Tuesday, April 8, 2014

கோவை மெஸ் - பனானா லீஃப் (BANANA LEAF), கணபதி, கோவை

ஒரு மதிய நேரம்.....நண்பரும் நானும்....சரவணம்பட்டியில் இருந்து காந்திபுரம் நோக்கி வந்துகொண்டிருந்த போது, பசி வயிற்றைப்பதம் பார்க்கவே ரோட்டின் இருபுறங்களிலும் பார்வை ஹோட்டலைத்தேடி அலைபாய்ந்தது.ஏகப்பட்ட கடைகள் முளைத்திருக்கின்றன, எந்தக் கடைக்குள் நுழையலாம் என்று வயிறு நினைத்தாலும் முதலாய் போய் அவஸ்தைக்குள்ளாக வேண்டாம் என்று மனது நினைத்தது.எப்போதோ நண்பன் சொல்லியிருந்த ஒரு ஹோட்டல் பெயர் ஞாபகத்திற்கு வரவே அங்கு செல்லலாம் என யோசித்ததில் அருகிலேயே அந்த ஹோட்டல் இருக்க எதிரில் வண்டியை பார்க் செய்துவிட்டு நுழைந்தோம்.அந்த ஹோட்டல் பனானா லீஃப் –(Banana leaf )

ஹோட்டல் உள்ளே நுழையும் முன்பே நம் கண்களை எட்டிய மெனு போர்டு பார்த்ததும் பசி இன்னும் அதிகமாகிறது.சிக்கனில் இவ்ளோ வெரைட்டியா என யோசித்தபடி வாஷ் பேசினைத் தேடி உள்ளே செல்கையில் கேஷியர் முதல், சர்வர் வரை ஒரு மலையாள வாடை வீசவும், அதை உறுதிசெய்வது போல பக்கத்து டேபிளில் ஒருவர் கேரள அரிசியான மட்டை அரி சாதத்தினை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும், ஐ........கேரள அயிட்டம்லாம் இங்க கிடைக்கும் போல என மனம் ஆனந்தக் கூத்தாடியது.கை கழுவிக்கொண்டு தோதான இடத்தில் அமர்ந்து மட்டை அரி சாதத்தினையும், மீன் குழம்பினையும் ஆர்டர் செய்து விட்டு காத்திருக்க, காலியாகி கிடந்த சேர்கள் அனைத்தும் நிரம்பிக்கொண்டிருந்தது, மலையாளத்தில் சம்சாரித்துக் கொண்டே வந்து அமர்கிற ஆட்களால்......

நமக்கான உணவு வரும் வரை சுற்றிலும் நோட்டமிட்டதில் ஹோட்டல் மிகப்பெரிதாக இருக்கிறது. உள் நுழையும் போது ஏசி இல்லாத பொது இடமும், தனியாக ஏசி அறையும் இருக்கிறது.வெளியே கண்ணாடி போட்ட கிரில்லில் மசாலில் மேக்கப்பிட்ட கோழி நெருப்பில் உருண்டு புரண்டு கொண்டிருந்தது வாசத்தினை வெளியே விட்டபடி....
கொஞ்ச நேரத்தில் நமக்கான உணவு வந்த போது, மீன் குழம்பு வாசம் நம்மை தூக்கியடித்தது.மட்டை சாதத்துடன் கலந்து கட்டி அடிக்க செம டேஸ்டாய் இருக்க, அத்தனை சாதமும் சீக்கிரம் தீர்ந்து போக, நம்மைப்பார்த்துக்கொண்டிருந்த சர்வர், உடனடியாக மீண்டும் தட்டு நிறைய சோறினைக்கொட்ட, வயிறு இன்னும் வாய் பிளந்தது.பொறுமையாய் மீன்குழம்பினை முடித்துவிட்டு, கொஞ்ச நஞ்சம் இருக்கிற பொரியல், சம்பந்தி, ரசம், சாம்பார், மோர் பாயசம் என அனைத்தையும் முடித்தபோது திருப்தியாய் வயிறு நிறைந்திருந்தது...கூடவே மனமும்.....


