கோவை மெஸ் – சீதா பாணி (SITA PANI) ரெஸ்டாரண்ட், கணபதி, கோவை
காந்திபுரத்தில் இருந்து கணபதி சிஎம்எஸ் பக்கம் போகும் போதெல்லாம் இந்த
ஹோட்டலைப் பார்ப்பதுண்டு.முன்புறமாக இருக்கிற கிச்சன்ல ஆட்கள் ரொம்ப தீவிரமா வேலை
செஞ்சுட்டு இருப்பாங்க, ஹோட்டலுக்கு முன்னாடி கார்கள் நிறைய நின்னுட்டு இருக்கும்,
அம்மணிகளாம் அழகழகாய் வந்து போயிட்டு இருப்பாங்க.என்னிக்காவது ஒருநாள் இந்த
ஹோட்டலுக்குள் நுழைந்திட வேண்டியதுதான் என எண்ணிக் கொண்டிருப்பேன்.அந்த வாய்ப்பு
சமீபத்தில் கிடைத்தது.
நண்பருடன் ஒரு மாலை மயங்கிய இரவு வேளையில் குடும்பத்துடன் ஹோட்டலுக்குச் சென்றோம்.உள்
நுழையும்போதே கிச்சனில் இருந்து வாசம் நம்மை வரவேற்கிறது (வரவேற்பறையிலேயே கிச்சன்
இருப்பதால்).கண்ணாடி ஷோகேஸில் சைசு வாரியாய் வெட்டப்பட்ட கோழிகள் மசாலாவில்
புரண்டபடி நம் பார்வைக்கு விருந்தளிக்கின்றன வித வித போஸ்களில்.காடை கூட மசாலா
பெட்(BED)டில் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு நம்மை வரவேற்கிறது.மீன்களும்
மசாலாவில் நீந்திக்கொண்டிருக்கின்றன, நாம் ஆர்டர் கொடுத்தால் போதும் அவைகளும் எண்ணையில்
நீந்த ஆரம்பித்துவிடும்.விதவிதமான வெரைட்டி ரகங்களில் கோழிகள் மசாலாவில் நனைந்தபடி
வாடிக்கையாளர்களை வரவேற்கின்றன.
கொஞ்ச நேரம் கோழி, மீன், காடை என அனைத்தையும் வேடிக்கைப்பார்த்துவிட்டு,
ஹோட்டலுக்குள் நுழைந்தோம். பெரிய ஹாலில் குடும்பம் குடும்பமாக, பேச்சிலர்களாக
நிறைய பேர் இருக்க, ஒரு சில அம்மணிகளும் கூடவே பாடிகார்டும் இருக்க, பார்த்தபடி
ஏசி ஹாலுக்குள் நுழைந்தோம்.தனிமை வேண்டிய ஒரு சில அம்மணிகள் தத்தம் துணையுடன் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும்.
அந்த ஏசி குளிரிலும் கொஞ்சம் சுட்டெரித்தது நம் மனது.எங்களுக்கான தோதான இடத்தினை
தேர்வு செய்துகொண்டு நண்பர் மெனு கார்டினை பார்க்க ஆரம்பிக்க, ஆட்டோமேடிக்காய் நம்
கண்கள் அலைபாய்ந்தது.
ஏசி ஹால்..நல்ல இண்டீரியர் அமைப்புடன், மிதமான லைட்டிங் வசதியுடன், வால்
பேனலிங் செய்யப்பட்ட சுவருடன், அழகாய் தோற்றமளித்தது.சுத்தமான டேபிள், கலர்புல்
பெயிண்டிங், விட்ரிபைட் டைல்ஸ் என கண்ணைக்கவரும் வகையில் மிக ரம்மியமாக இருந்தது.அனைத்தையும்
ரசித்து முடிப்பதற்குள், சர்வர் வந்துவிட, உடனடியாய் சிக்கன் சூப், மற்றும் வெஜ்
சூப் மற்றும் சிக்கன் வகையில் ஒரு பிளேட் லாலிபாப், அல்பகம் சிக்கன், எக் ஃப்ரைடு
ரைஸ் என சொல்ல, உடனடியாய் வந்தது சிக்கன் சூப் மற்றும் வெஜ் சூப்.எப்பவும் நமக்கு
சூப் குடிக்கிற வழக்கம் இல்லாத காரணத்தினால் அப்படியே பக்கத்தில் தள்ளிவிட நம்
வாண்டுகள் ருசிக்க ஆரம்பித்தன.
