நம்ம கிட்ட வேலை செய்யுற
பசங்க எல்லாருமே வட இந்தியர்கள் என்பதால் அவங்க எப்பவும் சப்பாத்திதான் செஞ்சு
சாப்பிடுவாங்க.அந்த சப்பாத்தி பார்க்க கொஞ்சம் முரட்டுத்தனமா இருந்தாலும் சாப்பிட
அவ்ளோ சாஃப்டா இருக்கும்.(கொஞ்சம் கூட எண்ணையே இருக்காது ரொம்ப மொத்தமா இருக்கும்
ஆனா செம சாஃப்டா இருக்கும்) எப்பவாது வெளியூர்ல வேலை நடக்கும் போது அப்படி நிறைய
சாப்பிட்டு இருக்கேன்.கடைல இதுமாதிரி வட இந்திய சப்பாத்தி எங்க கிடைக்கும்னு
கேட்டபோது போஸ்ட் ஆபிஸ்கிட்ட ஒரு கடை இருக்கு..ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்ல, அப்போதான்
ஞாபகம் வந்தது, அட.....அந்தக்கடையில ரொம்ப வருசத்துக்கு முன்னமே சாப்பிட்டு
இருக்கேனே என்று......சரி நம்ம வெப்சைட்ல ஏத்திட வேண்டியதுதான் என அடுத்த நாளே
கிளம்பிட்டேன்.
அந்த கடை பேரு டில்லி
ஹோட்டல்..கடை ரொம்ப சின்ன கடைதான்.நான்கு டேபிள்கள் மட்டுமே போடப்பட்டு
இருக்கின்றன. ஒவ்வொரு டேபிள்லயும் பச்சைமிளகாயும் உப்பும் வச்சி இருக்காங்க.இது
சாதம் வாங்கி சாப்பிடும் போது ஊறுகாய் மாதிரி பச்சைமிளகாயை உப்புல தொட்டு
சாப்பிடுறதுக்காக..கடையைப்பார்த்தா ரொம்ப பழசா ஓட்டையும் உடைசலுமா இருக்குது.ஆனா உள்ளே
இருக்குற டிவில அக்சய்குமாரும் ஐஸ்வர்யாராயும் ஆடிப்பாடிகிட்டு
இருக்காங்க.பாட்டைக்கேட்டுக்கிட்டே உள்ளே இருக்கிற ரெண்டு பசங்க சப்பாத்தி
செஞ்சிட்டு இருக்காங்க.
நாங்க உள்ளே போய்
உட்கார்ந்ததும் கியா சாஹியே அப்படின்னு ஹிந்தில கேட்காம தமிழ்ல என்னவேணும்னு
கேட்க, பரவாயில்லையே தமிழைக் கத்துக்கிட்டாங்களே அப்படின்னு சந்தோசப்பட்டுக்கொண்டு
சப்பாத்தியும் டால் ஃபிரையும் சொல்ல, உடனடியாக சூடாக சப்பாத்தி வந்து தட்டில்
விழுந்தது.டால் ஃபிரையும் ஒரு கிண்ணத்தில் சூடா வந்தது.சப்பாத்தி நம்ம பசங்க
செய்யுற மாதிரியே இருக்குது.அதை அப்படியே பிச்சி பருப்புல தொட்டு வாய்ல வச்சா செம
டேஸ்ட்.வெறும் பருப்புதான்.ஆனா அது இம்புட்டு டேஸ்டா இருக்குறது செய்யறவங்க
கைப்பக்குவத்துல தான் இருக்கு.பருப்பும் சப்பாத்தியும் போட்டி போட்டுக்கொண்டு
இறங்குது.
ரொம்ப ரொம்ப டேஸ்ட்.அப்புறம் வேற என்ன இருக்குன்னு கேட்க ஆலுகோபி இருக்கு
அப்படின்னு சொல்ல, அதைக்குடுங்க என்று சொல்லவும் அதுவும் கொஞ்சம் சூடா
வந்தது.உருளையும் காலிபிளவரும் சேர்ந்த சுவையான கலவை.ரொம்ப நல்லா இருக்கு.சப்பாத்தியை
டேஸ்ட் பண்ணினதுக்கு அப்புறம் ஜீரா ரைஸ் சொல்ல, உடனடியாக தவாவில் சாதம் சீரகம்
போட்டு ஃபிரை பண்ணி கொத்தமல்லிலாம் தூவி மணக்க மணக்க சூடாக வந்தது.அப்படியே
பப்படம் ஒண்ணு கொடுங்க என்று சொல்லவும் அவங்க ஊரு பப்படம் பெரிய சைசுல வர, கொஞ்சம்
சாதத்தை எடுத்து ஆலுகோபில கொஞ்சம் பப்படத்துல கொஞ்சம் என எல்லாம் சேர்த்து
அப்படியே வாய்ல போட ஆஹா....செம காம்பினேசன்....சீக்கிரம் காலியானதே
தெரியல.
