கோவையில் இருக்கின்ற ஒரு சில பதிவர்களின் முயற்சியால் KOVAI BLOGGERS ASSOCIATION ஆரம்பிக்கப்பட்டு இன்றோடு ஒரு வருடம் முடிந்து இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.இந்த ஒரு வருட காலத்தில் எங்களால் முடிந்த அளவிற்கு சில சேவைகளை செய்து இருக்கின்றோம்.
உலக புவி ஈர்ப்பு தினத்தில் புவி பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ROBERT BOSCH நிறுவனம் மற்றும் ப்ரூக்பீல்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 5 வயது முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நடைபெற்ற ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கியுள்ளோம்.
இந்த நிகழ்வில் தேசியவிருது பெற்ற ஓவியர் திரு ஜீவானந்தம் அவர்கள் நடுவராக பங்கேற்று பரிசினை வழங்கினார்.தோழி சரளா அவர்கள் பல விழிப்புணர்வு கருத்துக்களை கவிதையாக வழங்கினார்.தோழி எழில் அவர்களும் தன் கருத்துக்களை பட்டியலிட்டார்.
கோவை உக்கடம் டான் போஸ்கோ அன்பு இல்லத்தில் உள்ள 150 ஆதரவற்ற சிறுவர்களுக்கு இரவு உணவு வழங்கி சிறப்பித்தோம்.இந்நிகழ்வில் எழில் (நிகழ்காலம்), கோவை மு சரளா (பெண் எனும் புதுமை), அகிலா (சின்ன சின்ன சிதறல்கள் ), உலகசினிமா ரசிகன், கலாகுமரன் (இனியவை கூறல் ), ஆனந்த் (கோவை ஆவி ), வெண்பா சுஜாதா, பேஸ்புக் நண்பர் பிரசாந்த், மற்றும் திருச்சியில் பணிபுரியும் தலைமைக்காவலர் திரு முருகானந்தம் அவர்கள் தலைமையிலும் டான் பாஸ்கோ இல்ல நிர்வாகி தலைமையிலும் திருநங்கை சங்கீதா அவர்கள் தயாரித்த சுவைமிகுந்த இரவு நேர உணவை வழங்கி சிறப்பித்தோம்.
கோவை குப்பக்கோனாம்புதூரைச் சார்ந்த திரு மகேஸ்வரன் என்பவர் பிப்ரவரி மாதம் பேருந்து விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அவரின் மருத்துவ செலவுக்காக மாதா மாதம் சிறுதொகை அளிக்கப்பட்டது.
நம் அமைப்பு ஈரநெஞ்சம் அமைப்புடன் சேர்ந்து கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஆதரவற்றோர்க்கான மனநோய் காப்பகத்தில் அங்கிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது.இந்நிகழ்வில் கோவைப்பதிவர்கள் அமைப்பைச் சார்ந்த கலாகுமரன், அகிலா மற்றும், சரளா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவை உக்கடம் சரகத்திற்குட்டப்பட்ட முஸ்லீம் மஜீத் அமைப்பில் உறுப்பினராக இருக்கும் இஸ்மாயில் என்பவரின் மூலம் அவர்கள் சமூகத்தில் இருந்த ஆதரவற்ற பெண்ணுக்கு திருமண நிதியுதவி அளிக்கப்பட்டது.
அதே போல் டெல்லி தமிழ்க்குடில் அமைப்பால் அரியலூர் மாவட்டம் சிலம்பூரில் தோற்றுவிக்கப்பட்ட பொது நூலக கட்டுமான பணிக்கு நம் அமைப்பின் மூலம் நன்கொடை அளிக்கப்பட்டது.
அதே போல் இன்று கோவை PSG மருத்துவமனையில் இருதய வால்வு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த ரத்தினம் என்கிற 65 வயது பெண்மணிக்கு A + ரத்தம் 4 யூனிட் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து மிக நலமாக இருக்கிறார்.
மேற்கொண்ட நிகழ்வுகள் அனைத்திலும் பங்கேற்று, போதுமான செயல்திறனையும், நிதியுதவியையும் அளித்த உறுப்பினர்களுக்கு நன்றி...
இனி வரும் வருடமும் இது போன்று எங்களால் முடிந்த சேவைகளை தொடர்வோம் என்ற நம்பிக்கையில்
ஜீவானந்தம்
கலாகுமரன்
கோவை மு.சரளா
எழில் அருள்
அகிலா
பாஸ்கரன்
ஆனந்த் விஜயராகவன்
லக்ஷ்மணன் ஃபேஸ்புக்
ஜெகதீஸ்குமார் ஃபேஸ்புக்
பிரசாந்த் ஃபேஸ்புக்
அன்பழகன் ஃபேஸ்புக்
வெண்பா சுஜாதா ஃபேஸ்புக்

KOVAI BLOGGERS ASSOCIATION - Regd No :370/2012 . இந்தியாவின் முதல் வலைப்பதிவர்களுக்கான சங்கம் தோற்றுவித்தது நம் கோவையில் தான்.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
அட...அதுக்குள்ள ஒரு வருஷம் ஆயிருச்சா!
