கறி ஃபேக்டரி...பேரே வித்தியாசமா இருக்குல்ல....அப்படித்தான் நம்ம ஐடி நண்பர் இந்த
ஹோட்டலைப்பத்தி சொல்லும் போது நானும் வித்தியாசமா கேட்டேன்...சரவணம்பட்டி சுத்தி
நிறைய ஐடி கம்பெனிகள் இருக்கிறதால் மாதத்திற்கு ஒரு ஹோட்டல்
திறக்கறாங்க....அப்புறம் காணாம போயிடறாங்க...இந்த ஹோட்டல் புதுசா திறந்திருப்பதால்
செம கூட்டம் அள்ளுது...அதிலும் அம்மணிகள் கூட்டம் செம....சொல்லவே வேணாம்....ஐடி
அம்மணிகள் பத்தி....அம்புட்டு அழகா இருக்காங்க....அப்புறம் ஒரு சில அம்மணிகளைப் பார்த்தா
சீக்கு வந்த கோழிகள் மாதிரி இருக்காங்க(டயட்டாம்..)...ஆனா அசால்டா கோழியோ/மட்டனோ
வாயில் வச்சி கொத்து புரோட்டா போடறாங்க....சரி..நம்ம கடைக்கு வருவோம்...
சரவணம்பட்டியில் இருந்து துடியலூர் செல்லும் சாலையில் KGISL தாண்டி வலது புறம் இருக்கிறது.சீமை ஓடு போட்ட ஒரு ஹோட்டல்.. கறி
ஃபேக்டரி....கார்களும், டூவீலர்களும் முன்னாடி காத்திருக்கின்றன உள்ளே போன
ஓனர்களுக்காக.... உள்ளே சென்றால் நம்ம கடையில் இருக்கிற மாதிரி சிமெண்ட் ஹாலோபிளாக்ல
கட்டி கடப்பா கல்லு பென்ச், அதே மாதிரி சேர்...(நம்ம கடையை ஞாபகப்படுத்துகிறது)....நன்கு காற்றோட்டமாக இருக்கிறது.டேபிள்கள்
அனைத்தும் நிரம்பி வழிகிறது பலவித மெனுக்களால்...அதைச்சுற்றி குரூப் குருப்பாய் வாடிக்கையாளர்கள்...
பேங்கில் டோக்கன் நம்பர் சொல்வது போல அழகிய பெண்ணின் ஆட்டோமேடிக் குரல் ஒலிக்கிறது
அவ்வப்போது... கவுண்ட்ர் போன்று இருக்கிறது அங்கு வரிசையாய் நின்று ஆர்டர்
சொல்கிறார்கள். பணம் கட்டி டோக்கன் வாங்கிகொண்டு காத்திருக்கின்றனர். மெனு
ரெடியானதும் அழைக்கிறது ஆட்டோமேடிக் வாய்ஸ்...பெற்றுக்கொண்டு டேபிளில் அமர
வேண்டியதுதான். எல்லாம் செல்ப் சர்வீஸ்.
மெனு ஒரு பெரிய போர்டில் இருக்கிறது.ஒரு சில குறிப்பிட வகைகள் மட்டுமே..ஆனால் அனைத்தும்
இருக்கிறது.சைவம் கூட இருக்கிறது.போர்டு படித்துவிட்டு மட்டன் பிரியாணி இருக்கிற காம்போவும், சில்லி சிக்கன், குடல் பொரியல் ஆர்டர் கொடுத்துவிட்டு டோக்கன் வாங்கிக்கொண்டு ஒரு டேபிளில் அமர ஐந்து
நிமிடத்திற்குள் நமக்கான டோக்கன் அழைப்பு வருகிறது..அது வரைக்கும் நமக்கு என்ன வேலை..சுத்தி முத்தி பார்க்கவேண்டியது தான்....
ஒரு பெரிய தட்டில் பிரியாணி ஒரு கப், சாதம், குழம்பு, ஆனியன் பச்சடி, கெட்டித்தயிர்
ஒரு கப் என ஒரு காம்போவாக தருகிறார்கள்..பிரியாணி சாப்பிடலாம்..ஆனால் பிரியாணிக் குண்டான
மணம் கொஞ்சம் குறைவுதான்.மட்டன் துண்டுகள் நன்றாக வெந்து இருக்கின்றன.சிக்கன்
குழம்பினை பிரியாணிக்கு தொட்டு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கிறது.தாழ்ச்சாவுக்கு
பதிலாய் சிக்கன் குழம்பு போல...
குடல் பொரியல்....ஏ.ஒன்..தேங்காய் துருவல் எல்லாம் போட்டு காய்கறி பொரியல் மாதிரி இருக்கிறது.குடல் அப்படியே பளிச்சென்று இருக்கிறது. நன்றாக இருக்கிறது.செம டேஸ்ட்....கொஞ்சம் இரத்தமும் கூட கலந்து செய்திருக்கிறார்கள்...வதக்கிய சின்னவெங்காயத்துடன் ரத்தமும் குடலும் சேர்ந்து ஒரு சுவையை தருகின்றது.இரண்டும் சேந்து சாப்பிட நன்றாக இருக்கிறது.
சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ்....இது எப்பவும் போல....
அடுத்துதான் முக்கியம்...கெட்டித்தயிர்....செம கெட்டி...விரலை விட்டு வழித்து
கொட்ட வேண்டும்....அவ்ளோ கெட்டி...கொஞ்சம் கூட புளிப்பு இல்லை..சாதத்துடன்
பிசைந்து சாப்பிட ஆஹா...அருமை....விரல் இடுக்குகளில் எல்லாம்
கெட்டித்தயிர்....ஒவ்வொரு விரலாய் சப்பி சாப்பிட செம டேஸ்ட்....ரசமும் குடிப்பதற்கு நன்றாக இருக்கிறது.
சாப்பிட்டு பின் தட்டினை அதற்குண்டான இடத்தில் போட்டுவிட்டு கை கழுவிவிட்டு திருப்தியாய்
வெளியேறினோம்.பில் கோவைக்குண்டான ரேட் தான்...
கறி ஃபேக்டரி...அந்தப்பக்கம் போனால் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வாருங்கள்.....ஐடி அம்மணிகள் இருக்கிற ஏரியா வேற...செமயா இருக்கும்...
ஜீவானந்தம்
சூப்பரு...!
ReplyDelete