வைகை அணை, தேனி மாவட்டம்
கடந்த சில நாட்களுக்கு முன் வடுகப்பட்டி வரைக்கும் போய்ட்டு வந்தேன்.அப்போ
வடுகப்பட்டியில் இருந்து வைகை அணை 9 கி.மீ அப்படின்னு நெடுஞ்சாலைத்துறை போர்டு சொல்லவே,
அங்கிருந்து வைகை அணை நோக்கி நம்ம சிங்கம் சீறிட்டது.
வைகை அணை செல்லும் வழியில் ஒரு சர்க்கரை ஆலை கண்ணில் தென்பட்டது. ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை. தற்போது
பராமரிப்பு பணியில் அது இருப்பதால் அதிக கரும்பு வண்டிகளின் நெருக்கடி இல்லாமல்
ரோடும் ஆலையும் அமைதியாக இருக்கிறது.
கொஞ்சதூரத்தில் வைகை அணையின் மீன் பண்ணை வரவேற்றது.மீன் பண்ணையினை பார்வையிட
கால அவகாசம் குறைவாக இருந்ததால், வைகை அணையினை மட்டுமே பார்ப்போம் என்றெண்ணி
சிங்கத்தினை ஓரம் கட்டிவிட்டு வைகை அணை நோக்கி சென்றோம்.வண்டி நிறுத்தும் இடத்தில் தேனிமாவட்ட சுற்றுலாத்தளங்கள் பற்றின ஒரு போர்டு இருக்கிறது.அதை ஒரு பார்வை பார்த்துவிட்டு எத்தனிக்கையில் வைகை அணையில் தற்போது குறைவாகத்தான் நீர் இருக்கிறது என்று சொல்லி
வருத்தப்பட்ட நண்பரின் முகம் உடனே பிரகாசமடைந்தது அருகில் இருந்த கல்லூரி பஸ்
ஒன்று பக்கத்தில் நிற்கவே.... உள்ளேதான் சுற்றிப்பார்த்துக் கொண்டிருப்பார்கள்
என மனம் ஆசுவாசமடைந்தது. நுழைவு டிக்கட் 4 ரூபாய் தான்.அதைப்பெற்றுக்கொண்டு உள்
நுழைந்தோம்.
முதலிலேயே டைனோசர் ஒன்று ஒய்யாரமாக நின்றுகொண்டு கரையின் இருபுறமும்
மிரட்டிக்கொண்டிருந்தது.அணையின் சிறு மதகிலிருந்து வெளிவரும் தண்ணீர் கரைபுரண்டு
ஓடிக்கொண்டிருந்தது.பெரிய மதகினில் இருந்து தண்ணீர் வந்தால்
அவ்வளவுதான்..அருகிருக்கும் ஊர்கள் அனைத்தும் வெள்ளக்காடாய் மாறி இருக்கும்.
அருகிலேயே
பார்க் ஒன்று இருக்கிறது மிகப்பசுமையாய். சிறுவர்களுக்கென்று ஒரு ரயில் ஓடாமல்
இருக்கிறது .அதை அக்குவேறு ஆணி வேறாக பிரித்து
பழுதுபார்த்துக் கொண்டிருந்தனர்.விரைவில் ரெடியாகிவிடும் என்றனர்.
கொஞ்ச நேரம் தண்ணீரின் அழகை ரசித்தபடியே அணை மேலே செல்ல
ஆரம்பித்தோம்.மிகப்பிரம்மாண்டமான அணை சுவர்கள் வறண்டு கிடந்தது.ஆனால் தண்ணீர் வரும்
வரத்து மிக பசுமையாக இருந்தது.அணையின் மேற்பரப்புக்கு சென்றவுடன் மிக அழகாக
இருக்கிறது வைகை அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரின் பசுமை. இருபுறங்களிலும்
இருக்கிற பசுமை மரங்கள் அனைத்தும் பார்க்க பரவசமா இருக்கின்றன.
தற்போது அணையில் தேக்கிவைக்கப்பட்டிருக்கும் நீரின் அளவு குறைவாகத்தான்
இருக்கிறது.ஆனால் வெளியேறும் நீரின் வேகம் அதிகமாக இருக்கிறது.அணையின்
நாற்புறங்களும் காண நன்றாகவே இருக்கின்றன.
அப்புறம் அணை மேலே எப்பவும் போல தனிமை வேண்டி காதல் பறவைகள்.பார்க்க கொஞ்சம்
பொறாமையாகத்தான் இருக்கிறது.கீழிறங்கி வந்தால் பார்க்கிலும்
பறவைகள்...மரத்திலும்....தரையிலும்...
பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், அக்கம் பக்கம், சுற்று வட்டார மக்கள் என
கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.சுற்றுலாவாசிகளுக்கு ஏற்ற இடம்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பாயும் வைகை நதியில் இந்த அணை காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது.மதுரை மற்றும் சுற்றுப்புற மக்களுக்காக குடிநீர், விவசாயத்திற்காக கட்டப்பட்டது..வரலாறை சொல்லணும்ல...
எல்லாம் சுற்றிப்பார்த்துவிட்டு வருகையில் அங்கே தூண்டிலில் மீன்
பிடித்துக்கொண்டிருந்த ஒரு அம்மணியிடம் இருக்கிற மீன்களை ஜிலேபியும் உளுவையும் (ஒரு
ஒண்ணரை கிலோ தேறும்) குறைவான விலையில்
வாங்கிக்கொண்டு கிளம்பினோம்...
நேசங்களுடன்
ஜீவானந்தம்
படிக்கும் பொழுதே பச்சைக்காற்றை சுவாசித்தது போல உள்ளது.
ReplyDeleteபுகைப்படங்கள் அருமை மச்சி..
ReplyDelete//கண்டிப்பாக ஆற்றில் யாரும் குளிக்க கூடாது மீறினால் காவல் துறை வசம் ஒப்படைக்கப்படும்// எத பாடிய தான சொல்றாங்க..
ReplyDeletenallarukku
ReplyDeleteஅருமையான படங்கள்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteபதிவு எழுதிய விதம் அருமை படங்களும் மிக அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை!படங்கள் அழகு!!நன்றி!!!
ReplyDeleteபடங்களும் பதிவும் அழகு! வாழ்த்துக்கள்!
ReplyDelete///உள்ளேதான் சுற்றிப்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என மனம் ஆசுவாசமடைந்தது.//
ReplyDeleteஉள்ளார இல்லையா ....?
kanuku kulirichi, manathukum than. amam kadaisi varai avarkalai parthirkala illayanu sollalaiya?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபவானிசாகர் டேம், பெரியார் டேம் (முல்லைப் பெரியார்) வைகை டேம், மனிமுத்தார் டேம்---இவைகளில் என் அப்பாவின் உழைப்பு நிறைய நிறைய இருக்கு; ஒரு இளநிலை பொறியியாளாராக; பிறகு asst. engineer--ஆகvவும்
ReplyDeleteஇதன் கூட என் இளமை கால நினைவுகளும்; ஐந்தாவது வரை எங்கள் குடுபத்தில் யாரும் படிக்கவில்லை; பள்ளிக்கு செல்வோம்; பெஞ்சு தேய்ப்போம்; அடுத்த கிளாஸ் promotion..படிக்கவே இல்லை.மேலும், அப்பா சாத்தனூர்...இப்படி...பல இடங்களில் வேலை; நிற்க.
ஆனால், என் தாத்தாவின் உழைப்பு; சாதாரன உழைப்பு அல்ல; இரண்டில் ஒரு பங்கு மேட்டூர் டேம் என் அப்பா வழித்தத்தா கட்டியது; அவர் பெரிய அறிஞர், உழைப்பாளி..இந்தியாவில் பெரிய engineering contractor!
இந்த கால பத்மபூஷன் அவார்டுக்கு சமமாக அவருக்கு ஆங்கிலேயே அரசாங்கம் அவார்டு கொடுத்தது மேட்டூர் டேம் கட்டுவதில் உள்ள உண்மையான உழைப்பிற்காக! Ellis-Saddle Bridge முழுவதும் நூற்றுக்கு நூறு என் அப்பா வழி தாத்தாவின் உழைப்பு.
எங்கள் தாத்தா உண்மையான உழைப்பின் மூலம் சாதித்ததில் பத்தில் ஒரு பங்கு எங்கள் குடும்பத்தில் யாரும் சாதிக்கவில்லை..இது உண்மை. என் அப்பா இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் பொதே..என் தாத்தா சிறு வயதில் இறந்துவிட்டார். என் தாத்தாவை நான் பாத்தது புகைப்படத்தில் மட்டுமே!
ஆனால், விதை அவர் போட்டது...நாங்கள் இன்று இப்படி இருக்க காரணம் அவர் தான்.
என் அப்பா மற்றும் தாத்தா நினைவுகள் கொண்டத்திற்கு நன்றி.
தமிழ்மணம் வோட்டு பிளஸ் +1
அன்றைக்கு இருந்த தொலை நோக்கு பற்று இன்று...கானல் நீர்
Deleteஜிலேப்பி மீனை என்ன பண்ணீங்கன்னு சொல்லவே இல்லியே!!
ReplyDeleteநல்ல படஙக்ள்..... ரசித்தேன் ஜீவா.....
ReplyDelete