அதற்குள் நம்ம அயிட்டமான சிக்கன் (ALFAHAM CHICKEN) வர, பார்த்தால் ஒரு
தட்டு முழுக்க பரவிக்கிடந்த செக்கச்சிவந்த சிக்கன் நம் பசியை இன்னும் அதிகமாக்கியது.ஆளுக்கொரு
பீசினை எடுக்க, நல்ல புஷ்டியுடன் இருந்த முழுக்கோழி சீக்கிரமே வெறும் எலும்புகளாய்
உருமாறியது.காலியான தட்டு நிறைந்து போனது வெறும் எலும்புகளால்.சிக்கன் நெருப்பில் வாட்டியதால், செம டேஸ்டாக இருக்கிறது.நன்றாக வெந்து இருக்கிறது.காரம்
அளவாக இருக்க, சாப்பிட சூப்பராய் இருக்கிறது சிக்கன்.
அடுத்து ஆர்டர் செய்தது மலபார் பிரியாணியும் செட்டிநாட்டு
பிரியாணியும்.செட்டிநாட்டு பிரியாணியை விட மலபார் பிரியாணி மிக நன்றாக இருக்கிறது.வெள்ளை
நிறத்துடன், கொஞ்சம் மணத்துடன் மலபார் பிரியாணி இருக்க, சிக்கன் மசாலும் கறியும்
பிரியாணிக்குள் ஒளிந்திருந்தது, கூடவே ஒரு முட்டையும்...பிரியாணி சாதத்துடன்
கொஞ்சம் மசாலாவினை சேர்த்து எடுத்து வாயில் போட்டால், ஆஹா என்ன ருசி....செமையாக
இருக்கிறது.மிக நன்றான சுவையுடன் இருக்கிறது பிரியாணி.செட்டிநாட்டு பிரியாணி
கொஞ்சம் சுமார் தான்.என்ன இருந்தாலும் நம்மூர் பாய் பிரியாணி போல் இல்லை.
உண்ட உணவுகள் செரிக்கணுமே என்பதற்காக ஒரு லைம் சோடாவினை ஆர்டர் செய்து கொஞ்சம் காலியாக இருந்த வயிற்றினை நிறைத்துக்கொண்டு பில்லினை செட்டில் செய்து வெளியேறினோம்.
மொத்தத்தில் நன்றாக இருக்கிறது.ருசி, தரம், உணவகத்தின் சுகாதாரம், என எல்லாம்
நன்றாக இருக்கிறது.விலை கோவைக்கேற்றபடி இருக்கிறது.சிக்கன் சூப் 75. வெஜ் சூப் 70, அல்பகம் சிக்கன் முழு கோழி 250, லாலிபாப் 140 பிரியாணி 120, என கோவைக்கான விலையில் இருக்கிறது.எனினும் சுவை நன்றாக இருக்கிறது.எப்பாவாது அந்தப்பக்கம் போனால் சாப்பிட்டுவிட்டு வாங்க...
கணபதி சிஎம்எஸ் பள்ளிக்கு எதிரில் இருக்கிறது.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
உண்ட உணவுகள் செரிக்கணுமே என்பதற்காக ஒரு லைம் சோடாவினை ஆர்டர் செய்து கொஞ்சம் காலியாக இருந்த வயிற்றினை நிறைத்துக்கொண்டு பில்லினை செட்டில் செய்து வெளியேறினோம்.
ReplyDeleteDont drink cooldrinks after meals, for Digest. If you need drink Hot water.
தகவலுக்கு நன்றி பாஸ்..
Deleteயம்மாடி - விலை...!
ReplyDeleteமுதல் முறை வாண்டுகளோடு...? ஜமாயுங்க...!
வாங்க தனபாலன்....நன்றி....
Deleteபார்க்கவே..............நாவில் ஜலம்.......ம்.......ம்.....////அதென்ன சார்,"கோவை" க்கான விலை?ஹ!ஹ!!ஹா!!!
ReplyDeleteகோவையில் கொஞ்சம் விலை ஜாஸ்தி....அதான்...
DeleteALFAHAM CHICKEN பேரே புதுசா இருக்கு... சிக்கன் டேஸ்ட் எப்படி இருந்தது...
ReplyDeleteஅரேபிய சிக்கன் தான்...டேஸ்ட் நல்லா இருக்கு...
Delete