Saturday, February 9, 2013

கோவை மெஸ் - தக்‌ஷின் நவ்ஷிஜான் (Dakshin naushijaan) காந்திபுரம், கோவை

கோவை காந்திபுரம் கற்பகம் காம்ப்ளக்ஸ் எதிரில் இருக்கிற ரோட்டில் கொஞ்ச தூரம் சென்றால் இந்த ஹோட்டலை அடையலாம்.வீட்டினை ஹோட்டலாக மாற்றி இருக்கின்றனர்.வீட்டில் இருக்கின்ற அத்தனை பெட்ரூம் மற்றும் ஹால்களையும் தனித்தனி ரூம் ரூம் ஆக்கி டேபிள் போட்டு இருக்கின்றனர்...மெல்லிய இசை எப்போதும் ஒலித்துக்கொண்டு இருக்கிறது..அத்தனை சுத்தமாக இருக்கிறது அனைத்தும்..
நண்பர்களுக்கு ட்ரீட் தர வேண்டி நானும் நண்பர் கோவை ஆவி அவர்களும் அங்கு சென்றோம்...இருவரும் ஒரே நாளில் பிறந்தவர்கள் என்பதால் ஒன்று கூடினோம்...
மெனு கார்டினை பார்க்க எல்லாம் புதிது புதிதாக இருந்தது.ஒவ்வொன்றாய் ஆர்டர் பண்ணினோம்...
 
  
சிக்கன்ல நிறைய கபாப் இருக்கு..அதுல ஒண்ணு கல்மி டிக்கா கபாப்...பேரே வாய்ல நுழையமாட்டேன்குது..ஆனா சிக்கன் செம டேஸ்டா நுழையுது... எல்லாம் நார்த் இண்டியன் வகைகள்...அளவு குறைந்த பீஸ்கள்..ஆனால் டேஸ்ட் அதிகம்...அப்புறம் மொகலாய் பரோட்டா...இது செம சாஃப்ட்....சாப்பிட சாப்பிட நன்றாக இருக்கிறது...நம்மூர் புரோட்டா போல பிச்சி போட்டு குருமா விட்டு கலந்து கட்டி சாப்பிட முடியாது...தொட்டாலே பிய்ந்து வருகிறது அவ்ளோ சாஃப்ட்...செம டேஸ்ட்...

சிக்கன் காந்தாரி கபாப்...சிக்கன் புதினா கபாஃப் என ஏகப்பட்ட மெனுக்கள்...அனைத்தும் நன்றாக இருக்கிறது....
இது மட்டன் களாவாட்டி கபாஃப்...என்ன பேருன்னு வாயிலயே நுழையில... மட்டன்  வடை போன்ற அமைப்பில்...அவ்ளோ மெது மெதுன்னு...கையில் எடுக்கவே பிய்ந்து விழுகிறது..ஸ்பூனில் தான் எடுத்து சாப்பிட்டோம்...அவ்ளோ டேஸ்ட்..
வெஜிடபிளில் ஒண்ணு ஆர்டர் பண்ணினோம்...ஹனி ஃபிங்கர் சிப்ஸ்...இது ஃபிங்கர் ஃபிரையை தேனில் பிரட்டி ஃபிரை பண்ணியிருந்தனர்...செம டேஸ்ட்...

இது சிக்கன் ரோல் போன்ற மெனு...ஏதோ சொன்னோம்...ஒரு ட்யூப் போன்று வடிவில் சிக்கன்..இதுவும் செம டேஸ்ட்...மெனுக்கள் அனைத்தும் புதிதாய் இருக்கிறது .சாப்பிட சுவையாய் இருக்கிறது...பில் வரும் வரை..

அதுக்கப்புறம் மட்டன் பிரியாணி, ரைஸ் புலாவ்..என அடுத்த அயிட்டம்....புலாவ் நன்றாக இருக்கிறது...மட்டன் பிரியாணி மட்டன் தனியாக ரைஸ் தனியாக இருக்கிறது...பாசுமதி ரைஸ் தான்....சுவை நம்மூர் பிரியாணி போன்று இல்லை...சாப்பிட்டு பார்க்கலாம்...
சுவை அதிகம் ஈர்த்தது என்பதினாலும் நல்ல சூழல் அமைப்பினை கொண்டு இருப்பதாலும் தொடர்ந்து மூன்று முறை சென்றுவிட்டேன்...விலை கொஞ்சம் அதிகம் தான்..ஆயினும் சுவை நன்றாக இருக்கிறது.ஒவ்வொரு வார இறுதியிலும் பிரியாணி பபே, மற்றும் பஃபே திருவிழா இருக்கிறது....போனால் செம கட்டு கட்டலாம்...அதிக நான் வெஜ் வகைகள் பஃபே மெனுவில் இருக்கின்றன...

நேசங்களுடன்
ஜீவானந்தம்

19 comments:

  1. ட்ரீட் சூப்பர்.
    எனக்குத்தான் சிக்கன் வகையறாக்களை
    சாப்பிட கொடுத்து வைக்கவில்லை.

    இன்னும் இது போல் அறுபது பிறந்தநாள்
    கொண்டாட வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. போதும் சார்..அறுபதுலாம் வேணாம்...

      Delete
  2. //விலை கொஞ்சம் அதிகம் தான்..ஆயினும் சுவை நன்றாக இருக்கிறது//

    When the food is delicious, cost can be digested...

    Photos are not only eye catching but also watering the tongue..

    good post....

    ReplyDelete
  3. இரு நண்பருக்கும் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. Machi, waiting for Sunday's Keda!! ;-)

    ReplyDelete
  5. அட...கற்பகம் காம்ப்ளக்ஸ் அருகில்தான் என் நண்பனின் ஏரியா- அதாவது நான் தங்குவது. ஞாபகம் வெச்சு்க்கறேன் ஜீவா. நல்ல இடத்தை அறிமுகப்படுத்தினதுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சார்...ஒரு நாள் மீண்டும் சாப்பிடலாம்...

      Delete
  6. பிறந்தநாள் வாழ்த்துகள்.

    உணவுகள் அருமையாக இருக்கின்றது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி....ஆமா...ரொம்ப நல்லா இருக்கும்.

      Delete
  7. இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    (வேறு என்னத்தைச் சொல்லுறதாம்.... ரெண்டு பெரும் நல்லா சாப்பிட்டுவிட்டு வந்து எங்களுக்கு வெறும் படத்தையும் பில்லையும் போட்டுக் காட்டி....
    வெறுப்பேத்தினதற்கு...)

    ReplyDelete
  8. கோவைக்கு ஒரு டிக்கெட் !!!! இப்போவே சாப்பிடனும் போல இருக்கே......

    ReplyDelete
  9. கோவை சென்றால் கண்டிப்பாக நானும் சென்று பார்க்கிறேன் அறியத்தந்தமைக்கு நன்றி நண்பரே


    சிவாவின் கற்றதும் பெற்றதும்

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....