Showing posts with label Pallapatti. Show all posts
Showing posts with label Pallapatti. Show all posts

Thursday, October 25, 2018

கோவை மெஸ் - சஃபா பிரியாணி, பள்ளப்பட்டி, PALLAPATTI, KARUR


                                   இரண்டு நாட்களுக்கு முன்பு பழனி சென்றுவிட்டு கரூர் வந்தேன்.வரும் வழியில் பள்ளபட்டியில் பிரியாணி சாப்பிடலாம் என்று அங்கு வண்டியை திருப்பினேன்.முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் ஊர் என்பதால் பிரியாணியும் சுவைமிக்கதாக இருக்கும் என்று நம்பி(?)ப் போனேன்.பள்ளபட்டியில் ஒருவர்க்கு இரண்டு பேராய் விசாரித்தேன்.பிரியாணி எங்கு நன்றாக இருக்கும் என்று.இருவரும் சொல்லி வைத்தது போல ஒரே கடையை சொன்னனர்.அந்த ஊரில் இருப்பதே மொத்தம் மூன்றுகடைகள் தான் போல.மூன்றில் இது நன்றாக இருக்கும் என்று சொல்லியதால் அங்கு போனேன்.
                                             கடை நல்ல கூட்டமாகத்தான் இருந்தது.குல்லா போட்டா பாய்களில் ஒருவர் கல்லாவிலும், ஒருவர் சப்ளையிலும் பம்பரமாய் சுற்றிக் கொண்டிருந்தனர்.(முஸ்லீம் கடையாமாம்..)கடை முன்பே தோசைக்கல்லில் புரோட்டா வெந்து கொண்டிருந்தது.காடை, சிக்கன் எல்லாம் மசாலாவில் ஊறி எண்ணையில் பொறிவதற்கு காத்துக் கொண்டிருந்தன. சின்ன கடைதான்.பதினைந்து பேர் அமரக்கூடிய இடவசதி.அனைத்து டேபிள்களும் நிரம்பியிருந்தன.அப்போது காலியான ஒரு சேரில் அமர, பிரியாணியை ஆர்டரிட்டேன்.
                                                   பெரும்பாலோனோர் புரோட்டா சிக்கன் குருமாவை காலி செய்து கொண்டிருந்தனர்.பிரியாணி வந்தது.சம்பா அரிசிதான் அரைகுறை வேக்காட்டில்.
பிரியாணிக்குண்டான மணமும் குறைவுதான்.சிக்கன் துண்டும் மிருதுவற்று இருந்தது.அதற்கு கொடுத்த சிக்கன் குருமாவும் சரியில்லை.கொஞ்சம் வரைக்கும் சாப்பிட்டேன்.முடியவில்லை.அப்புறம் கடைக்காரை கூப்பிட்டு அரிசியின் பதத்தை காட்டிவிட்டு, நம்பி வந்தேன் நல்லாவே இல்லீங்களே என சொல்லி விட்டு பணம் தந்து விட்டு கிளம்பினேன்.


                           அறுபது ரூபாய்க்கு என்ன ஹைதராபாத் பாரடைஸ் பிரியாணியா தரமுடியும்.விலை குறைச்சலா இருந்தாலும் சுவையை தூக்கலா தரமுடியும்.ஆனா விலையும் குறைவு டேஸ்டும் சுத்தமும் இல்லாம இருக்கு.மற்ற இரு கடைகளை முயற்சிக்கலாமா என யோசித்தேன்.முன்பே இந்த கடை நன்றாக இருக்கும் என்று சொன்னதை நம்பி வந்ததால் இந்த நிலைமை.அந்த கடைகள் எப்டியிருக்குமோ..எதற்கு ரிஸ்க்..பேசாமல் கரூர் போய் கரம் சாப்பிட்டுக் கொள்ளலாம் என நினைத்து வண்டியை கிளப்பினேன்.முஸ்லீம்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதி..ஒரு பிரியாணி கூட டேஸ்டா கிடைக்க மாட்டிக்குதே...பீஃப் கூட கிடைக்கல அங்கு...தள்ளுவண்டில ஜம்ஜம் பிரியாணின்னு ஒன்ணு நின்னுச்சு..பீஃப் வறுவல் கிடைக்கும் போட்டிருந்தது. பேசாம அங்கயும் ஒரு கை பார்த்திருக்கலாம்...
கடைசியா கரூர் வந்து முட்டை கரம் டேஸ்ட் பார்த்ததில் தான் மனமும் வயிறும் கொஞ்சம் ஆசுவாசமடைந்தது.



நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...