Tuesday, December 4, 2012

கரம் - 4

கரம் -பல்சுவை
-----------------------------------------------------
விபத்து
இப்போலாம் பயங்கரமா சாலை விபத்து ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. பெருகி வரும் வாகன்ங்களை போலவே சாலை விபத்துகளும் அதிகமாகின்றன.பராமரிப்பின்றி இருக்கும் சாலைகள், ஓட்டுனரின் ஓய்வின்மை, மது போதையிலும் அதிவேகத்திலும் செல்வது, போக்குவரத்து விதிகளை பின்பற்றாதது என பல்வேறு காரணங்களால் விபத்து ஏற்படுகிறது.
கோவை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் கடந்த பத்து மாதங்களில் இதுவரைக்கும் 3500 பேர் பலியாகி இருக்கின்றனர்.
கோவை – 659; ஈரோடு – 518; நீலகிரி – 45; திருப்பூர் – 621; சேலம் – 532;நாமக்கல் – 463; தர்மபுரி – 285; கிருஷ்ணகிரி – 410
கிட்டதட்ட 14426 பேர் காயமடைந்து இருக்கின்றனர்.(நன்றி - ஒரு நாளேடு)

நான் சேலத்தில் இருந்து வந்து கொண்டிருந்தபோது ஒரு கொடுர விபத்தினை பார்த்தேன்.இருவரின் மூளை ரோடெல்லாம் சிதறி வண்டியில் அவர்களின் உடல்களை மீட்க முடியாத படி வண்டியோடு நசுங்கி கிடந்தனர்.மது போதையில் அதி வேகமாக வந்து பிரேக் பிடித்தமையால் வண்டி கவிழ்ந்து மரணம்... 
------------------------------------------------------------------
கோவையில் ஒரு தியேட்டரில் புரட்சித்தலைவரின் படம் வெளியானது.அதற்கு வைக்கப்பட்டுள்ள பேனர் மற்றும் கொடிகள் ... இன்னமும் புரட்சித்தலைவருக்கு  மவுசு குறையவில்லை என்பது தெரிகிறது...
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்
என்பது கேள்வியில்லை அவன்
எப்படி வாழ்ந்தான் 
என்பதை உணர்ந்தால் 
வாழ்க்கையில் தோல்வி இல்லை.... 
------------------------------------------------------------------
கிராமங்களில் வயல்காட்டில் பாடுபடும் விவசாயிகளுக்கு அவர்கள் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு செல்வார்கள்.நிறைய தூக்குவாளி பாத்திரங்களை ஒரு தட்டுக்கூடையில் வைத்து தலையில் சும்மாடு சுத்தி வைத்து கொண்டு செல்வார்கள்...அந்த சோத்துக்கூடை....
உழைத்து விட்டு வயற்காட்டின் மரத்தடியில் அமர்ந்து சாப்பிடும் சுவையே அலாதியானது
--------------------------------------------
எல்லாம் அவன் செயல் என்கிற படத்தில் வக்கீலாக நடித்து இருப்பார் ஆர்.கே.இந்த படம் தான் அவரது முதல் படம் என்று நம்பி இருந்தேன்.எதேச்சையாக ஒரு நாள் டிவியில் ஒரு பழைய படம் பார்க்க நேர்ந்தது.அதில் ஆர்.கே நடித்து இருக்கிறார் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்டாக...

-----------------------------------------------------------

நேசங்களுடன்
ஜீவானந்தம்

23 comments:

  1. விபத்து புள்ளிவிபரம் பதைக்க வைக்கிறது...

    மெளனம் சம்மதம் என்ற படத்தில் நடிகர் சரத்குமார் ஒரு சிறிய கேரக்டரில் வருவார்... அந்தப்படம் வந்து சுமார் 25 வருடங்களாவது இருக்கும்...

    நல்ல பதிவு.. நன்றி...

    ReplyDelete
  2. மாப்ளே சூதானமாக பயணம் போகணும்.....நினைச்சாவே பீதியா இருக்கு.

    //பராமரிப்பின்றி இருக்கும் சாலைகள், ஓட்டுனரின் ஓய்வின்மை, மது போதையிலும் அதிவேகத்திலும் செல்வது, போக்குவரத்து விதிகளை பின்பற்றாதது//

    இவைகளை சரி பண்ணினாலே வெகுவான சாலை விபத்துக்களை தவிர்க்கலாம்

    ReplyDelete
  3. சரக்கு அடிக்குறவங்கலாம் கொஞ்சம் யோசிங்கப்பா! உங்களொட போதைக்காக உங்களை நம்பியிருக்கும் உங்க குடுமபத்தரையும் சாலையில் வரும் அப்பாவி மற்றும் அவர் குடும்பத்தாரையும் அந்த விபத்து பாதிக்கும்ன்னு புரிஞ்சுக்கோங்க.ப்ளீஸ்

    ReplyDelete
  4. ராஜி////
    நாமல்லாம் கொஞ்ச விவரமங்க.டிரைவர் வச்சி இருக்கேனுங்க..அதுவுமில்லாமல் வண்டி ஓட்ட மாட்டேனுங்க..குடிச்சிருந்தா...

