ஒரு நாள் நம்ம கம்பெனி
விசயமா தென்னம்பாளையம் வரைக்கும் போய் இருந்தேன்.நீலாம்பூரில் இருந்து தென்னம்பாளையம்
வரைக்கும் எங்க சாப்பிடலாம்னு அவினாசி பைபாஸ் ரோட்டில் இருபுறமும் பார்த்துட்டே போயிட்டு
இருந்தேன்.ஒரு சில சின்ன சின்ன ஹோட்டல்கள் தான் இருந்தது.நம்ம வண்டி நிறுத்துற
மாதிரி ஒரு ஹோட்டலும் காணோம்.இன்னும் கொஞ்ச தூரம் போய்ட்டு அப்படியே யூ டர்ன்
போட்டுட்டு திரும்பி சிட்டிக்குள்ள வந்திடலாம்னு நினைச்சிட்டு இருக்கும் போது ஒரு
பஞ்சாபி ஹோட்டல் பளிச்சின்னு கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்தது.
அதுவும் எதிர்ப்பக்கத்துல...வண்டியை
திருப்பிட்டு வந்தா லாரிப்பேட்டையே அங்க தான் இருக்கு....தாராளாமா வண்டியை
நிறுத்திட்டு உள்ளே நுழைந்தால், பஞ்சாபி ஹோட்டலுக்கே உண்டான கயிற்றுக்கட்டில்...நல்ல காற்றோட்டமா இருக்கிற மாதிரி ஷெட் இருக்கிறது. கை
கழுவி விட்டு, கட்டிலில் உட்கார்ந்து மெனு பார்க்க எல்லாம் ஹிந்தியில் தான்...சப்
டைட்டிலா ஆங்கிலத்தில்....(தமிழ் நாட்டுல இருந்துகிட்டு தமிழ்ல மெனு
இல்லையா..அய்யகோ.......)
வட இந்திய உணவுகள் என்றால் ரொட்டி, நான், சப்ஜி ஆலு, சென்னா, கோபி, தால், பனீர் இப்படித்தான் இருக்கும்..அதுமட்டுமல்ல
இந்த ஹோட்டலில் சைவம் வேற....சரி வந்துட்டோம்...சாப்பிட்டுப் பார்ப்போம்னு
ரோட்டி, ஆலு மசாலா, டால் இதெல்லாம் சொன்னோம்..அதுக்கு முன்னாடி பஞ்சாபி லஸ்ஸி
குடிச்சிப்பார்க்கலாம்னு ஆர்டர் பண்ணினோம்.நல்ல கெட்டித்தயிரில் ஏலக்காய்
சர்க்கரைலாம் போட்டு செம சில்லுனு லஸ்ஸி...
செம டேஸ்ட்...என்ன ஒரு குறை..நம்ம டாஸ்மாக் பிளாஸ்டிக் டம்ளர்ல கொடுத்திட்டான்...(பாவிப்பய.....அதை
வேற ஞாபகப்படுத்திட்டான்...)
ஒரு சின்ன தட்டுல வெங்காயம் உப்பு, பச்சை மிளகாய் வைத்துவிட, ரோட்டி
சாப்பிட்டுக்கொண்டே ஒரு கடி வெங்காயம், ஒரு கடி பச்சைமிளகாய் சாப்பிட சுர்னு
இருக்க டேஸ்ட் செம....என்ன காம்பினேசனு தெரியல...ஆனா சும்மா செம.....ரோட்டி
எப்பவும் போல சாப்ட்...வட இந்தியர்கள் சுடும் சப்பாத்தி, ரோட்டி நம்மாளுகளுக்கு
செய்ய வராது....கூடவே டால்..பருப்பு செம டேஸ்ட்....அப்புறம் ஆலுகோபி மசாலா...வெறும்
உருளைக்கிழங்கு தான்..அதை இம்புட்டு கெட்டியா டேஸ்டா செய்யமுடியுமா...அவ்ளோ
டேஸ்ட்...நல்ல உப்பும் உரைப்பும், காரமும் ரோட்டியோட சேர்ந்து பின்னி
பெடலெடுக்குது....
ஒரு சின்ன குண்டால வழிய வழிய ஆலுகோபி மசாலா.....இந்த ஆலு மசாலாவுக்கே நிறைய ரோட்டி
சாப்பிட வேண்டியதாகிப்போச்சு.....
அதுக்கப்புறம் சீரா ரைஸ்....சீரகம் போட்டு தாளிச்சு சாப்பாடு தர.....அதுவும் ஆலு மசாலாவுக்கு போட்டி போட்டு இறங்குது....
எல்லாம் சாப்பிட்டு முடிச்சு கட்டிலில் இருந்து இறங்க கூட முடியல...செம
ஹெவி....எவ்ளோ சாப்பிடறோம்னு தெரியல...அப்படி சாப்பிட்டு விட்டு இருக்கிறோம்...
கை கழுவி விட்டு அவங்ககிட்ட கேட்ட ஒரு கேள்வி...
ஜி.....இந்த கட்டில்லயே தூங்கிடட்டுமா....?
உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டல்லவா....
பில் ஹிந்தியில் தான்...ஒவ்வொன்னா கேட்டு தெரிஞ்சிக்கிட வேண்டியதாகிவிட்டது....
கோவை அவினாசி பைபாஸ் ரோட்டில் சாந்தி கியர்ஸ் பக்கத்தில் நீலாம்பூரில் இருக்கிறது.
அந்தப்பக்கம் வண்டியில் போனா சாப்பிட்டு பாருங்க..கயிற்றுக்கட்டில் அனுபவம்
ஏகாந்த உணர்வைத்தரும்.....
நேசங்களுடன்
ஜீவானந்தம்
418 ரூபாய்க்கா சாப்பிட்டிருக்கீங்க? நெதமும் இப்படி சாப்பிட்டா ஊட்ல இருக்கிற மத்தவங்க பூவாவுக்கு என்ன பண்ணுவாங்க? நீங்க கெடறதுமில்லாம ஊரையும் கெடுக்கப் பாக்கறீங்களே, இது பாவமில்லையா?
ReplyDeleteபின்னி பெடலெடுத்தீட்ட்ட்ட்ட்டீங்க...!
ReplyDeleteஇப்படித்தான் ரசிச்சு ருசிச்சுச் சாப்பிடணும்
ReplyDeleteஇப்படித்தான் ரசிச்சு ருசிச்சுச் சாப்பிடணும்
ReplyDelete