வடுகப்பட்டி - கவிஞர் வைரமுத்து
நண்பரோட ஒரு வேலை விசயமா வடுகப்பட்டி வரைக்கும் போக
நேர்ந்தது.அப்போ நம்ம வண்டியில இளையராஜாவின் இசையில் வைரமுத்துவோட வரிகளில்
இருக்கிற பாட்டை கேட்டுக்கிட்டே போய்ட்டு இருந்தோம்.அந்த ஊர்ல நுழையற வரைக்கும்
வடுகப்பட்டி ஒரு சாதாரண ஊராத்தான் நினைச்சிருந்தேன்.அப்பத்தான் நம்ம நண்பர்
சொன்னாரு ...டேய்.....இது தாண்டா கவிஞர் வைரமுத்து ஊர் என்று....
அப்போதான் உரைச்சது
எனக்கு....அட........ஆமால்ல....என்றபடியே மிகப்பெரிய ஆச்சர்யத்தினை அடைந்தேன் , கவிஞரோட
ஊர்லயே அவரோட பாட்டைக் கேட்டுகிட்டு போய்ட்டு இருக்கேனே என்று....
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் இருக்கிற வடுகப்பட்டி ஒரு
சிறு கிராமம் தான்.ஆறு, கோவில், வெறிச்சோடிக்கிடக்கும் தெருக்கள், ஒரு சில கடைகள்,
அருகிலேயே வயல்வெளிகள் என கொஞ்சமும் மாறாமல் இருக்கிறது.
ஊரின் உள்ளே நுழைய
தள்ளுவண்டியில் மூட்டை மூட்டையாய் வைத்து குப்பையில் கொட்ட வெளியேறிக்கொண்டிருந்தனர்
ஒரு சிலர்.என்னவென்று கேட்க, பூண்டு தொரளி என்றனர்.இங்கு பூண்டு மண்டி ரொம்ப
பேமஸ். அதனால் தரம் பிரிக்கும் போது உதிரும் பூண்டின் தோல்கள் என்று சொல்ல அப்போதுதான்
தெரிந்தது வடுகப்பட்டி வைரமுத்துக்கு மட்டுமல்ல பூண்டுக்கும் பேமஸ் என்று......வழிநெடுக
ஊரின் இருபக்கமும் பூண்டு மூட்டை ஏற்றப்பட்ட வண்டிகள் லோடு இறங்கியும்
ஏற்றிக்கொண்டும் நின்று கொண்டிருக்கின்றன.
ஒரு குடோனில் மகளிர் அணிக்கள் பூண்டுகளை
தரம்பிரித்துக் கொண்டிருந்தன.எப்பவும் போல கிராமத்திற்கே உண்டான பெட்டிக்கடைகள். அதில்
ஒரு நாலு பேர் நாலுவிதமாக பேசிக்கொண்டிருக்கின்றனர்.
அங்கிருந்த ஒரு பெரியவரிடம் கவிஞர் வைரமுத்து வீடு எங்க
இருக்குன்னு கேட்க, கொஞ்ச தூரம் உள்ளே போனீங்கன்னா வலது புறம் பூ டிசைன் போட்ட
வீடு இருக்கும், ரெண்டு வேப்ப மரத்துக்கு நடுவுல இருக்கும், வீட்டினை ஒட்டி ஒரு
பிள்ளையார் கோவில் இருக்கும் அதுதான் என்று சொல்லவும், உடனே அங்க
கிளம்பினோம்.ரோட்டின் அருகிலேயே இருக்கிறது கவிஞர் வீடு.. ஒரு மாடி வீடுதான்.
சாதாரணமாகத்தான்
இருக்கிறது. (சென்னையில மிகப்பிரம்மாண்டமா கட்டி இருப்பாருன்னு நினைக்கிறேன்...).
விசாரித்த பக்கத்து வீட்டுக்காரர்களிடம் எந்தவித உணர்வும் தெரியவில்லை.நம்மைத்தான்
ஆச்சர்யமாக பார்த்தார்கள். அவர்களுக்கெங்கே தெரியப்போகிறது ஒரு ரசிகனின் ஆர்வ மனப்பான்மை.
