Sunday, September 11, 2011

கோவை மெஸ் - திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கடை, திண்டுக்கல்

திண்டுக்கல் அப்படினாலே பூட்டு தான் பேமஸ்.ஆனா இப்போ பிரியாணி தான் பேமஸ்.அவ்ளோ பிரியாணி கடை இருக்கிறது திண்டுக்கல்லில்.அதில் மிக்க பாரம்பரிய சுவை கொண்ட பிரியாணியை அறிமுகப்படுத்தியது தலப்பா கட்டி பிரியாணி கடைதான்.இந்த கடை முதலில் பெட்டிக்கடை போல செயல் பட்டு கொண்டிருந்ததாம்.இப்போது அக்கடைக்கு எதிர்புறத்தில் புதிய கிளை இருக்கிறது .பழைய கடை பார்சல் கட்டி தருவதற்காக இருக்கிறது.எப்பவும் போல கூட்டம் அள்ளுகிறது.அப்புறம் சுவை முன்பு மாதிரி இப்போது இல்லை என்கிற வருத்தம் வந்து சாப்பிடும் அனைவரது சொல்லிலும் இருக்கிறது.ஆனாலும் வெளியூர் வாசிகள் கூட்டம் கூட்டமாய் வருகிறார்கள்.அப்புறம் கோவையில் உள்ள தலப்பா கட்டி பிரியாணி கடையில் தலைக்கறி அவ்வளவு சுவையாய் இருக்கும்.ஆனால் திண்டுக்கல்லில் நன்றாகவே இல்லை.பிரியாணிக்கு பருப்பு போட்ட தால்ச்சா கொடுக்கிறார்கள்.திண்டுக்கல் போனால் சாப்பிட்டு பார்க்கலாம்

 

 நேசங்களுடன்
ஜீவானந்தம்


7 comments:

  1. பிரியாணியா வெளுத்து கட்ரீங்க போல

    ஹா ஹா கொடுத்து வச்ச மஹராசன்

    நல்லா இருங்க

    படம் அருமையாக இருக்கு நண்பரே

    ReplyDelete
  2. வாங்க .நண்பரே ..நீங்களும் வந்தால் வெளுக்கலாம் ..ஹி..ஹி. பிரியாணியை ..

    ReplyDelete
  3. கோவை நேரம் said...

    வாங்க .நண்பரே ..நீங்களும் வந்தால் வெளுக்கலாம் ..ஹி..ஹி. பிரியாணியை .

    எங்க நண்பரே நான் வருவதற்க்குள் அனைத்தும் தங்கள் வயிற்றுக்குள் போய் விடும் போல் உள்ளது

    ReplyDelete
  4. அய்யய்யோ பிரியாணியை காட்டி பசி உண்டாக்கிட்டீன்களே....

    ReplyDelete
  5. நான் சமீபத்தில் திண்டுக்கல் சென்றிருந்தேன்.. ஆனால் தலப்பா கட்டி சாப்பிடமுடியாம போச்சி..

    பாடங்கள் அருமை, இந்த நேரத்துல பிரியாணி கடைய தேட வச்சிடிங்க பாஸ்..

    ReplyDelete
  6. குடிமகன் ..எனக்கு ஒரு போன் பண்ணியிருந்தா உங்களுக்கு ஞாபகம் செய்திருப்பேன் ...(வாங்கி தருவேன்னு நினைச்சீங்களா ..ஹி..ஹி )

    ReplyDelete
  7. விரிவாக எழுதுங்கள் கோவை நேரம்

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....