வாரா வாரம் ஞாயிறு அன்னிக்கு வீட்டுல நம்ம கைவண்ணம் தான். (அன்னிக்கு மட்டும் நம்ம அம்மணிக்கு ரெஸ்ட்) இந்த வாரம் கொஞ்சம் டிஃபரண்டா இருக்கட்டுமே அப்படின்னு ஃபிஷ் ஃபிங்கர் ஃபிரை பண்ணினேன்.இது ஒரு சைட் டிஷ்.குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.மீன் சாப்பிடாம இருக்கிறவங்களுக்கு இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க...என்ன........ கொஞ்சம் வேலைதான் ஜாஸ்தி...பொதுவா வஞ்சிரம், பாறை போன்ற மீன்களில்தான் செய்வாங்க.நான் நெய்மீன் எடுத்துக்கிட்டேன்.
செய்முறை சொல்லிடறேன்.
வேண்டிய பொருட்கள்:
நெய்மீன் - 500கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - சிறிதளவு
மிளகாய்த்தூள்- கொஞ்சம்
கார்ன் மாவு- 2 டீஸ்பூன்
லெமன் சாறு - சிறிது
அரிசிமாவு - கொஞ்சம்
மைதா மாவு- கொஞ்சம்
ப்ரட்கிரம்ஸ் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
முட்டை - 2
எண்ணை- பொரிக்க தேவையான அளவு
முதலில் நெய் மீனை சுத்தம் செய்து வாங்கி கொண்டு அதை சுடு நீரில் கொஞ்ச நேரம் போட்டு வைக்க வேண்டும்.பின் அதில் உள்ள முட்களை நீக்கிவிட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு பிசைந்து கொள்ள வேண்டும்.இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், கார்ன் மாவு. மைதா, அரிசி மாவு, லெமன் சாறு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.கைகளில் ஒட்டாத பதத்திற்கு நன்றாக கூடவோ குறைத்தோ கார்ன், அரிசி மாவினை சேர்த்துக்கொள்ளவும்.
ப்ரட் துண்டுகளை மிக்ஸியில் இட்டு நன்றாக பொடியாக அரைத்துக் கொள்ளவும்.முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு கலக்கி கொள்ளவும்.
பிசைந்து வைத்திருக்கும் ஃபிஷ் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து விரல் அளவில் இருக்குமாறு உருட்டி வைத்துக்கொள்ளவும்.வாணலியில் எண்ணையை காயவைத்து அதில் இந்த பிஷ் ஃபிங்கரை முட்டையில் நனைத்து , பிரட்டில் தோய்த்து போட வேண்டும்.பொன்னிறமாக வரும் வரை வேக வைத்து பொரித்து எடுக்க வேண்டும்.இப்போது சுவையான ஃபிஷ் ஃபிங்கர் ஃபிரை ரெடி....செஞ்சு சாப்பிட்டா நல்ல டேஸ்டாக இருக்கும்.
குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.அது போலவே பெரியவர்களும்..நமக்கு சைட் டிஷ்க்கு சரியான பதார்த்தம்.
சைவப்ப்ரியர்கள் மீன் இல்லாமல் காய்கறிகளை சேர்த்து முட்டை சேர்க்காமல் பொறிக்கலாம்.வெஜ் ஃபிங்கர் ஃபிரை.
பதிவர் சந்திப்பு - நாள் -1.9.2013, இடம் - சென்னை - அனைவரும் வாரீர்
ஜீவானந்தம்






