இன்று வெளியான தலைவரின் தர்பார் முதல் நாள் முதல் காட்சி கே,ஜி சினிமாஸில் பார்த்தேன்.
பக்கா மாஸ் மசாலா படம்.படம் முழுக்க ரஜினியின் ஸ்டைல்தான்.கதை என்று பார்த்தால் ஒரே ஒரு ஒன் லைன் தான்.ஆனால் ரஜினியின் ஸ்டைல், ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் படத்தை பரபரவென சுவாரஸ்யமாக்குகிறது.நயன்தாரா கொள்ளை அழகு.ஊறுகாயாய் இருக்கிறார் படத்தில்.நிவேதா தாமஸ் அழகோ அழகு.அவருக்கு ஸ்கோப் அதிகமாக இருக்கிறது.யோகிபாபு அவ்வப்போது கவுண்டரடிக்கிறார்.காதைக் கிழிக்காத அனிருத்தின் இசை, சும்மா கிழி பாடல் மிரட்டுகிறது.இயக்குநர் முருகதாஸ் எங்கே போனார் என தெரியவில்லை.ஆனால் படம் போரடிக்காமல் செல்கிறது.
தர்பார் அப்டேட்ஸ் - 1
என் பையன் இரண்டாவது படிக்கிறான்.ரஜினியின் வெறித்தனமான ரசிக வாண்டு.தர்பார் டீசர், ட்ரைலர், பாட்டு என ஒவ்வொன்றையும் பல முறை பார்த்து எப்போ 9 ம் தேதி வரும் என ஆவலோடு காத்திருந்தவன் இன்று முதன் முறையாய் FDFS அதிகாலை நேரம், ஆரவார கூச்சல்கள், கைதட்டல்கள், விசில்கள், பட்டாசு, மேள தாளங்கோடு இன்று தலைவரின் தர்பாரை ரசித்து விட்டான்.படம் முடியும் வரை இமை கொட்டாமல் ரசித்து பார்த்தவன், படம் முடிந்தவுடன் அப்பா, இந்த படத்தை எனக்கு மொபைலில் ஏத்திக் கொடுப்பா என்கிறான்.காரில் அமர்ந்தவுடன் சும்மா கிழி பாட்டை போடுப்பா ங்கிறான்..
இதை விட பெரிய விசயம்..அவன் நேற்று பள்ளிக்கு செல்லும் முன், "நாளைக்கு தர்பார் படத்துக்கு போறதால் லீவ் சொல்லனும்..நான் நாளைக்கு எனக்கு காய்ச்சல் அப்படின்னு சொல்லிட்டு வந்துறவா " என கேட்டான் பாருங்க..
அய்யோ சாமி...
ஒரு ரசிகன் உருவாகிறான்...
தர்பார் அப்டேட்ஸ் - 2
வியாழக்கிழமை ஷீரடி சாய்பாபாவை தரிசனம் செய்வர்.இன்று தலைவரை தரிசித்திருக்கிறோம்.தர்பார்..பத்து பேட்டைக்கு சமம்.படம் முழுக்க முழுக்க தலைவரின் தர்பார்தான்.ஸ்டைல் மன்னன்.ரஜினியின் ஒவ்வொரு அங்க அசைவுமே ரசிக்க வைக்கிறது.படம் செம ஹிட்.கண்டிப்பாய் அனைவருக்கும் பிடிக்கும்.
தர்பார் அப்டேட்ஸ் - 3
அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார்தான்.. பக்கா மாஸ்.தலைவரின் துள்ளலான ஸ்டைல் செம..நயன்தாரா அழகோ அழகு...வயசானாலும் சிங்கம் சிங்கம் தான்..
நேசங்களுடன்
ஜீவானந்தம்.
நல்ல விமர்சனம். தில்லியில் பார்க்கலாம் என நினைத்தால் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டும்! அதனால் பிறகு தான் பார்க்க வேண்டும்!
ReplyDeleteகாய்ச்சல் என லீவு சொல்லிடவா... கலக்குகிறார் ஜூனியர் ஜீவா! :)
அட இவர் நம்ம ஆளு, 👍👌🤘
ReplyDelete