Tuesday, January 28, 2014

பயணம் - கோல்வா பீச் (COLVA BEACH), கோவா (GOA) - 1

  எச்சரிக்கை
       மது உடலுக்கு தீங்கானது 
இந்த பதிவில் உள்ளவை அனைத்தும் எனது சொந்த அனுபவமே.விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.இல்லையேல் 
இந்த பதிவை படிப்பதை தவிர்த்து விடுங்கள்....
இது கண்டிப்பாக  குடிமகன்களுக்கு மன்னிக்கணும் நம்ம பங்காளிகளுக்கு  மட்டும்.



காலையில் இருந்து கடலில் குளித்த டயர்டில் எங்காவது ஒதுங்கலாமே என்று ஒரு கடையில் ஒதுங்கி சில்லென தொண்டையை நனைத்தோம்...கூட என்ன சாப்பிடலாம் என்று யோசித்ததில் கிங் ஃபிஷ் ஞாபகத்திற்கு வந்தது..அது ஆர்டர் செய்யவும் பீர் தீர்வதற்குள் வந்து சேர்ந்தது.சாப்பிட்டு பார்த்ததில் சுவையோ சுவை....கிங் ஃபிஷருக்கும் கிங் ஃபிஷ் க்கும் பொருத்தமோ பொருத்தம்.....


நேரம் ஆக ஆக கடற்கரையில் கூட்டம் கூட ஆரம்பித்தது.வாட்டர் ஸ்போர்ட்ஸ் படகுகள் மும்முரமாய் வாடிக்கையாளர்களை வசப்படுத்தி கொண்டிருந்தன.பாரா செயிலிங் எனப்படும் பாராசூட் அனுபவத்தில் பங்கு கொள்ள மனம் ஆசைப்பட்டாலும் அவ்ளோ உயரத்தில் செல்ல கொஞ்சம் பயமாகவே இருந்தது.அதனால் அந்த ஆசையை நிராகரித்து விட்டு உயரே செல்லும் பாராசூட்டை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்...



வெயில் சுள்ளென பட்டாலும் கடற்கரை மணலில் கடற்காற்று வாங்கிக்கொண்டிருப்பது சுகமாகவே பட்டது.என்னதான் வெயில் அடித்தாலும் சில்லென இருந்தது கடல் நீரும் அவ்வப்போது கடந்து செல்லும் அரை குறை அம்மணிகளும்.... சாய்வு நாற்காலிகளில் ஓய்வெடுத்துக்கொண்டு அவ்வப்பொழுது உடலினை சூரியனின் சுட்டெரிப்பால் திருப்பி திருப்பி போட்டபடி காய்ந்து கொண்டிருந்த வெளிநாட்டு வெள்ளைத்தோல் அம்மணிகள்.அவர்கள் வெயிலில் காய்ந்து கொண்டிருந்ததை காணுகையில் நம் உள்ளம் என்னவோ குளிர்ச்சியால் நிறைந்து கொண்டிருந்தது.

வேடிக்கை பார்த்து பார்த்து கண்களும் சோர்வடைந்ததால் கால்கள் தன்னிச்சையாக கடையை நோக்கி பயணித்தன.கோவாவின் புகழ்பெற்ற மதுவான ஃபென்னி எனப்படும் சரக்கினை ருசி பார்ப்போமே என்று.... கோகனட் ஃபென்னி, முந்திரி ஃபென்னி என்கிற இரு வகையில் முந்திரியினை தேர்ந்தெடுத்து ஓரமாய் அமர்ந்தோம்.நம்மூர் பட்டை சாராயம் போல காய்ச்சின வகை என்று கடைக்காரர் சொல்லவும் ஆஹா என மனம் குதூகலித்தது.இதற்கு கலந்து கொள்ள எது சூப்பராக இருக்கும் என்று கேட்க, லிம்கா தான் பெஸ்ட் என சொல்ல அதையும் வாங்கி இரண்டையும் மிக்ஸ் பண்ணி சாப்பிட்டதில் செம டேஸ்ட்..அங்கும் மீன் சாப்பிடலாமே என்று நம்மூர் ஜிலேபியின் பெரிய வகையினை ஆர்டர் செய்ய அது மசாலா மணத்தோடு செம தூக்கலாக வந்தது.காரமும், இனிப்பும் கலந்த கலவையுடன் மீனின் சுவை செம டேஸ்டாக இருந்தது.ஃபென்னியுடன் மீனும் நம்ம மனமும் சேர்ந்து நீச்சலடிக்க ஆரம்பித்தது.....

கொஞ்ச நேரம் இளைப்பாறிவிட்டு மீண்டும் கடற்கரை நோக்கி பயணமானோம்.இப்பொழுது கொஞ்சம் கூட்டம் அதிகமாகவே இருந்தது.மாலை நேர சூரியனின் மறைவினைக் காண கூடியிருந்தனர்..குடும்பம் குடும்பமாக கூட்டங்கள், அரை குறை ஆடையுடன் ஆடவர்கள் மற்றும் வெளிநாட்டு அம்மணிகள்..முழு உடை தரித்திருந்தாலும் அங்கங்கள் அனைத்தும் நனைந்தபடி நம்மூர் அம்மணிகள் என மிக ரம்மியமான மாலைப்பொழுதாக ஆகிக்கொண்டிருந்தது கடற்கரை.




