படித்தது :
இப்போதெல்லாம் கவிதை, இலக்கியம் நாவல், வரலாறு இப்படி இருக்கிற புத்தகங்களை படிச்சா செம போர் அடிக்குது.ரசனை மாறி விட்டது என்று நினைக்கிறேன்.சமீபத்தில் கோவை புத்தக கண்காட்சியில் வாங்கின கொலை, கொள்ளை, மனதை பதைபதைக்க செய்யும் கொடூர செயல்கள் நிறைந்த வழக்குகளின் புத்தகம் படிச்சேன். செம விறுவிறுப்பு, திரில்லிங், ஆச்சர்யம், வியப்பு, பயம், கொஞ்சம் அசூயை என எல்லா உணர்வுகளும் கலந்து கட்டி நாடி நரம்புகளை அசைக்கின்றன.கிரைம் மன்னன் ராஜேஷ்குமார் நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்ததைப் போல் இருக்கிறது இந்த புத்தகம்.வைதேகி பாலாஜி எழுதின கொடூரக் கொலை வழக்குகள்.
பிடித்தது:
அதிகம் அசைவம் சாப்பிட்டாலும் அவ்வப்போது ஏதோ ஒரு இனிப்பு நம்மை ஆட்கொண்டுவிடும்.ஆனால் எப்போதும் என்னை வசீகரிக்க கூடிய இனிப்பு என்றால் அது ரவா கேசரி தான்.மாதத்திற்கு இரு தடவை வீட்டில் இடம் பெற்று விடும்.செய்வதும் எளிது என்பதால் உடனடி இனிப்பு பலகாரம் அதுதான்.கேசரியில் தூவப்பட்டிருக்கும் நெய்யில் வறுத்த முந்திரிகள் வாயில் கடிபடும் போது அதன் சுவை இருக்கிறதே.ஆஹா ..அற்புதம்
தித்திப்பு...கேசரியின் நிறமும், நெய்யின் மணமும் நிச்சயம் மனதை உருக்கும்.வாயில் உமிழ்நீரை சுரக்கும்.கேசரியின் ஒவ்வொரு ரவையும் உதிரி உதிரியாக சாப்பிட சாப்பிட சுவையாக இருக்கும்.ஏர்செல் ஆபிஸ் பக்கத்தில் இருக்கிற சாய்ராம் பவனில் கேசரியின் சுவை மிக டேஸ்டாக இருக்கும்.
சமோசா :
மாலை வேளைகளில் சுடச்சுட சமோசா சாப்பிட எப்பொழுதும் பிடிக்கும்.மெலிதான் மைதா பேப்பரை முக்கோண வடிவில் மடித்து அதில்
காரமிட்டு வதக்கிய வெங்காயம் மட்டும் வைத்து எண்ணையில் பொறித்து தரப்படும் சமோசாதான் எங்கள் ஏரியாவில் கிடைக்கும்.நன்கு பொறிந்தவுடன்
மொறுமொறுப்பாலும் வெங்காயம் வெந்ததினாலும் ஏற்படும் மணத்திலேயே நம்முடைய பசியை அதிகரிக்க செய்யும்.வாங்கி ஒரு கடி கடித்தால் போதும்
ஆவியுடன் மணமும் சுவையும் வெளிவரும்.ஒரு காலத்தில் கல்பனா தியேட்டர் இடைவேளையின் போது வாங்கி சாப்பிடுவோம்.இப்போது ஞாயிறு தோறும் கூடும் சந்தையில் சுடச் சுடச் சமோசா சுட்டுக்கொண்டிருப்பார்கள் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் போகும் போது மூக்கை துளைக்கும்.எப்பவாது ஒரு முறை வாங்கி சாப்பிடுவோம்.இப்பொழுது கவுண்டம்பாளையத்தில் டிவிஎஸ் நகர் செல்லும் வழியில் பாலம் தாண்டி இடது புறம் ஒருவர் சின்னதாய் கடை ஆரம்பித்து இருக்கிறார்.மாலை வேளைகளில் சுடச்சுட சமோசா போட்டுக்கொண்டிருப்பார்.உருளைக்கிழங்கு மசாலா, வெஜிடபிள் சமோசா மற்றும் மட்டன் கைமா சமோசா என மூன்று வெரைட்டிகளில் போட்டுக்கொண்டிருப்பார்.எப்பவும் போல சமோசாவிற்கென்று உள்ள சுவை இங்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.அளவும் பெரிதாகவே இருக்கிறது.சாப்பிடவும் நன்றாக இருக்கிறது,விலை 7 ரூபாய் மட்டன் 10 ரூபாய்.பீஃப் இறைச்சி இல்லை.
நேசங்களுடன்
ஜீவானந்தம்

சுவைபட எழுதி எங்களது நாவில் ஜொள் விட வைத்து விட்டிர்கள் நன்றி
ReplyDeleteஇந்த சமோசா பிடிக்கும்.. பெரிய சமோசா பிடிக்காது
ReplyDelete