கோவையில் இருந்து சேலம் சென்று கொண்டிருந்த ஒரு காலைப்பொழுதில், என்னுடன்
பயணித்த நண்பர் ஒருவருடன் பொதுவாய் அரசியல் முதல் சாப்பாடு வரை அலசியபடி வந்து கொண்டிருக்க
லேசாய்ப்பசி எடுக்க ஆரம்பித்தது.அப்போது தான் அவர் சொன்னார், அவினாசியில் ஒரு
ஹோட்டல் இருக்கிறது ஆனால் சைவம் மட்டும் தான்...இட்லி, தோசை இது மட்டும் தான்
கிடைக்கும்.இட்லி குருமா அவ்வளவு டேஸ்டாக இருக்கும் என சொல்ல, காலை நேர உணவை இங்கு
முடித்து கொள்ளலாம் என பைபாஸில் வந்து கொண்டு இருந்த நாங்கள் அவினாசிக்கு வண்டியை ஓரங்கட்ட
ஆரம்பித்தோம்.
அவினாசியில் இன்னும் பரபரப்படையாத காலைப்பொழுது..மணி எட்டை
நெருங்கிக்கொண்டிருந்தது.பி.எஸ் என் எல் ஆபிஸ் எதிரில் வண்டியை நிறுத்திவிட்டு
ரோட்டை கடந்து அந்த ஹோட்டலுக்கு வந்தோம். ஹோட்டல் என்கிற அமைப்பே இல்லை.ஒரு
டீக்கடை தான்.ஓடு போட்ட சின்ன வீடு...முன்புறம் டீ பாய்லர்...ஆனால் அந்த ஹோட்டல்
முன்பு வித விதமான கார்களின் வரிசை.
ஆச்சர்யமாகி கடைக்குள் பார்த்தால் உள்ளே நான்கு
பெஞ்ச் போடப்பட்டிருக்கிறது. காலையிலிலேயே ஒரு குடும்பம் அமர்ந்திருந்தது. இரண்டு
சீட் மட்டும் காலியாக இருக்க, நாங்கள் அமர்ந்து கொண்டோம்...ஒரு பத்து
நிமிட்த்திற்குள்....வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, கடையின் ஓனர் இலை
அனைவருக்கும் வைத்தார்.பின் தண்ணீர்.பின் ஆளுக்கு இரண்டிரண்டு இட்லி.பின் சட்னி ,
சாம்பார்..அதாவது குருமா...
ஒரு பந்தியில் எப்படி பரிமாறுவார்களோ அப்படி அனைவருக்கும் வரிசையாய்
பரிமாறிக்கொண்டிருந்தார்..
இட்லிக்கு அந்த குருமா செம....அரைத்துவிட்ட தேங்காயுடன் சோம்பு பட்டை வாசத்துடன்
மிக மிக செம டேஸ்ட் உடன்...இட்லிக்கு ஏதுவாக அந்த குருமா...இட்லியும் சாப்டாக
இருக்க, இரண்டும் ஒரு சில நொடிகளில் இலையை விட்டு காணாமல் போய்விட்டிருந்தது.அடுத்த
சில நிமிடங்களில் ஆவி பறக்க தோசை ஒவ்வொன்றாய் இலையில் வைத்து விட்டு பின் சட்னி
சாம்பார் என வரிசைகட்டி வர, ஒருத்தரே தான் அத்தனையும் பரிமாறுகிறார்.
தோசைக்கும் அதே குருமா தான்...இரண்டும் செம காம்பினேசன்.சாப்பிட்டுக் கொண்டிருக்க
அதற்குள் வாடிக்கையாளர்கள் கூட்டம் மொய்க்கிறது.காத்திருக்க ஆரம்பிக்கின்றனர்.முதல்
பந்தி முடிந்தவுடன் அடுத்த பந்தி ஆரம்பிக்கிறது.சில நிமிடங்களில் மீண்டும்
நிறைகிறது அந்த நான்கு பென்ச்கள்.மீண்டும் அதே வரிசையாய் பரிமாறப்பட்டு
சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றனர்.
நாங்கள் இரண்டு இட்லி இரண்டு தோசை சாப்பிட்டு விட்டு பொறுமையாய் வெளியேறினோம்.நல்ல
சுவை, சுடச்சுட தோசை...சூடான குருமா..நன்றாக இருக்கிறது.
குருமா சாப்பிட்டவுடன் உடனே சொன்னேன்..இந்த மாதிரி தான் என் அம்மா குருமா
வைப்பார்கள் என்று....
கடையை விட்டு வெளியேற வரிசையாய் நிறைய கார்கள் வருகின்றன அவர் கடைக்கு ஒரு
கெளரவத்தினை அளிக்கின்றன.
நண்பர் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக அங்கு சாப்பிட்டு வருகிறாராம்.டேஸ்ட் அப்படியே தான் இருக்கிறது எனவும், ஒரு சில முகூர்த்த தினங்களில் அரைமணி நேரம் கூட காத்திருந்து சாப்பிட்டுவிட்டு வருவாராம்.கார்களின் வரிசை நிறுத்தக்கூட இடம் இருக்காதாம்...
நண்பர் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக அங்கு சாப்பிட்டு வருகிறாராம்.டேஸ்ட் அப்படியே தான் இருக்கிறது எனவும், ஒரு சில முகூர்த்த தினங்களில் அரைமணி நேரம் கூட காத்திருந்து சாப்பிட்டுவிட்டு வருவாராம்.கார்களின் வரிசை நிறுத்தக்கூட இடம் இருக்காதாம்...
அவினாசி போனா சாப்பிட்டு பாருங்க...செம டேஸ்ட்...
பி எஸ் என் எல் ஆபிஸ் அருகில் இருக்கிறது.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
அம்மா ஞாபகம் வந்தது என்றால் செம டேஸ்ட் தான்...
ReplyDeleteArumai... Suvaika thoondum pathuvu
ReplyDeletePremkumar
நல்ல சுவை - குருமாவும் உங்கள் வர்ணனையும்
ReplyDelete