Wednesday, July 22, 2015

கோவை மெஸ் - சேட் டீக்கடை, மூணு ரோடு,சூரமங்கலம் மெயின்ரோடு, சேலம்.

                            சேலம் மூணு ரோடு..கோவையில் இருந்து வருகிற பேருந்துகள் இந்த வழியாகத்தான் பஸ் ஸ்டாண்ட்க்குச் செல்லும்.அப்படித்தான் நானும் வந்து இறங்கினேன் இங்கு.இறங்கிய நேரம் என்னவோ மாலை நேரம்.கோவையில் இருந்து மூன்று மணி நேரம் பேருந்தில் அமர்ந்து வந்தது ஒரு மாதிரியாயிருக்க ஆதலால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள பக்கத்திலிருந்த டீக்கடைக்கு சென்றேன்.ரொம்ப சாதாரண டீக்கடை.பெரிதாக பேக்கரி போன்று ஆடம்பரமில்லாத கடை. கடைக்குள்ளும் நுழையவில்லை.ரோட்டில் இருந்தபடியே டீ ஆர்டர் பண்ணினேன்.நமக்கு தேவை டீ தானே..கடை எப்படி இருந்தால் என்ன  என்கிற மனோ பாவத்துடன் ஒரு டீ சொன்னேன்.மாஸ்டரும் டீ தயாரிப்பதில் மும்முரமாய் இருக்க நானோ வெளியே ரோட்டை வேடிக்கைப்பார்த்தபடி இருந்தபோது, சாப்....சாய் ரெடி என குரல் கேட்க,  அட... சேட்டுக்கடை !.. என்றபடியே வாங்கி டீ சூடான டீயை பருக,  குடித்துப்பார்த்ததில் டீ செம டேஸ்ட்.ஏலக்காய் மணம் தூக்க டீயும் நல்ல திக்காக இருக்க செம டேஸ்ட்.ஒரு சாதாரண டீ தான்..இதை இவ்வளவு டேஸ்டாக போட முடியுமா என்று ஆச்சர்யப்பட்டு கடைக்குள் நுழைய, கடையின் டேபிளில் ஏகப்பட்ட வெரைட்டியான பலகாரங்கள்...

                                              எல்லாம் அவங்க ஊர் பலகாரம் போல.அத்தனையும் அந்த இடத்திலேயே செய்கிறார்கள்.கொழுக்கட்டை வடிவில் ஒரு இனிப்பு பலகாரம், அப்பளம் போன்று ஒரு மொறு மொறு கார பலகாரம், ரவா லட்டுகளில் இரண்டு வகை , மிக்சர் என தட்டுக்களில் பரப்பி வைத்து இருந்தனர்.டீயும் செம டேஸ்டாக இருக்க, சூடாய் குடித்துக்கொண்டே அப்பளம் ஒன்றை எடுத்துக்கொறிக்க, அதுவும் செம டேஸ்ட்.கொஞ்சம் கொஞ்சமாய் அப்பளம் கொறித்து, ஒவ்வொரு மிடக்காய் டீயும் கலந்து சாப்பிட ஆஹா...செம டேஸ்ட்....

                         டீ சாப்பிட்டு முடித்தவுடன் அந்த கொழுக்கட்டை இனிப்பு பலகாரத்தினை சாப்பிட்டு பார்க்க, உள்ளே தேங்காய் சேர்த்து சுவையாக செய்திருந்தனர்.நன்றாக இருக்கிறது சாப்பிட.டீயும் பலகாரமும் சாப்பிட்டுவிட்டு, அடுத்த தெருவில் இருக்கும் நாங்கள் பணி செய்து கொண்டிருக்கும் அலுவலகத்திற்கு சென்று அங்குள்ளவர்களிடம் இந்த கடையைப்பத்தி சொன்ன போது, அவர்களும் நாங்களும் அங்கு தான் டீ குடித்துக்கொண்டிருக்கிறோம் என்று ஒரே கோரஸாய் சொன்னார்கள்..ஒரு வாரம் அங்கு நம் ஆட்கள் வேலை செய்தபோது அந்த கடையில் தான் காலை மாலை இருவேளையும் டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தனர் என்பது எக்ஸ்ட்ரா தகவல்..
டீ அவ்ளோ அருமை.ஏலக்காய் மணம் வீச மிடக்கு மிடக்காய் குடிக்க ஆஹா...அருமை...
இந்தக்கடைக்கு போர்டெல்லாம் இல்லை.கடை பேரு என்னவென்று எழுதட்டும் என கேட்க, சேட்டான்கடை என்று எழுதுங்கள் என்று சொன்னார் கடைக்காரர்.போட்டோவில் இருப்பவர்கள் தான் டீக்கடைக்கு சொந்தக்காரர்கள்...
மூணுரோட்டில் இருக்கிறது இந்த போர்டில்லாத சேட்டான் கடை...(கடைக்கு பக்கத்திலேயே டாஸ்மாக் வேற இருக்கு...அங்க கூட போயிருக்கலாம் தான்..ஆனா வேலை முக்கியமாச்சே.....வேலை முடித்துவிட்டு திரும்பி வரும் போது அந்த டாஸ்மாக்கில் தான் நம்ம பகார்டி வாங்கினேன் என்பது வேற விசயம் )

நேசங்களுடன் 
ஜீவானந்தம்3 comments:

 1. அனைத்து இடங்களிலும் இந்த மாதிரி ராஜஸ்தான் ஆட்கள் கூட்டம் கூட்டமாக டீக்கடை போட்டாட்டாச்சு, தமிழனின் ஒரு தொழில் இவர்களால் பறிக்கப்படுகிறது. டீக்கடை வச்சாவது பிழைக்கலாம் என்று எண்ணக்கூட முடியாது போலிருக்கிறது. ஆரம்பத்தில் தரமாக இருப்பது போல் இருந்தாலும் போக போக படு கேவலமாக மாறி வருகிறது டீ.யின் சுவை... மேலும், சுத்தம் என்றால் கிலோ என்ன விலை என்று அவர்களுடைய கடையைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். தமிழர்களை வாழவைக்க இந்தமாதிரி பிற மாநிலத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதை தவிர்க்கவும்.

  சிவபார்க்கவி

  ReplyDelete
  Replies
  1. வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்பது உண்மைதான்....

   Delete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....