  
மயங்குகின்ற மாலை வேளையில் சைக்கிளில் ஒய்யாரமாய் வரும் அம்மணிகள், பாய்ந்து வரும் அலைக்கு பயந்து கடற்கரையில் வெறும் பார்வையோடு நிறுத்திக்கொண்ட நிறைய பேர், கடற்கரையில் கிடக்கும் சிப்பிகள், கிளிஞ்சல்கள் என அனைத்தையும் பொறுக்கிகொண்டு கடலோரமாய் நடந்து செல்லும் பல பேர், அவ்வப்போது மக்களின் பாதுகாப்புக்காக குறுக்கும் நெடுக்குமாய் சென்ற கோஸ்டல் ஜீப், கடலில் குளிப்பவர்களின் ஆர்வமிகுதியால் கடலில் வெகு தூரம் செல்பவர்களை திரும்பி வரவைக்கும் விசில் சத்தம் என பரபரப்பாக இருந்த கடற்கரை சூரியனின் மறைவினால் கொஞ்சம் பொலிவிழக்க ஆரம்பித்தது.


கொஞ்சம் கொஞ்சமாக தன் உயரத்தை இழந்து, சுடும் வெப்பத்தினையும் குறைத்து பொன்னிற கதிர்களால் கடற்கரையினை மிக ரம்மியமாய் மாற்றிக்கொண்டிருந்த சூரியன் கடலோடு அஸ்தமிக்கும் அந்த நொடிகள் மிக அழகாய் இருந்தது.அனைத்தையும் ரசித்தபடி இரவின் சுவடுகள் ஆரம்பித்த சமயத்தில் கடலுடன் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினோம்.

இதுக்கு முன்னாடி கோவா

நேசங்களுடன்
ஜீவானந்தம்

15 comments:

  1. குடிப்பழக்கம் நாட்டுக்கு...வீட்டுக்கு கேடு...என்ற எச்சரிக்கை வாசகம் அடங்கிய இப்பதிவு ‘குடிமகன்களிடம் எழுச்சியை’ ஏற்படுத்தும்.

    ReplyDelete
  2. ரொம்ப ரொம்ப உயரத்திற்கு சென்று விட்டீர்கள்...!

    ReplyDelete
  3. தூக்குய்யா தூக்கு...நான் கிங் பிஷை சொன்னேன்.

    ReplyDelete
  4. நல்லாவே என் ஜாய் பண்ணியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. மன நிறைவான பகிர்வு!நனைந்து மகிழ்ந்து அனுபவித்த ஃபீலிங் !

    ReplyDelete
  6. அருமையான பதிவு தலைவரே.. நான் கடந்த வாரம் நைனிடால் சென்று இருந்தேன், அங்கு பாரா செயிலிங் அனுபவத்தில் பங்கு கொண்டேன். முதலில் அடி வயறு கலங்கினாலும், நேரம் ஆக, ஆக பயம் என்னை விட்டு பறந்து போய் விட்டது.

    ReplyDelete
  7. கோவா பென்னி சரக்கு எப்படி இருந்தது ? கிப்ட் பாட்டில் ஓலைக்கூடையில் வந்தது. தூக்கிக் கொடுத்து விட்டேன். கோவா போய்விட்டு மீனை மட்டுமா சாப்பிட்டீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பாஸ்....பென்னி...செம...அடுத்த முறை கிப்ட் வந்தால் என்னை அழைக்கவும்

      Delete
  8. பயண + சரக்கு அனுபவம் சூப்பர். என்சாய் ...

    ReplyDelete
  9. இருவர் கோவையில் இருந்து சென்று வர என்ன செலவு ஆகும் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...தாங்கள் எப்படி போவதாக உத்தேசம்...
      ட்ரெயினில் சிலீப்பர் கோச் என்றால் போக வர ஒருவருக்கு 1000 ஆகலாம்.ரிசர்வேசன் இல்லாமல் செல்வதென்றால் கோவை டூ மங்களூர் 85.00 மங்களூர் டூ மடகான் 80.00 இவ்ளோ தான் ஆகும்...சூப்பர்ஃபாஸ்ட் என்றால் கொஞ்சம் அதிகம் ஆகலாம்..மேக்சிமம் ஒருவருக்கு 250 வைத்துக்கொள்ளுங்கள்..ட்ரெயின் மடகான் வரை தான் செல்லும்.அங்கு இருக்கும் ரூம்கள் 300 ரூபாயில் இருந்து கிடைக்கும்.பீச் ஓரமாக தங்க 800 முதல் ஆரம்பிக்கும்.12 hours checkout...சாப்பிட நிறைய ஹோட்டல்கள் இருக்கின்றன.மடகானில் இருந்து பனாஜி செல்ல பேருந்துகள் இருக்கின்றன.அங்கும் 650 முதல் ரூம்கள் கிடைக்கும்..

      Delete
    2. டூ வீலர் டாக்சிவாலாக்கள் நிறைய இருக்கின்றனர்,அவர்களிடம் சொன்னால் குறைந்த விலைக்கு ஏற்பாடு செய்து தருவார்கள்...

      Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....