சென்னையில்
துவங்கவிருக்கிற இரண்டாம் ஆண்டு பதிவர் சந்திப்பு விழா வெற்றிகரமா கோலாகலமா
நடக்கப்போகுது.இன்னும் ஒரிரு நாட்களே இருக்கு.எல்லாரும் தீயா வேலை செஞ்சிட்டு
இருக்காங்க.அதிலும் முக்கியமான தலக்கட்டுகள் பெரியவர் முதல் சிறியவர் அனைவரும் முன்னின்று
ஏற்பாட்டை செஞ்சிட்டு இருக்காங்க.காலையில இருந்து மாலை வரைக்கும் நல்ல நல்ல
நிகழ்ச்சிகள் இருக்கு.கோவையின் பிரபல எழுத்தாளர் பாமரன் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்.பிரபல
பதிவர்களோட புத்தகம்லாம் ரிலீஸ் ஆகப்போகுது.அதில்லாம பதிவர்களோட தனித்திறன் நிகழ்வாக
பாட்டு, டான்ஸ், கவிதை, நாடகம் இதெல்லாம் இருக்காம். (அப்படியே பக்கத்துல கேண்டீன்
ஒண்ணு வச்சிருங்க சாமியோவ்...செமையா கல்லா கட்டிறலாம்..ஹிஹிஹி ) பயங்கரமா கச்சேரி களை கட்டப்போகுது.
சரி..சரி அதை விடுங்க.நம்ம மேட்டருக்கு வாங்க..மத்தியான விருந்துக்கு நான்வெஜ் அயிட்டமெல்லாம் போடறாங்களாம்.அதிலும் நமக்கு பிடிச்ச ஏகப்பட்ட வெரைட்டிகள் இருக்காம்.கடல்ல நீந்தறதுல கப்பலைத் தவிர, ஆகாசத்துல பறக்குறதுல விமானத்தைத் தவிர, ஓடறதுல பஸ் லாரி கார் தவிர, இப்படி எல்லா வகை உயிரினமும் இருக்காம்.ஓடறது போடறது கூட இருக்காம்...ஒரு புடி புடிச்சிட வேண்டியது தான் ஏன்னா இது நம்ம வீட்டு கல்யாணம்...(சாரி..ஒரு ஃப்ளோவுல வந்திடுச்சு... ) இது நம்ம வீட்டு விசேசம்... பூந்து விளையாடலாம்... இந்த சாப்பாட்டு விருந்துல என்னென்ன மெனு இருக்குன்னு தெரியல..எதுவா இருந்தாலும் சாப்பிடுவோம்...ஒரு வேளை கீழே இருக்கிறது எல்லாம் இருக்குமோ...
உஸ்ஸ்...அப்பாடா...
இப்பவே கண்ணைக்கட்டுதே....
படங்களைப் பார்க்கையிலே
பசி நரம்புகள் சத்தமிடுதே...

சைவப் பிரியர்களே கவலைப்படாதீங்க எங்களைப் பார்த்து கண்ணு வைக்காதீங்க..உங்களுக்கும் வகை வகையாய் நிறைய இருக்கு, தயிர் சாதம், ஊறுகாய்ன்னு (அதுவும் பாண்டியன் மட்டை ஊறுகாய்) ஏற்பாடு செஞ்சி இருக்காங்களாம்..ஹிஹிஹி .....ஒரு பிடி பிடிச்சுகுங்க.
எல்லாரும் கண்டிப்பா வந்திடுங்க...ஒரு கை பார்த்திடலாம்..
எல்லாரும் கண்டிப்பா வந்திடுங்க...ஒரு கை பார்த்திடலாம்..
கிசு கிசு : மத்தியான
நேரத்துல என்னை எங்கயும் தேடாதீங்க கண்டிப்பா முத பந்தியில நான் இருப்பேன் ஹிஹிஹி...
பதிவர் சந்திப்பு - நாள் -1.9.2013, இடம் - சென்னை - அனைவரும் வாரீர்
நேசங்களுடன்
ஜீவானந்தம்
பதிவர் சந்திப்பு - நாள் -1.9.2013, இடம் - சென்னை - அனைவரும் வாரீர்
நேசங்களுடன்
ஜீவானந்தம்