அன்பைச் சொல்ல அழகான வழி
நண்பர் திண்டுக்கல்.இப்பொழுது
சென்னை வாசி.கோயம்பேடு மார்க்கட்டில் மொத்த வியாபாரம்.எனக்கும் அவருக்கும் அதிக
பட்சம் இரண்டு மூன்று சந்திப்புகள் தான்.வருடத்திற்கு ஒரு முறை தொலைபேசி உரையாடல்
எப்பவோ எதற்காகவோ இருக்கும்.சென்னை வந்த போது ஒரு ஞாயிறு அன்று அவரை பல வருடங்களுக்கு பிறகு
சந்தித்தேன்.பின் வந்த இரண்டு நாட்களும் எனது வேலையில் பிசியானேன்.நேற்று காலை
அவரிடம் “இன்றிரவு சென்னையில் இருந்து கிளம்புகிறேன் என்றேன்.” “ஓகே மாப்ள”, என்று சொல்லி விட்டு இரவு
எட்டரை மணிக்கு அழைத்தார்.
எந்த ட்ராவல்ஸ், சீட் நம்பர் என கேட்டுவிட்டு தொடர்பை
துண்டித்தார்.ஒன்பதரை மணிக்கு பஸ்ஸிற்கு கொஞ்சம் பத்து நிமிடம் வந்து சேர்ந்த போது
மீண்டும் அவரிடமிருந்து அழைப்பு.என்னவென்று கேட்டால் லக்கேஜாக காய்கறிகள்
வச்சிருக்கேன் ஊரில் போய் மறக்காமல் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.நான்
சங்கோஜப்பட்டு எதற்கு இதெல்லாம் என்றேன்..அட கொண்டு போங்க..பார்சலை எடுத்து விட்டு
போன் பண்ணுங்கள் என்றார்.சரி என்று சொல்லிவிட்டு இரவு வணக்கம் சொல்லிட்டு முதலில்
பேஸ்புக்கிலும், பிறகு ஆழ்ந்த நித்திரையிலும் மூழ்க ஆரம்பித்தேன்.அடுத்த நாள்
காலை..அதான் இன்று கோவை வந்தடைந்த பின் பேருந்தின் லக்கேஜ் பகுதியில் பார்த்தால்
ஒரு மூட்டை காய்கறிகள் இருக்கின்றன..
ஆச்சர்யத்திலும்
அதிசயமும் அடைந்து போன் போட்டு….”யோவ்..என்ன மாமா...ஒரு விசேசத்திற்கு அனுப்புற
மாதிரி அனுப்பி வச்சிருக்க..இதை தின்னு தீர்க்கவே ஒரு மாசம் ஆகுமே” என்றவுடன்..சும்மா
வச்சி சாப்பிடுய்யா என்று சொல்லி நலம் விசாரித்து விட்டு போனை
வைத்துவிட்டார்.அதற்கப்புறம் அந்த மூட்டையை பேருந்து பணியாளின் உதவியுடன் கீழே
இறக்கி வைக்க, அதற்குள் நம்ம ஆட்டோ ட்ரைவர் வந்து சேர, அவரும் ஆச்சர்யப்பட்டு
" உலகத்திலேயே மெட்ராஸில் இருந்து காய்கறி வாங்கி வந்தது நீங்களாகத் தான்
இருக்கும் என சொல்லியபடியே ஆட்டோவில் ஏற்றி, என்னையும் ஏற்றிக் கொண்டு வீட்டிற்கு
வர..
மனைவியும்..என்னங்க இது..என ஆச்சர்யப்பட, மேலே
எழுதியதை இருக்கும் மீண்டும் சொல்லியபடி வீட்டிற்குள் நுழைந்தேன்..இனி வீட்டில்
தினமும் வெங்காய சாம்பார், வெங்காய வறுவல், வெங்காய சட்னி, வெங்காய பொரியல்,
வெங்காய ஃபிரை, வெங்காய பகோடா என நினைக்கிறேன்.
நன்றி மாம்ஸ்..இந்த அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை..
நேசங்களுடன்
ஜீவானந்தம்
No comments:
Post a Comment
வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....