Showing posts with label பண்ணைபுரம். Show all posts
Showing posts with label பண்ணைபுரம். Show all posts

Monday, August 13, 2012

கரம் - 2


கரம்  - 2 - தேனி மாவட்டம்.
தேனியில் இருந்து சுருளிபட்டி போற வழியில் ஒரு போர்டு பார்த்தோம்.எங்கயோ பார்த்த படிச்ச ஞாபகம் இருக்கே அப்படின்னு  நம்ம ஏழாம் அறிவுக்கு வர...அட....நம்ம மாஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா அவர்களோட சொந்த ஊரு... பண்ணைபுரம்.ஆவல் மேலிட அங்க இருக்கிறவங்க கிட்டே அவரோட வீடு எங்கன்னு கேட்டோம்.கொஞ்ச தூரம் ஊருக்குள்ள போகணும் அப்படின்னு சொன்னாங்க.அவசர வேலையில் இருந்ததால் லேட் ஆகுமோ அப்டின்னு அங்க போகல.ஆனாலும் போர்டு பார்த்த மகிழ்ச்சி...அவரின் ஊரில் பாதம் பட்ட மகிழ்ச்சி இன்னும் இருக்கிறது.
 ***--------------------------------------------------------------***
தேனியில் இருக்கறச்ச டீ குடிக்க போலாம்னு சொன்னதால் மிக முக்கியமான பிரபலமான கடைக்கு கூட்டிட்டு போனாங்க நம்ம பாசக்கார பயலுங்க..யாரோட கடை அப்படின்னு பார்த்தா நம்ம முன்னாள் முதல்வரோட அதுதாங்க ஓ பன்னீர் செல்வம் அவர்களோட டீக்கடை.ஒரு பிரபலத்தின் டீ கடையில் குடித்தது மனதிற்கு இனியதாக இருக்கிறது.பக்கத்தில இருக்கிற பில்டிங் அவரோட ஆபிஸ்

 ***--------------------------------------------------------------***
பெரியகுளம் பகுதியில் கலைக்குழு நிறைய இருக்குது போல.. ஆங்காங்கே ப்ளெக்ஸ் போர்டில் கரகாட்டம் ஆடின போஸில்  நிறைய குழுக்கள்....
 ***---------------------------------------------------------------***
தலைப்பு 
ஒரு  படம் படம் ரொம்ப வெற்றி பெற்றால் நம்ம கோடம்பாக்கம்  டைரக்டர்கள்  அதே மாதிரி டைட்டில் வச்சி நம்மள கொன்னு எடுப்பாங்க...

 உதாரணமா காதலுக்கு மரியாதை வந்த போது மண்ணுக்கு மரியாதை, மனைவிக்கு மரியாதை  அப்படின்னு வந்துச்சு..

செந்தமிழ்ப்பாட்டு, வண்ணத்தமிழ்பாட்டு
காதல்  தேசம். புன்னகை தேசம் இப்படின்னு...சொல்லிட்டே போகலாம்.
 இப்போ நான் ஈ ரொம்ப ஹிட் ஆனதால்

நான் எறும்பு 
நான் வண்டு

நான் கொசு
நான் பன்னி, நான் கழுத, நான் எரும....   ....அனேகமா இப்படித் தான் வைப்பாங்க அப்படின்னு நினைக்கிறேன்..

***----------------------------------------------------------------***
 
நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...