Friday, August 2, 2013

சமையல் - அசைவம் - ஃபிஷ் ஃபிங்கர் ஃபிரை (Fish finger fry )

வாரா வாரம் ஞாயிறு அன்னிக்கு வீட்டுல நம்ம கைவண்ணம் தான். (அன்னிக்கு மட்டும் நம்ம அம்மணிக்கு ரெஸ்ட்) இந்த வாரம் கொஞ்சம் டிஃபரண்டா இருக்கட்டுமே அப்படின்னு ஃபிஷ் ஃபிங்கர் ஃபிரை பண்ணினேன்.இது ஒரு சைட் டிஷ்.குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.மீன் சாப்பிடாம இருக்கிறவங்களுக்கு இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க...என்ன........ கொஞ்சம் வேலைதான் ஜாஸ்தி...பொதுவா வஞ்சிரம், பாறை போன்ற மீன்களில்தான் செய்வாங்க.நான் நெய்மீன் எடுத்துக்கிட்டேன்.

செய்முறை சொல்லிடறேன்.

வேண்டிய பொருட்கள்:
நெய்மீன் - 500கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - சிறிதளவு
மிளகாய்த்தூள்- கொஞ்சம்
கார்ன் மாவு- 2 டீஸ்பூன்
லெமன் சாறு - சிறிது
அரிசிமாவு - கொஞ்சம்
மைதா மாவு- கொஞ்சம்
ப்ரட்கிரம்ஸ் - தேவையான அளவு
உப்பு  - தேவையான அளவு
முட்டை - 2
எண்ணை- பொரிக்க தேவையான அளவு


முதலில் நெய் மீனை சுத்தம் செய்து வாங்கி கொண்டு அதை சுடு நீரில் கொஞ்ச நேரம் போட்டு வைக்க வேண்டும்.பின் அதில் உள்ள முட்களை நீக்கிவிட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு பிசைந்து கொள்ள வேண்டும்.இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், கார்ன் மாவு. மைதா, அரிசி மாவு, லெமன் சாறு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.கைகளில் ஒட்டாத பதத்திற்கு நன்றாக கூடவோ குறைத்தோ கார்ன், அரிசி மாவினை சேர்த்துக்கொள்ளவும்.

ப்ரட் துண்டுகளை மிக்ஸியில் இட்டு நன்றாக பொடியாக அரைத்துக் கொள்ளவும்.முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் போட்டு கலக்கி கொள்ளவும்.


பிசைந்து வைத்திருக்கும் ஃபிஷ் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து விரல் அளவில் இருக்குமாறு உருட்டி வைத்துக்கொள்ளவும்.வாணலியில் எண்ணையை காயவைத்து அதில் இந்த பிஷ் ஃபிங்கரை முட்டையில் நனைத்து , பிரட்டில் தோய்த்து போட வேண்டும்.பொன்னிறமாக வரும் வரை வேக வைத்து பொரித்து எடுக்க வேண்டும்.இப்போது சுவையான ஃபிஷ் ஃபிங்கர் ஃபிரை ரெடி....செஞ்சு சாப்பிட்டா நல்ல டேஸ்டாக இருக்கும்.




குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.அது போலவே பெரியவர்களும்..நமக்கு சைட் டிஷ்க்கு சரியான பதார்த்தம்.
சைவப்ப்ரியர்கள் மீன் இல்லாமல் காய்கறிகளை சேர்த்து முட்டை சேர்க்காமல் பொறிக்கலாம்.வெஜ் ஃபிங்கர் ஃபிரை.


 பதிவர் சந்திப்பு -  நாள் -1.9.2013, இடம் - சென்னை  - அனைவரும் வாரீர்



நேசங்களுடன்
ஜீவானந்தம்


19 comments:

  1. வேலை கொஞ்சம் ஜாஸ்தி தான்...!

    ReplyDelete
    Replies
    1. ஆமா தி.தி...
      ஆனா டேஸ்ட் கிடைக்கிறச்ச கவலை எல்லாம் போயே போச்சு...