பிறந்ததில்
முதல் இடுகாட்டுக்கு போற வரையிலும் பாடல்கள் நம்மோடு இணைந்து இருக்கிறது.இப்போலாம்
கார்ல போகும் போதோ, பஸ்ல போகும் போதோ பாட்டு கேட்காம போறதே இல்ல.என்னிக்கு
ரேடியோவில் பாட்டு கேட்க ஆரம்பிச்சோமோ அன்னில இருந்து டிவி, ஆடியோ கேசட், இப்போ
ஐபாட், செல்போன், கம்ப்யூட்டர் இணையம் வரை எல்லாத்துலயும் கேட்டுட்டு
இருக்கோம்.பிடிச்ச பாடல்களை கேசட்ல ரிகார்ட் பண்ணி கேட்ட காலம் போய் இப்போ
மெமரிகார்ட், பென் டிரைவ், ஐபேட் இப்படி இதுல கேட்டுட்டு இருக்கோம்.
யார்
எழுதினாங்களோ, யார் பாடினாங்களோ, யார் இசை அமைச்சாங்களோ..இதெல்லாம் தெரியாது.ஆனா
மனதுக்கு இதம் அளிக்கும் பாடல்களை கேட்கும் ஒரு வர்க்கத்தினர் இன்னமும்
இருக்கத்தான் செய்கின்றனர். சந்தோசம், சோகம், இல்லே தனிமை இப்படி இருக்கும் போதோ ஏதோ
ஒரு பாடல் நம்ம மனத்தினை லேசாக்குது.நமக்காகவே எழுதப்பட்டதா நினைச்சி உருகி உருகி
கேட்கிறோம்.அப்படி கேட்ட பாடல்களில் வைரமுத்துவோட பாடல்களும் நிறைய இருக்கு.
அப்படித்தான்
அவரோட எத்தனையோ பாடல்களை நேரங்காலமின்றி
கேட்டிருப்போம், நமக்கென்று பிடித்ததை திரும்ப திரும்ப எவ்வளவு முறை
கேட்டிருப்போம், அதே போல எத்தனை முறை முணுமுணுத்திருப்போம்.இன்னும் எத்தனையோ பேர்
தங்களோட காதலை சொல்ல இவரோட பாடல் வரிகளை சுட்டு இருப்பாங்க.காதலியை கவர் பண்ண
எவ்ளோ காதல் வரிகளை சொல்லிருப்பாங்க.அவர் எழுதுன கவிதைத் தொகுப்பினை பரிசா
கொடுத்து தங்கள் காதலை டெவலப் பண்ணியிருப்பாங்க.பிறந்ததில் இருந்து இன்றைய
வரையிலும் ஏதோ ஒரு வகையில் அவரின் பாடல் வரிகளோடு பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
இப்போது
வரைக்கும் அவரின் வரிகளை இசையோடு சுவாசித்துக்
கொண்டிருக்கிறோம். நம் காலத்தில் வாழ்ந்து வரும் ஒரு புகழ்பெற்ற கவிஞரும், காலத்தால்
அழிக்க முடியாத எத்தனையோ பாடல்களைத் தந்தவரின் வீட்டினைக் காண ஆர்வமிகுதி
இருக்காதா ஒரு சராசரி ரசிகனுக்கு.... அவரைத்தான் இதுவரைக்கும் நேரில் கூட
கண்டதில்லை.புகைப்படங்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் மட்டுமே பார்த்த எனக்கு அவரது
வீட்டினையாவது காணும் பாக்கியம் கிடைத்ததே என்கின்ற போது மனம் மிக்க மகிழ்ச்சியடைந்தது.
அவரை தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய
பாரதிராஜாவிற்கும், தன் இசை மூலம் அவரது வரிகளை முணுமுணுக்க வைத்த இசைஞானி
இளையராஜாவிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.ஆறு தேசிய விருதுகள் பெற்ற கவிஞர்
வைரமுத்துவின் வைரவரிகளில் மனம் கவிழாதவர் யாருமில்லை.இனி வரப்போகும் சந்ததியினர்
கூட அவரின் பாடல்களை விரும்புவர் என்பது நிச்சயமே.....
