Monday, February 17, 2014

அருள்மிகு குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில், குச்சனூர், தேனி மாவட்டம்

குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில்
தேனில இருந்து சின்னமனூர் நோக்கி மெயின் ரோட்டில் போயிட்டு இருந்தபோது வலது புறம் ஒரு ரோடு பிரிய, அருகே இருந்த போர்டு குச்சனூர் சனீஸ்வரன் கோவில் 15 கி.மீ என காட்ட, பார்த்துட்டு போலாமா என்று மனது அலைபாய, இவ்ளோ தூரம் வந்திருக்கோம் இனி எப்போ வருவோமோ இந்தப்பக்கம் என நினைத்தபடி இருக்க, அட...இன்னிக்கு சனிக்கிழமை வேற.பகவானுக்கு உகந்த நாள்.....ஆதலால் சனிபகவானுக்கு ஒரு அட்டண்டன்ஸ் போடுவோமே என எண்ணி அங்கே செல்ல ஆயத்தமானோம்....
இருபுறமும் பச்சை பசேலென்ற வயல்வெளிகள்...கண்ணுக்கு எட்டும் தூரம் வரை பசுமை...சுத்தமான காற்று, அமைதியான நெரிசலற்ற ரோட்டில் இருபுறமும் பார்த்து வியந்தவாறே உப்புக்கோட்டை, பாலார்பட்டி போன்ற சிற்றூர்களைத்தாண்டி குச்சனூர் எங்களை வரவேற்றது.
கோவிலுக்கு முன்பாக அரைகிலோமீட்டர் தூரத்திலேயே கார்கள், டூவீலர்கள், பக்தர்கள் என கூட்டம் நிறைந்து காணப்பட்டது.சனிக்கிழமை ஆதலால் ஏகப்பட்ட கூட்டம்.கோவில் நுழைவு வாயில் புதிதாக கட்டப்பட்டு கொண்டிருக்க, வண்டி மெதுவாய் ஊர்ந்து உள்ளே சென்றது.தோதான இடத்தில் நிறுத்திவிட்டு ஜனத்திரளுக்குள் நாங்களும் ஐக்கியமானோம்.
சுருளி ஆறிலிருந்து பிரிந்து கிளை நதியாக வந்து கோவில் அருகே ஓடிக்கொண்டிருக்கிற வாய்க்கால் போன்ற சிறு ஆற்றில் கை, கால்களை நனைத்துக்கொண்டு படியேறினோம்.ஆற்றின் ஓரங்களில் குடும்ப குடும்பமாய் மக்கள், கூடவே புரோகிதர்கள்.....அவர்களின் மந்திரம் பரிகாரங்களுக்கு பயன்பட்டுக்கொண்டிருக்க, குடும்பத்தார்களின் சனி தோஷங்கள் நிவர்த்தியாகிக்கொண்டிருந்தன.

சனி தோஷம் நிவர்த்தி செய்வதற்கான பொருட்கள் உப்பும், பொரியும், எள்ளும் மண்காகமும் திரி விளக்குமாய் கடை பரப்பி இருக்கின்றன. கோவில் முன்புறம் இருக்கிற இடங்கள் பெரும் விசாலமாய் இருப்பதால் க்யூ கட்டி பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர்.வரிசையில் நாங்களும் அடைந்து கொண்டோம்....

பக்தர்கள் வழிபடும் முறை என்று பிளக்ஸ் பேனரில் ஒட்டப்பட்டிருக்கின்றன.அதன்படி ஒவ்வொருத்தரும் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். அவ்வாறே நாங்களும் செய்து கொண்டிருந்தோம். .கொடிமரத்தினை கும்பிட்டு பொரியும், உப்புத்தொட்டியில் உப்பும் போட்டோம்.மண்காகத்தினை தலையில் வைத்து ஒரு சுற்று சுற்றி காகம் பீடத்தில் வைத்தோம்.காகத்தின் மேல் காசுகளை வைத்து கும்பிட்டு, பின் எள் விளக்கினை தீப இடத்தில் வைத்து வேண்டிக்கொண்டோம்.பின் கொஞ்ச நேரம் காத்திருந்து சுயம்புவாக அருள் பாலிக்கும் சனி பகவானை பக்தியோடு வேண்டிக்கொண்டு வெளியேறினோம்.


இங்கே தல விருத்தமாக விடத்தலை மரம் இருக்கிறது.இந்த மரத்தினை சுற்றி பக்தர்களின் வேண்டுகோள் மஞ்சள் கயிறாக நிறைந்து இருக்கிறது.தனி சன்னதியில் திருமலைக்குமரன் வீற்றி இருக்கிறார்.இந்தியாவிலேயே சனிபகவான் சுயம்புவாக தோன்றிய ஒரே ஸ்தலம் இது தான்.சனிபகவானுக்கே பிரம்மகத்தி தோசம் பிடித்து நீங்கின வரலாறு பெற்ற தலம்.சனி தோஷம் பெற்றவர்கள் இங்கு வந்து வழிபடுதல் சிறப்பு.
தேனியில் இருந்து 23 கி மீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்தக்கோவிலைப்பத்தி வரலாறு இது தான்.

கிசுகிசு : இங்க செம அம்மணிங்க கூட்டம்....சனி தோசம் நிவர்த்தி ஆகனும்னு போனா நமக்கு வேற தோஷம் பிடிப்பது உறுதி...ஹிஹிஹி....

நேசங்களுடன்

ஜீவானந்தம்

13 comments:

 1. வணக்கம்
  ஆகா..........ஆகா... சூப்பர்..... மிக அருமையாக எழுதியுள்ளிர்கள்.... படங்கள் எல்லாம் அழகு
  வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி ரூபன்...

   Delete
 2. ஆற்றில் குளிக்கவில்லையா...?

  இனி மேலும் அந்த தோசம் பிடிக்க வேண்டுமா என்னா...? ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. இல்லை....காலையிலேயே குளித்துவிட்டு தான் சென்றேன்...
   தோசம் பிடிச்சிடும்...கண்டிப்பா...

   Delete
 3. அழகான ஊர் போல் தெரிகிறது. நான் திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, Shani Shingnapur (Maharashtra) போன்ற சனீஸ்வரன் கோயில்களுக்குப் போயிருக்கிறேன். இங்கு மட்டும் இன்னும் போகவில்லை. படங்கள் நன்றாக இருக்கின்றன. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா போங்க...சுயம்பு சனி பகவான்...இங்கு மட்டும் தான்..

   Delete
 4. புகைப்படத்துலயே அழகாய் தெரிகிறது ஊர்.

  ReplyDelete
  Replies
  1. சூப்பரான ஊர்....கிராமம் தான்...

   Delete
 5. அருமையான தலம் பற்றிய அழகான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி...சார்

   Delete
 6. புகைப்படங்கள் இங்கே செல்லத் தூண்டுகின்றன ஜீவா.....

  நல்ல பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா வாங்க சார்....நல்லா இருக்கும்...

   Delete
 7. அப்படியா..ரொம்ப நன்றிங்கோ...

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....