கரம் -பல்சுவை
-----------------------------------------------------
விபத்து
இப்போலாம் பயங்கரமா
சாலை விபத்து ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. பெருகி வரும் வாகன்ங்களை போலவே சாலை
விபத்துகளும் அதிகமாகின்றன.பராமரிப்பின்றி இருக்கும் சாலைகள், ஓட்டுனரின்
ஓய்வின்மை, மது போதையிலும் அதிவேகத்திலும் செல்வது, போக்குவரத்து விதிகளை பின்பற்றாதது
என பல்வேறு காரணங்களால் விபத்து ஏற்படுகிறது.
கோவை உள்ளிட்ட எட்டு
மாவட்டங்களில் கடந்த பத்து மாதங்களில் இதுவரைக்கும் 3500 பேர் பலியாகி இருக்கின்றனர்.
கோவை – 659; ஈரோடு –
518; நீலகிரி – 45; திருப்பூர் – 621; சேலம் – 532;நாமக்கல் – 463;
தர்மபுரி – 285; கிருஷ்ணகிரி – 410
கிட்டதட்ட 14426
பேர் காயமடைந்து இருக்கின்றனர்.(நன்றி - ஒரு நாளேடு)
நான் சேலத்தில்
இருந்து வந்து கொண்டிருந்தபோது ஒரு கொடுர விபத்தினை பார்த்தேன்.இருவரின் மூளை
ரோடெல்லாம் சிதறி வண்டியில் அவர்களின் உடல்களை மீட்க முடியாத படி வண்டியோடு
நசுங்கி கிடந்தனர்.மது போதையில் அதி வேகமாக வந்து பிரேக் பிடித்தமையால் வண்டி
கவிழ்ந்து மரணம்...
------------------------------------------------------------------
கோவையில் ஒரு தியேட்டரில் புரட்சித்தலைவரின் படம் வெளியானது.அதற்கு வைக்கப்பட்டுள்ள பேனர் மற்றும் கொடிகள் ... இன்னமும் புரட்சித்தலைவருக்கு மவுசு குறையவில்லை என்பது தெரிகிறது...
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்
என்பது கேள்வியில்லை அவன்
எப்படி வாழ்ந்தான்
என்பதை உணர்ந்தால்
வாழ்க்கையில் தோல்வி இல்லை....
------------------------------------------------------------------
கிராமங்களில் வயல்காட்டில் பாடுபடும் விவசாயிகளுக்கு அவர்கள் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு செல்வார்கள்.நிறைய தூக்குவாளி பாத்திரங்களை ஒரு தட்டுக்கூடையில் வைத்து தலையில் சும்மாடு சுத்தி வைத்து கொண்டு செல்வார்கள்...அந்த சோத்துக்கூடை....
உழைத்து விட்டு வயற்காட்டின் மரத்தடியில் அமர்ந்து சாப்பிடும் சுவையே அலாதியானது
--------------------------------------------
எல்லாம் அவன் செயல் என்கிற படத்தில் வக்கீலாக நடித்து இருப்பார் ஆர்.கே.இந்த படம் தான் அவரது முதல் படம் என்று நம்பி இருந்தேன்.எதேச்சையாக ஒரு நாள் டிவியில் ஒரு பழைய படம் பார்க்க நேர்ந்தது.அதில் ஆர்.கே நடித்து இருக்கிறார் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்டாக...
-----------------------------------------------------------
நேசங்களுடன்
ஜீவானந்தம்




