இப்போ பப்பாளி சீசன் போல...எங்க பார்த்தாலும் பப்பாளி பழங்களா தெரியுது.எங்க
கிராமத்துல ஒவ்வொரு வீட்டின் புழக்கடையிலும் ஒண்ணு ரெண்டு பப்பாளி மரங்கள்
இருக்கும்.காசு கொடுத்து வாங்கி தின்ற பழக்கம் இல்லை இதுவரைக்கும்.வீட்டு
மரங்களில் பழுக்கின்ற பழங்களை எங்கள் தேவைக்கு போக மீதி அக்கம்பக்கத்து
வீட்டினருக்கு கொடுத்து விடுவோம். மரத்திலேயே பழுத்து இருப்பதால் நல்ல ருசியும் மணமும்
இருக்கும் ஆனால் இப்போது நகரத்தில் விற்கிற காய்கள் அனைத்தும் கல் வைத்து பழுக்கப்பட்டு
விற்பனைக்கு வருகின்றதால் சாப்பிட பிடிப்பதில்லை.
அப்படி ஊருக்கு சென்றிருந்த போது கொண்டு வந்திருந்த பழங்களில் செய்த
பதார்த்தம் தான் இந்த அல்வா. இதுவரைக்கும் எங்கேயும் சாப்பிட்டதில்லை.புதிதாய்
முயற்சித்து பார்ப்போமே என்றதில் நல்ல ரிசல்ட்.நம்ம அம்மணிக்கும் சந்தோசம்... சுவை நன்றாக வந்து இருக்கிறது.
தேவையான பொருட்கள்:
பப்பாளி - 1 பழம்
சர்க்கரை – கால்கிலோ
நெய் – 200 மிலி
முந்திரி – சிறிதளவு
பாதாம் – சிறிதளவு
ஏலப்பொடி - சிறிதளவு
செய்முறை:
ப்ப்பாளி பழத்தினை தோல் சீவிவிட்டு சிறு சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு
அரைத்து கொள்ளவும்
அடுப்பினை பற்றவைத்து வாணலியில் சிறிதளவு நெய்விட்டு அரைத்த பப்பாளி விழுதினை
விட்டு வதக்க வேண்டும்.
பச்சை வாசம் போகும்போது சர்க்கரையை கொட்டி கிளறவேண்டும்.
ஏலக்காய் பொடி தூவவேண்டும்
நன்கு வேகும் வரை கொஞ்சம் கொஞ்சமாக நெய்விட்டு வதக்கி நன்கு வெந்தபின்
வாணலியில் ஒட்டாமல் திரண்டு வரும் போது கொஞ்சம் நெய்யில் முந்திரி பாதாம்
பருப்புகளை வறுத்து அல்வாவுடன் சேர்த்து கிளறவும்.
சுவையான சூப்பரான அல்வா ரெடி....
சூடாகவோ ஆறவைத்தோ சாப்பிட செமையாக இருக்கும்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
ReplyDeleteசிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்
பச்சை வாசம் போனாலே சூப்பர் அல்வா...!
ReplyDeleteஅருமை ... அருமை .... பார்த்தவுடனே பப்பாளி அல்வா சுவைக்க தோணுதே ! - சுடசுட.காம்
ReplyDelete