நம்ம ஏரியாவான கவுண்டம்பாளையத்தில் இருக்கிற ஒரு மீன் கடை.ஆரம்பத்தில் இந்தக்கடையில் ஃபிரஷ் மீன்கள் மட்டுமே விற்பனை செய்து கொண்டிருந்தார்கள்.எப்பொழுது போனாலும் மீன் வாங்கிக்கொண்டு வரலாம்.அந்தக்கடை இப்போது ஒரு சிறு ஹோட்டலாக மாறி இருக்கிறது.காலையில் ஃபிரஷ் மீன்களும் மாலையில் மீன் வறுவலும் கிடைக்கிறது.அப்படித்தான் ஒரு சாயங்கால வேளை அந்தப்பக்கமாக செல்லும் போது மீன் மணம் நம்ம நாசியை துளைக்கவே அந்த கடைக்கு ஒரு வருகையைப் போட்டேன்.
மசாலா தடவின வகை வகையான மீன்கள் தனித்தனிப் பெட்டியில் வரிசையாக அடுக்கப்பட்டு எண்ணையில் பொரிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தன.மீன்களைப்பார்க்கவே நம் பசியை தூண்டுகின்றன.நமக்கு தேவையான மீன் வகைகளில் இரண்டு மீனை பொரிக்கச் சொன்னேன். எண்ணையில் மீன் நீந்த நீந்த மணம் பரவி..... ருசி அறிய.... மனம் பசியை அதிகமாக்கிக்கொண்டிருந்தது.
நன்றாக மீன் வெந்ததும் தனித்தனி பிளேட்டில் மீன் ஒவ்வொன்றாக வர எடுத்து சுவைத்ததில் செம டேஸ்ட்.நான் கிழங்கா மீன், கட்லா, நெய்மீன், சாப்பிட்டேன்.சுவை நன்றாகவே இருக்கிறது.மீன் ஃபிரை மட்டுமல்ல, இட்லி மீன் குழம்பு இருக்கிறது.நண்டு சூப் மற்றும் புரோட்டா, மீன் கட்லெட் என எல்லாம் இருக்கிறது.
மீன் துண்டுகள் சைசில் கொஞ்சம் பெரியவையாக இருக்கின்றன.ஆனால் சிக்கன் கோலா உருண்டை சைசு மட்டும் ரொம்ம்ப சின்னதா இருக்கு.ஜோடி 25 தான்.அதனால பரவாயில்லை.மீன்களின் விலையும் மிக குறைவாகத்தான் இருக்கிறது.
நல்ல இடவசதியுடன் தாராளமா இருக்கு.எப்பவாது இந்தப்பக்கம் வந்தீங்கன்னா சாப்பிட்டுப்பாருங்க.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
எப்பவாது இந்தப்பக்கம் வந்தீங்கன்னா சாப்பிட்டுப்பாருங்க.
ReplyDelete>>
ஓகே. கோவை வரும்போது சொல்றேன் அந்தப் பக்கம் போலாம் ஜீவா!
கண்டிப்பா வாங்க...போலாம்....
Deleteசூப்பர் ஜீவா.... பார்க்கும்போதே இங்க வாசம் அடிக்குது, பசியும் அதிகமாகுது !
ReplyDeleteஅப்படியா....சந்தோசம்..ஒரு நாள் வாங்க....
Deleteகோவைக்கு விரைவில் வருகிறேன்...~~~!!!
ReplyDeleteதங்களின் வருகையை எதிர்பார்க்கிறேன்....
DeleteI will visit this place for sure...
ReplyDeletemost welcome...
Deleteவணக்கம்
ReplyDeleteபார்த்தவுடன்... எனக்கு பசிவந்தது.... சூப்பர் ..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எப்பா எனக்கும் அங்கே ஒரு துண்டை போட்டு வைய்யி.
ReplyDeleteதல,
ReplyDeleteஅது நான் ரெகுலரா வஞ்சிரம் மீன் வாங்கிய கடை. ஆனால் அடிக்கடி பழய மீனயே தருவதால் இப்போது அங்கு செல்வதை நிறுத்திவிட்டேன்.
துடியலூர் போகும்போது, வேணுகோபால் மருத்துவமனை அருகில் KingFish என்று மீன் உணவுக்கடை தொடங்கியுள்ளார்கள்.
உங்களுக்கு மட்டும் எப்படி அருமையா மாட்டுது..
ReplyDeleteபார்த்ததிலே பாதி வயிறு நிரம்பியது
This comment has been removed by the author.
ReplyDeleteபடங்கள் அருமை. சாப்பிடத்தான்முடியாது.
ReplyDeleteஅருமை. மீனை போலவே பதிவும் சூப்பர்.
ReplyDelete