ReplyDeleteவாங்க...ஆமா/////
Deleteபெருமையாய் இருக்கிறது தல
ReplyDeleteநன்றி...வருகைக்கும் வாழ்த்திற்கும்..
Deleteநல்ல தலைமை இருக்கிற கூட்டம் எப்பவுமே செழிப்பா இருக்கும்.. வணக்கம் தல..
ReplyDeleteநன்றி...வருகைக்கும் வாழ்த்திற்கும்..
DeleteMy heartful wishes dear friends!
ReplyDeleteநன்றி...வருகைக்கும் வாழ்த்திற்கும்..
Deleteவாழ்த்துக்கள் மாம்ஸ் .,...நலம் நலம் பெற ஆவா ..!!!
ReplyDeleteநன்றி...வருகைக்கும் வாழ்த்திற்கும்..
Deleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி...வருகைக்கும் வாழ்த்திற்கும்..
Deleteவாழ்த்துக்கள் செயல் வீரர்களுக்கு ....!
ReplyDeleteநன்றி...வருகைக்கும் வாழ்த்திற்கும்..
Deleteஉங்கள் சமூகப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி...வருகைக்கும் வாழ்த்திற்கும்..
Deleteமிக நல்ல பணிகளை ஆற்றிவரும் கோவை வலைப்பதிவ நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! தொடருங்கள்! நன்றி!
ReplyDeleteநன்றி...வருகைக்கும் வாழ்த்திற்கும்..
Deleteநெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி...வருகைக்கும் வாழ்த்திற்கும்..
Deleteஇன்னும் பல சேவைகள் செய்து பதிவர்களின் வலிமையை உணர்த்துங்கள்..
ReplyDeleteகோவை நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்...
நன்றி...வருகைக்கும் வாழ்த்திற்கும்..
Deleteநல்ல விஷயம்.பதிவர்கள் சங்கம் அமைத்து,பொதுப் பணி செய்யும் உங்கள் அனைவரதும் முயற்சியும் செயலும் போற்றுதற்குரியது!வாழ்த்துக்கள்,தொடரட்டும் நற்பணிகள்!!!
ReplyDeleteநன்றி...வருகைக்கும் வாழ்த்திற்கும்..
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி...வருகைக்கும் வாழ்த்திற்கும்..
Deleteநற்பணிகளுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி...வருகைக்கும் வாழ்த்திற்கும்..
Deleteஅனைவருக்கும் வாழ்த்துகள்......
ReplyDeleteநன்றி...வருகைக்கும் வாழ்த்திற்கும்..
Deleteஜீவா,
ReplyDeleteகோவை வலைப்பதிவர்கள் அனைத்து வலைப்பதிவர்களுக்கும் முன் மாதிரியாக திகழ்கிறார்கள், சிறப்பான சேவைகளுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும், பயணம் தொடரட்டும்.
நன்றி...வருகைக்கும் வாழ்த்திற்கும்..
Deleteவாழ்த்துக்கள்... இது போன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு நகரிலும் தொடரவேண்டும்...
ReplyDeleteநன்றி...வருகைக்கும் வாழ்த்திற்கும்..
Deleteநல்ல பணிகள் பல செய்து வரும் ’ கோவை வலைப்பதிவர் கழகம் “ (KOVAI BLOGGERS’ ASSOCIATION) மென் மேலும் வளர்ந்திட வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅரவாணி சங்கீதா அவர்களைப் பற்றிய பதிவினையும் படித்தேன். அவருக்கும் எனது வாழ்த்துக்கள்!
நன்றி...வருகைக்கும் வாழ்த்திற்கும்..
Deleteஇனிவரும் ஆண்டுகளிலும் இன்னும் பல சமுதாய தொண்டுகளை ஆற்றிடவும் ,இயற்கையை காத்திடவும் பங்காற்றிட எங்கள் தோழமைகளுக்கு ஆயுளையும் வலிமையையும் கொடுக்க இந்நாளில் பிரார்த்திக்கிறேன் .
ReplyDeleteஒற்றுமை மட்டுமே ஓங்கிய உயரத்தை அடையாளம் காட்டும்
அத்தனை வலிமையான ஒற்றுமையுடன் நம் பயணம் தொடரட்டும் வாழ்த்தும் நெஞ்சங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
நன்றி...வருகைக்கும் வாழ்த்திற்கும்..
Deleteவெற்றிப்பயணம் தொடரட்டும்..
ReplyDeleteநன்றி...வருகைக்கும் வாழ்த்திற்கும்..
Deleteபெருமையாக இருக்கிறது .. ! மிக்க மகிழ்ச்சி ; ஒவ்வொரு நண்பருக்கும் வாழ்த்துக்கள் ;
ReplyDeleteநன்றி...வருகைக்கும் வாழ்த்திற்கும்..
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி...வருகைக்கும் வாழ்த்திற்கும்..
Delete