கரம் - 2 - தேனி மாவட்டம்.
தேனியில் இருந்து சுருளிபட்டி போற வழியில் ஒரு போர்டு பார்த்தோம்.எங்கயோ பார்த்த படிச்ச ஞாபகம் இருக்கே அப்படின்னு நம்ம ஏழாம் அறிவுக்கு வர...அட....நம்ம மாஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா அவர்களோட சொந்த ஊரு... பண்ணைபுரம்.ஆவல் மேலிட அங்க இருக்கிறவங்க கிட்டே அவரோட வீடு எங்கன்னு கேட்டோம்.கொஞ்ச தூரம் ஊருக்குள்ள போகணும் அப்படின்னு சொன்னாங்க.அவசர வேலையில் இருந்ததால் லேட் ஆகுமோ அப்டின்னு அங்க போகல.ஆனாலும் போர்டு பார்த்த மகிழ்ச்சி...அவரின் ஊரில் பாதம் பட்ட மகிழ்ச்சி இன்னும் இருக்கிறது.
***--------------------------------------------------------------***
தேனியில் இருக்கறச்ச டீ குடிக்க போலாம்னு சொன்னதால் மிக முக்கியமான பிரபலமான கடைக்கு கூட்டிட்டு போனாங்க நம்ம பாசக்கார பயலுங்க..யாரோட கடை அப்படின்னு பார்த்தா நம்ம முன்னாள் முதல்வரோட அதுதாங்க ஓ பன்னீர் செல்வம் அவர்களோட டீக்கடை.ஒரு பிரபலத்தின் டீ கடையில் குடித்தது மனதிற்கு இனியதாக இருக்கிறது.பக்கத்தில இருக்கிற பில்டிங் அவரோட ஆபிஸ்
***--------------------------------------------------------------***
பெரியகுளம் பகுதியில் கலைக்குழு நிறைய இருக்குது போல.. ஆங்காங்கே ப்ளெக்ஸ் போர்டில் கரகாட்டம் ஆடின போஸில் நிறைய குழுக்கள்....
***---------------------------------------------------------------***
தலைப்பு
ஒரு படம் படம் ரொம்ப வெற்றி பெற்றால் நம்ம கோடம்பாக்கம் டைரக்டர்கள் அதே மாதிரி டைட்டில் வச்சி நம்மள கொன்னு எடுப்பாங்க...
உதாரணமா காதலுக்கு மரியாதை வந்த போது மண்ணுக்கு மரியாதை, மனைவிக்கு மரியாதை அப்படின்னு வந்துச்சு..
நான் எறும்பு
நான் வண்டு
நான் கொசு
நான் பன்னி, நான் கழுத, நான் எரும.... ....அனேகமா இப்படித் தான் வைப்பாங்க அப்படின்னு நினைக்கிறேன்..
***----------------------------------------------------------------***
நேசங்களுடன்
ஜீவானந்தம்
ஒரு படம் படம் ரொம்ப வெற்றி பெற்றால் நம்ம கோடம்பாக்கம் டைரக்டர்கள் அதே மாதிரி டைட்டில் வச்சி நம்மள கொன்னு எடுப்பாங்க...
உதாரணமா காதலுக்கு மரியாதை வந்த போது மண்ணுக்கு மரியாதை, மனைவிக்கு மரியாதை அப்படின்னு வந்துச்சு..
செந்தமிழ்ப்பாட்டு, வண்ணத்தமிழ்பாட்டு
காதல் தேசம். புன்னகை தேசம் இப்படின்னு...சொல்லிட்டே போகலாம்.
இப்போ நான் ஈ ரொம்ப ஹிட் ஆனதால்நான் எறும்பு
நான் வண்டு
நான் கொசு
நான் பன்னி, நான் கழுத, நான் எரும.... ....அனேகமா இப்படித் தான் வைப்பாங்க அப்படின்னு நினைக்கிறேன்..
***----------------------------------------------------------------***
நேசங்களுடன்
ஜீவானந்தம்
//நான் எறும்பு
ReplyDeleteநான் வண்டு
நான் கொசு
நான் பன்னி, நான் கழுத, நான் எரும....//
ஹா..ஹா...சூப்பர்...
அட நம்ம ஒபிஎஸ் வீடா... பத்திரிகைகளில் கூட வராத படம்.அருமை.பாஸ் கடைசில நம்ம இசைஞானி வீட்டுக்கு போகாம வந்துட்டீங்களே... இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக போட்டோ எடுத்து போடுங்கள்.
ReplyDeleteOPS வீடு சிம்பிளாக இருக்கும் போல...
ReplyDelete//அவசர வேலையில் இருந்ததால் லேட் ஆகுமோ அப்டின்னு அங்க போகல//
ReplyDeleteபோய் இருந்தால் இன்னும் பல பதிவு எழுத மேட்டர் சிக்கிருக்கும் - மிஸ் பண்ணிடீன்களே மாப்ள
அட பண்ணைப்புரம்....! உங்கள் கால் பட்டுதா அங்கே? ஹார்மோனியம் எடுத்து வாசிச்சுப் பாருங்க ராகம் போட வருதான்னு! :)))
ReplyDeleteபுதிய தகவல்கள் .......
ReplyDeleteநான் ஈ பற்றிய உங்களின் கோணம் நகைக்க வைக்கிறது ....
இன்னும் பல செய்திகளை சொல்லி எங்களை சிரிக்க வைக்கும் நண்பருக்கு பாராட்டுக்கள்
முடிவில் தலைப்பைப் பற்றி நல்லதொரு ஆய்வு... ஹா...ஹா.. ரசித்தேன்....
ReplyDeleteதொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…
அப்படிச் சொல்லுங்க...! (இது என் தளத்தில் !)
நான் நெனச்சேன் நீங்க சொல்லிபோட்டீங்க போங்க...[ நான் ஈ ]
ReplyDeleteராஜா சார்ரோட அம்மா சமாதி+அவரோட பெரிய வீடு எங்க ஊர்ல (கூடலூர்) தான் பாஸ் இருக்கு, வருஷா வருஷம் அங்க வந்துகிட்டு இருந்தார், இப்ப வரது இல்ல.
ReplyDeleteOPS வீடு மளிகை மாதிரி இருக்கும்.... :)
சுவையான பதிவு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில் தயக்கம் ஏன் தோழா?
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_13.html
வணக்கம் சொந்தமே!தந்கள் தளம் இணைந்தது மகிழ்ச்சி.செம சுவாரஸ்யம்.அந்த நான் பண்ணி படம் எடத்தா சொல்லுங்க பாஸ்.நானும் வாரேன்.:)வாழ்த்துக்கள்.
ReplyDeleteசந்திர்போம் சொந்தமே!
ஹாய் ராஜ்...
ReplyDeleteOPS வீடு பத்தி நான் சொல்லவே இல்லையே...அது அவரோட ஆபிஸ்...அவர் வீடு பெரிய குளத்துல சும்மா செமயா இருக்கும்.நாங்க அவர் வீட்டுல க்ளாஸ் வொர்க் பண்ணி கொடுத்து இருக்கோம்....
ரசிக்க வைத்த பதிவு அண்ணா! தலைப்பு செம போங்க!!!
ReplyDelete