Showing posts with label R.S. புரம். Show all posts
Showing posts with label R.S. புரம். Show all posts

Friday, October 26, 2018

கோவை மெஸ் - ஸ்டார் பிரியாணி, R.S புரம் கிளை, கோவை. STAR BIRIYANI, R.S.PURAM BRANCH, COIMBATORE


                                 ஞாயிறு.. மதிய நேரத்தில் பொழிந்த மழையினூடே கடையை தேடி பயணித்தோம்.கடை என்பது நம்ம அரசாங்க கடை அல்ல.நல்ல சுவை மிகு உணவைத் தேடி.எப்பொழுதோ கோவையில் தனது கிளையை பரப்பியுள்ள ஸ்டார் பிரியாணி ஹோட்டலுக்கு சென்றோம்.பிரியாணிக்கு புகழ் ஆம்பூர்தான்.அங்கு கிடைக்கும் அதே சுவை இருக்குமென நினைத்து பிரியாணியை ஆர்டரிட்டோம்.



                       சென்னை வேலூர் ஆற்காடு மாவட்டத்தைப் பொறுத்தவரை பிரியாணிக்கு பாசுமதி அரிசிதான்.ஆனால் இங்கோ பாசுமதிக்கு பதில் சீரக சம்பா..சம்பாவிற்கென உண்டான சுவையும் இல்லை.சாதம் குழைந்தது போலவே இருக்கிறது. பிரியாணியின் நிறம் மட்டும் கொஞ்சம் ஒத்திருக்கிறது.மட்டன் துண்டுகள் பெரிதாக இருந்தாலும் எலும்புகளே ஆக்ரமிக்கின்றன.பிரியாணி சாப்பி்ட்ட உணர்வே இல்லை.இதற்கு கொடுத்த கத்தரி கட்டா சுவையாக இருந்தது.
பிரியாணி சொல்லிக் கொள்வது போல இல்லை.கடையில் வேலை செய்பவரிடம் அரிசி பற்றி கேட்டால் ஆம்பூரில் சீரகசம்பா தான் போடுகிறார்களாம்.அப்படி இருந்தும் சீரக சம்பாவிற்கென்ற ருசி இல்லை.வேலூர் மாவட்ட பிரியாணி நிறத்தில் தான் இவர்களின் பிரியாணியும் இருக்கிறது.ஆனால் சுவை குறைவாகவே இருக்கிறது.வேலூரில்
டூப்ளிகேட் கடைகள் நிறைய இருந்தாலும் அங்கு இதை விட கொஞ்சம் நன்றாகவே இருக்கிறது.வாணியம்பாடியில், ஆம்பூரில் ஒரு சில கடைகளில் சாப்பிட்டு இருக்கிறேன்.அங்கு சாப்பிட சுவையாகவே இருக்கிறது.ஆனால் இந்த கடையில் நன்றாக வே இல்லை.
           மழைக்கு இதமாய் காரஞ்சாரமாய் இருக்கும் என ட்ரை அயிட்டங்கள் ஆர்டர் செய்தால் அதுவும் நன்றாகவே இல்லை.இறால் ஃபிரை ஏதோ பகோடா சாப்பிட்ட உணர்வைத் தான் தந்தது.ஹைதராபாத் ஃபிரை என்று ஒன்று.அதுவும் நன்றாகவே இல்லை.அதே போல் எக் பிரைடு ரைஸ்..அரிசி அரைவேக்காட்டில்..வடிச்ச சாதத்தில் அப்படியே போட்டு பிரட்டி கொண்டு வந்தது போல இருக்கிறது.கொஞ்சம் கூட ட்ரை ஆகவே இல்லை.




                   சர்வீஸ் சுத்த மோசம்.ஆர்டர் எடுத்ததில் இருந்து பில் வந்தது வரை ரொம்ப ஸ்லோ..இந்த ஞாயிற்றுக்கிழமை பிரியாணிக்கு ஆசைப்பட்டு மோசம் போனது இந்த ஸ்டார் பிரியாணியில் தான்.விலையும் எப்பவும் போலவே கோவைக்கு ஏற்றார்போல இருக்கிறது அதிகமாய்...
இனி அந்தப்பக்கம் தலைவைத்து படுப்போம்...


நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Monday, February 25, 2013

கோவை மெஸ் - கோவை பிரியாணி ஹோட்டல், R.S. புரம், கோவை

கோவை மெஸ் - கோவை பிரியாணி ஹோட்டல், R.S. புரம், கோவை
இந்த ஹோட்டல் புரூக் பீல்ட்ஸ் எதிரில் பெட்ரோல் பங்க் பின்புறம் இருக்கிறது.இந்த ஹோட்டலில் வீச்சு புரோட்டா மிக நன்றாக இருக்கும் என்று நண்பர் சொன்னதால் அங்கு படைஎடுத்தோம்.வீடு போன்ற அமைப்புதான்.கீழ் தளத்திலும் மாடியிலும் இருக்கிறது.உள் நுழைந்ததும் உரித்த கோழிகள் கிரில்லில் சுத்திக் கொண்டிருப்பதை பார்த்தபடியே நாங்கள் மாடிக்கு சென்றோம்.சுற்றிலும் மூங்கில் பிளைண்ட்ஸ் தொங்கவிட்டு மிக ரம்மியமாக இருக்கிறது.அதை விட அங்கே ஏகப்பட்ட அம்மணிகள்...ப்ரூக் பீல்ட்ஸ் போய்ட்டு வந்து தெம்பாக ஒரு கட்டு கட்டிக்கொண்டிருந்தனர். நோட்டம் விட்டபடியே எங்களுக்கென்று தோதாய் இடம் பிடித்து அமர்ந்தோம்..
சர்வர் வர ஒவ்வொன்றாய் ஆர்டர்..
பிரியாணி, முட்டை வீச்சு, சாதா வீச்சு, சிக்கன் கொத்துகறி என்று...
பிரியாணி நிறைய தடவை சாப்பிட்டு இருக்கிறேன் இங்கு..சுவை அதிகம் ஈர்க்கவில்லை.பிரியாணி நிறம் குறைவாகவே இருக்கிறது எப்போதும் இங்கு.அங்கண்ணன் கடை பிரியாணி  போலவே இங்கும் இருக்கிறது.டேஸ்ட் குறைவு தான்..
 

முட்டை வீச்சு...ரொம்ப சாஃப்டாக..நன்றாக இருக்கிறது.அதுபோலவே சாதா வீச்சும்..ரசித்து ருசித்ததில் இன்னும் சுவை அதிகமாகிக் கொண்டே போகிறது.
கொத்துகறி மட்டனில் தான் கிடைக்கும் என்று நினைத்தேன்..சிக்கனிலும் நன்றாக இருக்கிறது.செம டேஸ்ட்..மட்டன் போன்று ரொம்ப தூளாக இல்லை.ஆனால் சின்ன சின்ன துண்டுகள்..மிக நன்றாக இருக்கிறது.
 
 கடைசியாய் ஒரு லைம் சோடா குடித்துவிட்டு எஸ் ஆனோம்...

 
 
 பில் எப்போதும் போல கோவைக்கே உண்டான ரேட்டுதான்.ஒன்றும் மாற்றமில்லை..முன்பெல்லாம் ஞாயிறுகளில் மட்டுமே இங்கு கூட்டம் அள்ளும்..இந்த ப்ரூக் பீல்ட்ஸ் வந்ததினால் இந்த ஹோட்டலில் இப்போது செம கூட்டம் அள்ளுகிறது. சாப்பிட்டு பார்க்கலாம்..
அதேபோல் இந்த ஹோட்டலின் சுவை பத்தி சொல்ல  தனி மொபைல் நம்பர் வைத்து இருக்கின்றனர்.நேரிலேயே சொல்லி விட்ட படியால் போன் பண்ணவில்லை..


நேசங்களுடன்
ஜீவான்ந்தம்



இன்னும் கொஞ்சம்...