சமீபத்துல உடுமலை போயிருந்தேன்.எப்பவும் போல மதிய வேளைக்கு நல்ல ஹோட்டலை தேடும் போது, அந்த ஊருக்கு அடிக்கடி வந்துட்டு போயிட்டு இருக்கும் நண்பரை போனில் பிடிச்சேன்.அன்னவாசல் போங்க, நல்லாயிருக்கும் என்றார்.அட்ரஸ் கேட்டு அன்னவாசல் ஹோட்டலை அடைந்துவிட்டோம்.நிறைய கார்கள் அந்த தெருவில் நின்று கொண்டிருக்க, நாங்களும் ஒரு ஓரமாய் நிறுத்திவிட்டு ஹோட்டலுக்குள் நுழைந்தோம்.
ஹோட்டல் பழசாகிக் கொண்டிருக்கிறது என்கிற அறிகுறி உள்ளே நுழையும் போதே தெரிந்தது.ஹோட்டல் பராமரிப்பு குறைவாக இருக்கிறது என்பது பார்த்தவுடன் புரிந்து போனது.வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி பார்ட்டிசன் அந்த சூழ்நிலையிலும் மிக அழகாய்த் தெரிந்தது.
மூங்கிலால் சூழப்பட்ட காற்றோட்டமான அறைகள் இருக்க, உள்ளே ஏசியில் வந்து அமருமாரு சர்வர் சொல்ல, ஏசி ஹாலுக்குள் நுழைந்தோம்.நான்கு டேபிள்கள் போடப்பட்டிருந்தன.காலியானதில் அமர்ந்தோம்.வேகமாய் வந்து உபசரித்த சர்வர் இருப்பதை மட்டும் ஒப்பித்தார்.
பிளைன் பிரியாணியுடன், மட்டன் தொக்கும், மட்டன் ஃப்ரையும் சொல்ல, சில பல நிமிடங்களில் வந்து சேர்ந்தது.
பிரியாணியில் இருந்து பிரித்தெடுத்த சாதம் பிளை பிரியாணி எனப்படுகிறது. அனேகமாக கேள்வி பதில் ரெடின்னு நினைக்கிறேன்.
நன்றாகவே இருந்தது, சின்ன சின்ன சீரக சம்பாவில் செய்யப்பட்டு, அளவான காரத்துடன், மிதமான மசாலாவுடன் சாப்பிட சுவையாக இருந்தது.அடுத்து வந்த மட்டன் தொக்கு செம.மைய அரைத்த மசாலாவுடன் சின்ன சின்ன எலும்பில்லாத மட்டன் துண்டுகள் நன்றாக வெந்து, தேங்காய் மசாலாவுடன் சேர்ந்து சுவையை கூட்டியது, நல்ல அளவான காரமும் உப்பும் மட்டனின் மணமும் ஒன்று சேர்ந்து சுவையை அதிகரித்தது.
கைவிரலில் ஒட்டியிருக்கும் மசாலாவை நன்கு சூப்பும் படி சுவை அமைந்திருந்தது.அது போலவே மட்டன் ஃப்ரையும் செம மாஸ். கொஞ்சம் பிரியாணி சாதத்துடன் கொஞ்சம் மட்டன் தொக்கினை தொட்டுக்கொண்டு சாப்பிட சத்தமில்லாமல் காலியாகி கொண்டு இருந்தது.மட்டன் கொத்துக்கறி தொக்கும், மட்டன் ஃப்ரையும் செம டேஸ்ட்.
ஆனால் அளவு மிக குறைந்த அளவே இருக்கிறது.150 கிராம் கூட இருக்காது என நினைக்கிறேன்.டேஸ்ட் மட்டும் செமயாக இருக்கிறது.
சில்லி சிக்கனும் மிகவும் நன்றாக இருக்கிறது.பஞ்சு போல் எலும்பில்லாமல் மிகவும் டேஸ்டியாக இருக்கிறது.குஸ்கா சாப்பிட்டவுடன் கொஞ்சம் அரிசி சாதம் வாங்கிக்கொண்டு ரசம் சேர்த்தால் ரசம் சூப்பர் டூப்பர் டேஸ்ட்.தக்காளி ரசத்துடன் கொஞ்சம் மட்டன் எலும்புகள் சேர்த்து செய்திருக்கிறார்கள்.மணமும் சுவையும் சூப்பர்.ரசத்தினை வேண்டுமளவிற்கு சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டும், கையை குழி ஆக்கி அதில் ஊற்றியும் சாப்பிட்டதில் வயிறு நிறைந்து போனது.அடுத்து கெட்டித்தயிரில் சாதம் பிசைந்து கொஞ்சம் மட்டன் தொக்கினை தொட்டுக்கொண்டு சாப்பிட செம டேஸ்ட்...
நன்கு திருப்தியாய் சாப்பிட்டு கை கழுவி உட்கார்ந்தோம்..சாப்பிட்டதற்குண்டான பில் மட்டும் திருப்தியை தரவில்லை.விலை சற்றே கொஞ்சம் அதிகம்.அந்த ஊரில் விலை அதிகம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.மட்டன் அளவுகள் மிக குறைவாகத் இருக்கின்றன.150 கிராம் இருக்குமா என்பது சந்தேகமே.டேஸ்ட் நன்றாக இருக்கிறது.ஆனால் விலை மட்டும் மிக அதிகமாக இருக்கிறது.சர்வீஸ் என்பது முதல் முறை வைக்கும் போது மட்டும் நன்றாக இருக்கிறது.அதற்கப்புறம் கேட்டு கேட்டு சாப்பிட வேண்டி இருக்கிறது.
இந்த ஹோட்டலில் மட்டன் கொத்துக்கறி தொக்கு மற்றும் ரசம் சூப்பர்.ரசம் சான்சே இல்லை.எலும்பு போட்ட ரசம் நன்றாக இருக்கிறது.
அந்தப்பக்கம் போனிங்கன்னா ரசத்துக்காக போகலாம்.ஏன்னா ரசத்துக்கு மட்டும் தான் விலை இல்லை.
செம டேஸ்ட்....விலையைப் பத்தி கவலைப்படாதவங்க தாராளமா போகலாம்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
ரசத்துக்கு மட்டும் தான் விலை இல்லை.
ReplyDelete////
ரசம் மட்டும் கொடுப்பாங்களா ஜீவா?!
சாப்பாடு வாங்கிகிட்டு ரசம் வாங்கிகிங்க...
Deleteஎலும்பு ரசம் இதுவரை கேள்விப்பட்டது இல்லை.. எச்சில் ஊரும் பதிவு..
ReplyDeleteசாப்பிட்டு பாருங்க...செம டேஸ்ட்..
Deleteஉங்கள் சாப்பாட்டு பதிவுகளை வழக்கமா ரசிப்பேன்.அன்னவாசலில் பிரியாணி சூப்பர் என்றால் உங்கள் ரசனையை சந்தேகப்பட வேண்டியுள்ளது
ReplyDeleteஅதென்னமோ தெரில, நான் போன அன்னிக்கு எனக்கு பிடிச்சி இருந்தது.நான் எப்பவும் பிரியாணிக்கு குழம்போ, தால்ச்சாவோ தொட்டுகிட்டு சாப்பிடமாட்டேன்.பிரியாணியை அதோட டேஸ்ட்டோடவே சாப்பிடுவேன்.அதுமட்டுமல்ல பெரும்பாலான கடைகளில் பிளைன் பிரியாணி மட்டுமே நன்றாக இருக்கிறது.
Delete