நேசங்களுடன்
ஜீவானந்தம்
உழைப்பே அவர்களுக்கு பிரதானமாக இருக்கும் போது ஒரு ரசிகனின் ஆர்வ மனப்பான்மை அவர்களுக்கு எப்படித் தெரியும்...
ReplyDeleteஇனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
தங்களின் முதல் வருகைக்கு நன்றி.....
Deleteவணக்கம்
ReplyDeleteஉழைப்பின் மதிப்பு பற்றிய சிறப்பு பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி
பதிவு அருமை வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
மிக்க நன்றீ ரூபன்...
Deleteveetukkul pogavillaya nanbare?
ReplyDeleteஅவர் வீட்டுக்குள் நமக்கென்ன வேலை....நண்பரே...
Deleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி மேடம்...
Deleteவைரமுத்து பிறந்த ஊருக்கு போனீங்களே! எதாவது கவிதை எழுதினீங்களா!?
ReplyDeleteஅதான் அவரு எழுதறாரே...நான் வேற எழுதனுமா....?
Deleteஊர் அறிமுகம் நன்று.கவிஞர் ஊர்.............
ReplyDeleteமிக்க நன்றி......
Delete//அதில் ஒரு நாலு பேர் நாலுவிதமாக பேசிக்கொண்டிருக்கின்றனர்.// ஒவ்வொருத்தரும் அன்னியன் மாதிரி இருந்தா பல விதமா பேசுவாங்க..ஹி. ஹி. மொபைலில் இருந்து கமெண்ட்டே ஏறமாட்டிங்குது என்னென்னே தெரியல..
ReplyDeleteமொதல்ல மொபைல்ல மாத்துங்க....
Deleteகவிஞரை பற்றி ஒரு பேட்டியை என்னோட பதிவில் பகிர்ந்திருக்கேன். கடவுள் நம்பிக்கையில்லாத அவரோட வீட்டின் முன் பிள்ளையார் ? அவரோட முதல் பாட்டுக்கு ஐம்பது ரூபா தான் சன்மானம் வாங்கி இருக்கார். பிசினஸ் மோட்டீவா இருந்தா பக்தி பாடல் எழுதி பணம் சம்பாதிச்சிருக்க முடியும். ஆனா அவரு அப்படி செய்யல. கடவுள் நம்பிக்கை பற்றிய அவரது அணுகு முறை எனக்கு பிடிச்சிருக்கு. ஒரு வகையில் அவரது கருத்திற்கு உடன் படுகிறேன்.
ReplyDeleteநானும் உங்க பதிவை படிச்சேன்,,,,
Deleteதமிழ்த் திரையிசை பாடல்களின் வரலாற்றில்
ReplyDeleteபொன்னெழுத்துக்களால் தன பெயரை பதித்த
கவிப்பேரரசு அவர்களின் ஊர் பற்றியும்..
அவர்தான் உழைப்பு பற்றியும் அழகிய பதிவு நண்பரே...
மிக்க நன்றி நண்பரே....
Deletenalla kalaizhar.avarudaya "karuvachi kaviyam" really superb. ama nega eana kavithai or padal varikal eazhuthunika. because kamban veedu kadutharium padum eanpathu pola avar veedai partha ungaluku kavithai thonalaya?
ReplyDeleteHAPPY DEWALI
அவர் மாதிரி கவிதை எழுத நாம என்ன கவிஞரா...எங்காவது கடைக்கு சாப்பிட போனா அதே மாதிரி சமைக்க சொல்வீங்க போல...ஹிஹிஹி
Deleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்*
ReplyDeleteவாழ்த்துக்கள்,,,
Deleteபயண பகிர்வு அருமை! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி...வாழ்த்துக்கள்
Deleteகவிஞரின் ஊரைப்பற்றி தெரிந்துகொண்டோம்.
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
மிக்க நன்றி வாழ்த்துக்கள் தங்களுக்கும்
Deleteநல்ல எழுத்து, நேரில் சென்ற அனுபவம் கிடைத்தது.
ReplyDeleteவருகைக்கு நன்றி....
Delete