சாப்பிட்டுக்கிட்டே கடைக்காரர்கிட்டே பேச்சுக்கொடுக்க, தினமும் ஒவ்வொரு வகை
செய்வோம்.சாயந்திர நேரம் இன்னும் வெரைட்டி அதிகமாக இருக்கும், ஒன்லி வெஜ் மட்டும் தான்.பார்ட்டி ஆர்டரும் எடுக்கறோம் என சொல்லி
முடிக்கவும் நாங்களும் முடித்திருந்தோம் அனைத்தையும்.
விலை மிக மிக குறைவு..ஆனால்
ருசியோ ரொம்ப அதிகம்.அந்தப்பக்கம் போனால் கண்டிப்பா சாப்பிட்டு பாருங்க..
தலைமை தபால் நிலையம்,
குட் ஷெட் ரோடு அருகே இருக்கிறது.V.H ரோட்டில் இருந்து போஸ்ட் ஆபிஸ் வரும் வழியில் இடது புறம் இருக்கிறது.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
வணக்கம்
ReplyDeleteகடைக்கு அருமையான விளம்பரம் படத்தில் உணவுகளை பார்த்தால் எனக்கும் சாப்பிடனும் போல உள்ளது.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கு நன்றி ரூபன்....
ReplyDeleteஅசத்துங்க!
ReplyDeleteஹோட்டல் சுற்றும் வாலிபனுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteபடமும் விளக்கமும் பசியை வெத்தலை பாக்கு வச்சு கூப்புடுது
ReplyDeleteஜீவா,
ReplyDeleteஇது மாரி உணவகங்கள் தான் எப்பவும் நம்ம விருப்பம்,மலிவாகவும் இருக்கும்,சுவையாவும் இருக்கும்.
இது போல கடைகளில் ரொட்டி,சைட் டிஷ் எல்லாம் விலை கம்மியா இருக்கும். ஆனால் கொஞ்சம் பெரிய கடைகளில் ரொட்டி விலை கம்மியா வச்சுட்டு சைட் டிஷ் விலை கூட வச்சி ஏமாத்துவாங்க.
சோள மாவு கலந்து செய்வாங்க அதனால் தான் நான் ரொட்டி போலவே சப்பாத்தியும் மிருதுவா இருக்கும்.
இங்கே சென்னையில இது போல நிறைய இருக்கு, உட்காந்து சாப்பிடக்கூட இடமிருக்காது, சுவர் ஓரமா இருக்க ஸ்லாப்ல வச்சி நின்னுக்கிட்டே சாப்பிடனும், ஆனால் அங்கே செம கூட்டம் நெறியும், ஆனாலும் போய் சாப்பிட்டு ,பார்சல் கட்டிக்கிட்டு வந்துறது தான் :-))
ஆஹா!
ReplyDeleteஅந்த சப்பாத்தியை அனலில் வாட்டுவதால்அப்படி மெதுவாக வருகிறது ,நாமும் செய்துப் பார்க்கலாம் !
ReplyDeleteத.ம 2
சுவை ஊற வைத்த பதிவு! நன்றி!
ReplyDeleteநாவில் நீரூற வைத்த பதிவு/பகிர்வு!நமக்குக் குடுப்பனவு இல்ல,ஹூம்!
ReplyDeleteஇதன் பெயர் ஃபுல்கா! இங்கே தில்லியில் இது போன்ற கடைகளை Dhaba என அழைப்பார்கள். சப்ஜிகளில் பல வெரைட்டி.... அனைத்துமே அருமையாக இருக்கும். அடுத்த கோவை பயணத்தின் போது பார்க்கணும்.
ReplyDeleteடெல்லில இத பார்த்து தான் தெரிச்சிகிட்டு ஓடினேன். உஙக பதிவ வாசிச்சதுக்கு அப்புறம், இத சாப்பிடனும்னு ஆசை வருது. சலமன் பாப்பய்யா ஷ்டைல்ல சொல்லணும்னா, அய்யா கலக்கிட்டிங்க போங்க.
ReplyDeleteIppOVE SAppIDANUM pOLA IRUKK SIR
ReplyDelete