      Delete
  2. வாவ்வ்வ்... சூப்பர் சமையல். மீனை சுடுநீரில் போடவேண்டுமா அல்லது கொதிக்கும் நீரில் இட்டு, லேசாக அவிக்கவேண்டுமா? காரணம் முட்களை எடுக்கவேண்டுமென்றால் கொஞ்சம் அவிந்திருந்தால் எளிதாக அந்த முள் வந்துவிடும்.. அதான் கேட்டேன்.
    இங்கே கடைகளில் விற்கப்படும் அதிவேக விற்பனை உணவு இது. சுடச்சுட வாங்கிச்சாப்பிடும்போது நாவில் சுவை இருந்துகொண்டே இருக்கும்.
    இதற்குத் தொட்டுக்க, சாஸ் - தக்களி அல்லது சில்லி சாஸ் இதனின் சுவையினைக் கூட்டும்.
    அதையும் நாமே செய்யலாம்.. :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க விஜி...சுடுநீரில் கொஞ்ச நேரம் வைத்து இருந்தால் போதும்.முள் எடுக்க தான் இப்படி செய்வது.வஞ்சிரம் மீனாக இருந்தால் கடையிலேயே ஃபிங்கர் சைசுக்கு வெட்டி வாங்கி வந்து விடலாம்.நன்றாக இருக்கும்..செம டேஸ்டாக இருக்கிறது.செய்ய செய்ய காலியாகிக் கொண்டே இருக்கி்றது.ஜாஸ் நன்றாக இருக்கும் தொட்டுக்கொள்ள

      Delete
  3. எங்கள் ஹோட்டலில் செய்வார்கள் சூப்பராக இருக்கும், எங்கள் ஹோட்டல் செஃப் எனக்காகவே இதை ஆபீஸ் அனுப்பி தந்து மகிழ்வார், ஆனால் இங்கே அந்த மீனின் பெயர் ஹம்மூர் என்று சொல்வார்கள், பஹ்ரைன் கடல்மீன் அது.

    சூப்பர் சமையல் வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மனோ...ஹம்மர் கேள்வி பட்டு இருக்கேன்...இது புதுசா இருக்கு..உங்கள மாதிரி வித விதமா சாப்பிட ஆசை தான்...என்ன பண்றது..

      Delete
  4. உவ்வே! இன்னிக்க்கு வெள்ளிக்கிழமை, நான் விரதம் தெரியாம இங்க வந்துட்டேன்.சாரி. பை பை

    ReplyDelete
    Replies
    1. அப்படியா...அப்போ ஆடி முடிஞ்சு ஆவணி வந்தா டாப்பா இருக்கும்

      Delete
  5. அடிகடி இப்படி குழந்தைகளுக்கு செய்யும் பதிவை வெளியிடுங்கள் அப்படியாவது நாங்க செய்து சாப்பிடுகிறோம் நன்றி .......படத்தை பார்த்ததும் சாப்பிட தூண்டுது

    ReplyDelete
    Replies
    1. அப்போ இனி குழந்தைகள் தான் கமெண்ட் போடுவாங்களோ...

      Delete
  6. மீன் பாவம்...

    ReplyDelete
    Replies
    1. மீனுக்கு கொடுத்து வச்சிருக்கு நான் சாப்பிடறேனே அப்படின்னு

      Delete
  7. மீன் சமைக்கத்தெரியும். சாப்பிட முடியாது. நமக்கு வெஜ் ப்ரைதான்.

    ReplyDelete
    Replies
    1. அதென்னங்க புதுசா இருக்கு...அப்போ சமைச்சு என்ன பண்ணுவீங்க...?

      Delete
  8. பார்க்கும் போதே சாப்பிடணும் போல் இருக்கு...

    ReplyDelete
  9. வாங்க ஒரு நாள் செஞ்சு தரேன்,,,வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  10. ஹா ஹா... மீன் சாப்பிட்டா கண்ணுக்கு நல்லது... சாப்பிடலேன்னா மீனுக்கு நல்லது... நாக்கில எச்சி ஊறுது...

    ReplyDelete
  11. பிஷ்ஷுக்கு ஏது மாப்பிளே பிங்கரு??

    ReplyDelete
  12. Try to avoid eating this Fish .. Most of this fishes are coming from fish pool, the foods giving to the fish is totally horrible one . One of the Fisherman said this ..

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....