ஞாயிறு.. மதிய நேரத்தில் பொழிந்த மழையினூடே கடையை தேடி பயணித்தோம்.கடை என்பது நம்ம அரசாங்க கடை அல்ல.நல்ல சுவை மிகு உணவைத் தேடி.எப்பொழுதோ கோவையில் தனது கிளையை பரப்பியுள்ள ஸ்டார் பிரியாணி ஹோட்டலுக்கு சென்றோம்.பிரியாணிக்கு புகழ் ஆம்பூர்தான்.அங்கு கிடைக்கும் அதே சுவை இருக்குமென நினைத்து பிரியாணியை ஆர்டரிட்டோம்.
சென்னை வேலூர் ஆற்காடு மாவட்டத்தைப் பொறுத்தவரை பிரியாணிக்கு பாசுமதி அரிசிதான்.ஆனால் இங்கோ பாசுமதிக்கு பதில் சீரக சம்பா..சம்பாவிற்கென உண்டான சுவையும் இல்லை.சாதம் குழைந்தது போலவே இருக்கிறது. பிரியாணியின் நிறம் மட்டும் கொஞ்சம் ஒத்திருக்கிறது.மட்டன் துண்டுகள் பெரிதாக இருந்தாலும் எலும்புகளே ஆக்ரமிக்கின்றன.பிரியாணி சாப்பி்ட்ட உணர்வே இல்லை.இதற்கு கொடுத்த கத்தரி கட்டா சுவையாக இருந்தது.
பிரியாணி சொல்லிக் கொள்வது போல இல்லை.கடையில் வேலை செய்பவரிடம் அரிசி பற்றி கேட்டால் ஆம்பூரில் சீரகசம்பா தான் போடுகிறார்களாம்.அப்படி இருந்தும் சீரக சம்பாவிற்கென்ற ருசி இல்லை.வேலூர் மாவட்ட பிரியாணி நிறத்தில் தான் இவர்களின் பிரியாணியும் இருக்கிறது.ஆனால் சுவை குறைவாகவே இருக்கிறது.வேலூரில்
டூப்ளிகேட் கடைகள் நிறைய இருந்தாலும் அங்கு இதை விட கொஞ்சம் நன்றாகவே இருக்கிறது.வாணியம்பாடியில், ஆம்பூரில் ஒரு சில கடைகளில் சாப்பிட்டு இருக்கிறேன்.அங்கு சாப்பிட சுவையாகவே இருக்கிறது.ஆனால் இந்த கடையில் நன்றாக வே இல்லை.
மழைக்கு இதமாய் காரஞ்சாரமாய் இருக்கும் என ட்ரை அயிட்டங்கள் ஆர்டர் செய்தால் அதுவும் நன்றாகவே இல்லை.இறால் ஃபிரை ஏதோ பகோடா சாப்பிட்ட உணர்வைத் தான் தந்தது.ஹைதராபாத் ஃபிரை என்று ஒன்று.அதுவும் நன்றாகவே இல்லை.அதே போல் எக் பிரைடு ரைஸ்..அரிசி அரைவேக்காட்டில்..வடிச்ச சாதத்தில் அப்படியே போட்டு பிரட்டி கொண்டு வந்தது போல இருக்கிறது.கொஞ்சம் கூட ட்ரை ஆகவே இல்லை.
சர்வீஸ் சுத்த மோசம்.ஆர்டர் எடுத்ததில் இருந்து பில் வந்தது வரை ரொம்ப ஸ்லோ..இந்த ஞாயிற்றுக்கிழமை பிரியாணிக்கு ஆசைப்பட்டு மோசம் போனது இந்த ஸ்டார் பிரியாணியில் தான்.விலையும் எப்பவும் போலவே கோவைக்கு ஏற்றார்போல இருக்கிறது அதிகமாய்...
இனி அந்தப்பக்கம் தலைவைத்து படுப்போம்...
நேசங்களுடன்
ஜீவானந்தம்
No comments:
Post a Comment
வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....