இதற்கிடையில் வெயிலுக்கு போட்டியாக இருக்கட்டுமே என்று ஒரு சிக்கன் லாலிபாப் சொல்ல, அதுவும் சீக்கிரம் வந்தது காலில் அலுமினிய பேப்பரை சுத்தியபடி....சிக்கன் சொல்லவே வேணாம்...அது எப்பவும் நல்லாயிருக்கும்..
கூட வந்த நண்பர் எக் பிரைடு ரைசினை சொல்ல அதுவும் சூடாய் வர, ஜாமினால் கோலம் போட்டுவிட்டு சாப்பிட ஆரம்பித்தார்.இதைப்பத்தி சொல்ல ஒண்ணுமில்லை.


பக்கத்து டேபிளில் அமர்ந்த ஒருவர், பிரியாணி ஆர்டர் பண்ண, வெள்ளையும் சொள்ளையுமாக, நடுவில் மசாலாவோடு வர, மனிதர் பூந்து விளையாட ஆரம்பித்தார் மலபார் பிரியாணியில்.ஆக மொத்தம் இந்த ஹோட்டல் கேரள மெனுக்களால் நிரம்பி வழிகிறது.கேரள சாப்பாடு, மலபார் பிரியாணி, மீன் பொரிச்சது என அனைத்தும் இருக்கிறது.நம்மூர் சாப்பாடும், சைனீஸ் அயிட்டங்களும் இருக்கின்றன.
சாயந்திர நேரம்  ஜோடி போட்டு சுத்தும் ஐடி அம்மணிகளால் நிறைந்து வழிகிறது.சிக்கன் காம்போ என்கிற பெயரில் நிறைய வெரைட்டி இருக்கிறது.கிரில்லும், தந்தூரியும் போட்டி போட்டுக்கொண்டு அதிகம் வாடிக்கையாளர்களை வசப்படுத்திக்கொண்டிருக்கிறது.
கேரள உணவுகளை விரும்பி சாப்பிடனுமா....ஹோட்டல் பனானா லீப் போலாம்.... கண்டிப்பாக சாப்பிட்டு பார்க்கலாம்...உணவும் மிக டேஸ்டாக இருக்கிறது.மெனு கார்டினைப்பார்த்தால் ஒரு பைண்டிங் பண்ணின சின்ன புக் போல இருக்கிறது.புரட்டவே நேரம் சரியாக இருக்கும் போல...

விலை சுவைக்கேற்ப, தரத்திற்கேற்ப, நம்ம கோவைக்கேற்ப இருக்கிறது.அந்தப்பக்கம் போனீங்கன்னா, கேரளா உணவு சாப்பிடனும்னா போலாம்...கடைசியில் கேட்க மறந்திட்டேன்..பீஃப் கறி கிடைக்குமான்னு.... இதுக்காவே அடுத்த முறை போகணும்.....
சத்தி ரோட்டில் அத்திப்பாளையம் பிரிவு பஸ்ஸ்டாப் அருகே மிக விஸ்தாரமாக இருக்கிறது இந்த ஹோட்டல்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்



8 comments:

  1. ஹோட்டல் பேர் புதுசா இருக்கு.
    ஆனா உங்கள் பதிவு வழக்கம் போல பட்டய கிளப்புது...
    வாழ்த்துக்கள் சார்..

    ReplyDelete
  2. வாழை இலையில் விருந்து உண்டதை விறுவிறுப்பா சொன்ன உங்க பாணி எப்பவும் தனிதான்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. வாழை இலையில் விருந்து உண்டதை விறுவிறுப்பா சொன்ன உங்க பாணி எப்பவும் தனிதான்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. //.கடைசியில் கேட்க மறந்திட்டேன்..பீஃப் கறி கிடைக்குமான்னு.... இதுக்காவே அடுத்த முறை போகணும்//

    No Boss Kedakkaathu :(

    ReplyDelete
  5. அதானே கேட்க மறந்துட்டேன்னு சொல்லி இன்னொரு முறை விருந்து சாப்பிட போறிங்க....

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு.கடை பேரே வாழை இலை!ஹி!ஹி!!ஹீ!!!

    ReplyDelete
  7. சிறப்பான உணவக அறிமுகம்! கோவை பக்கம் போகையில் சாப்பிட்டு பார்க்கலாம்!

    ReplyDelete
  8. சென்னையில் தி.நகரில் பார்த்திருக்கிறேன். போனதில்லை....

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....