போன்று நீளமாக அறுத்து வெளியே தள்ளுகிறது. இப்படி ஒவ்வொரு துண்டு மரமும் இப்படி நீளமாக வருகிறது.அதை தேவையான நீளத்திற்கு கட் பண்ணி வைத்துக் கொள்கின்றனர்






இப்படி அனைத்து துண்டுகளும் நீளமான பெல்ட் போன்று கட் பண்ணிய உடன் அதை இன்னொரு பலகையில் அடுக்குகின்றனர்.அனைத்தும் அடுக்கி முடிந்த பின்னர் வெட்டு மெஷினில் வைத்து அடுக்கி சரியான அளவு வைக்கின்றனர்.பின் மெஷின் ஓடும் போது வெட்டும் கத்தி சீராக வெட்டி தீக்குச்சியை வெளியே தள்ளுகிறது.ஒரு நிமிட நேரத்தில் பல்லாயிரக்கணக்கான தீக்குச்சிகள் வெட்டப்படுகின்றன.அதை எடுத்து வெயிலில் உலர வைக்கின்றனர்.உலர்ந்தபின் மூட்டையாய் கட்டி அனுப்புகின்றனர்.






இப்படி தீக்குச்சி ரெடியாகி முனையில் மருந்து வைப்பதற்காக சிவகாசி, குட்டி சிவகாசி (குடியாத்தம்) போன்ற ஊர்களுக்கு அனுப்புகின்றனர்.அங்கு தீக்குச்சியுடன் மருந்து வைக்கப்பட்டு பெட்டியில் உரச ரெடியாகிறது.

தீக்குச்சி மரத்தில் ஈரப்பதம் இருப்பதால் அது உளிப்பதற்கு ஏற்றவாறு பட்டை இருக்கிறது.மரம் உலர்ந்து விட்டால் அதில் தீக்குச்சி தயாரிக்க முடியாது.
4 டன் எடையுள்ள பச்சை மரம் ஒரு டன் எடையுள்ள தீக்குச்சிகளை தருகிறது.
சாதாரண தீக்குச்சி என்று தான் நாம் நினைக்கிறோம் ஆனால் அது தயாரிக்க ஏகப்பட்ட  உழைப்பு வேண்டியிருக்கிறது.

நன்றி
குப்புசாமி தீக்குச்சி தொழிற்சாலை, திருப்பத்தூர்

நேசங்களுடன்
ஜீவானந்தம்

5 comments:

  1. அருமையான தகவல், தாவரவியற் பெயரைத் தரும் போது ஆங்கில எழுத்திலும் அடைபுள் தரவும். அது தேடுதலுக்கு இலகு!(நான் தேடியது ailanthus excelsa)
    இலங்கையில் என் வீட்டருகே உள்ள பேருந்து நிறுத்தத்துக்கு "பீநாறி மரத்தடி" எனக் கூறுவோம். அம்மரம் சுமார் 30 அடி உயரமும், 5 அடி விட்டமுடையது. வயது 200 க்கு அதிகமிருக்கலாம்.
    ஆனால் அதன் தேவை இதுதான் என இது வரை தெரியாது. அது பூக்கும் காலத்தில் மணம் விரும்பத்தக்கதல்ல!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் யோகன்.வருகைக்கு நன்றி...சேர்த்துவிட்டேன்.
      இந்த மரம் பற்றி சிறு வயதில் அறிந்தும் தெரிந்தும் இருக்கிறேன்.கிராமத்தில் எல்லா மரங்களில் ஏறியும் இறங்கியும் விளையாடி இருந்திருக்கிறோம்.ஆனால் இந்த மரத்தில் மட்டும் ஏறமாட்டோம்.ஏனெனில் எடை தாங்காது முறிந்து விழும் என்பதினால்.இந்த மரம் அதிகம் இருக்கும் இடத்தினை பீயாங்காடு என்று சொல்வோம்...

      Delete
  2. என்ன ஜி... நம்ம கடல் பயணங்கள் சுரேஷ் அங்கு வந்தாரா...?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தி.தனபால்ஜி.......அவர் வராததால் தான்..,....

      Delete
  3. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....