    ReplyDelete
  5. நன்றி மாம்ஸ் முத்தரசு.

    ReplyDelete
  6. நன்றி ஸ்கூல் பையன்.

    ReplyDelete
  7. //மது போதையில் அதி வேகமாக வந்து பிரேக் பிடித்தமையால் வண்டி கவிழ்ந்து மரணம்... // இதையே சொன்னா அதை மறுக்க ஆயிரத்தெட்டு கருத்தோட வந்து நிப்பீங்க என்னைக்கு குடிகாரர்கள் குடிப்பதை நிருதுகிரீர்களோ அன்னைக்கு உலகம் உருப்படும்

    ReplyDelete
  8. ஆர்,கே ங்கிறது யாருங்கோ?

    ReplyDelete
  9. மச்சி, டீவியில் ஓடுகிற படத்தையே க்ளீக் செய்தாச்சா? படு சூப்பர் நீங்க..
    தூக்குவாளி.., உள்ளே என்ன இருக்குமென்று அறிய ஆர்வமா இருக்கு..! பசிக்கிறது

    ReplyDelete
  10. ஆர்.கே பற்றிய தகவல் புதுசு.. சேலம் விபத்தில் சிக்கியவர்கள் குடித்திருகவில்லை என்று ஞாபகம்.

    ReplyDelete
  11. இன்னமும் இருக்கிறதா அந்த சோத்துக் கூடை. விவசாயத்துக்கு ஒத்தயாளே கிடைக்காதப்ப தூக்குசட்டிங்க நிறைய இருக்கே அதான் கேட்டேன்.

    அப்புறம் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது இது குடிக்கிறவர்களுக்கு
    உங்களுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்கிறீங்க. நாங்க பாட்டுக்கு செவனேன்னுதானே இருந்தோம்

    ஆனால் என்னைப் பொறுத்த வரை
    நடக்கும் விபத்துகள் அதிகபட்சம் தூக்கத்தினாலும் தூக்கமின்மையால் வரும் கவனக்குறைவாலும்தான் என எண்ணுகிறேன்

    ReplyDelete
  12. இப்போதெல்லாம் பயணம் செய்வதற்கே பயமாக உள்ளது அந்தளவிற்கு விபத்துக்கள்! சோத்துக்கூடை சூப்பர்! ஆமாம் யாருங்க இந்த ஆர் கே!

    ReplyDelete
  13. ezil //// உண்மை தான்.குடிச்சிட்டு ஓட்டறவங்க அநேகம் பேரு தத்தம் சொந்த வாகனத்தை வச்சி இருக்கறவங்க தான்....குத்துமதிப்பா சாகடிக்கிறது பஸ் லாரி ஓட்டுனர்கள் தான்...

    ReplyDelete
  14. ஆவி////
    மச்சி..கிடாவெட்டுக்கு வந்துட்டு சரக்கு சாப்பிட்டு விட்டு சாப்பிடலாமுன்னு வந்தவங்க தான் ஒரேயடியா போய்ட்டாங்க.
    நீதான் இந்த மாதிரி கோர காட்சிகளை காண முடியாதுன்னு கார்லயே உட்கார்ந்து இருந்தியே...

    ReplyDelete
  15. சுரேஷ் /// எல்லாம் அவன் செயல் படத்துல வக்கீல் கோட்டு போட்டு எல்லாரையும் போட்டு தள்ளுவாரே....இப்போ கூட புலிவேசம் போட்டாரே...

    ReplyDelete
  16. சரளா ....///
    நீங்க சொன்னா கரக்டா இருக்கும்...ஹி ஹிஹி

    ReplyDelete
  17. ரமேஷ் வெங்கி /////

    புலிவேசம் கட்டினவரு

    ReplyDelete
  18. விஜி விஜயலக்ஷ்மி///
    மச்சி...சோத்துகூடை ....உள்ளே பழைய சாதம் வெங்காயம், பச்சை மிளகாய், ஊறுகாய், கருவாடு இருக்கும்...
    ஒருவேளை சுடு சோறும் சாம்பார் கூட இருக்கலாம்....
    எங்க தோப்புல தான் இந்த போட்டோ எடுத்தேன்

    ReplyDelete
  19. பார்த்த விபத்தை ஏம்பா டீ டையிலா சொல்லி மிரட்டுறீங்க !!

    ReplyDelete
  20. அந்த விபத்தை நேரில் பார்த்தீர்களா...? உங்களுக்கு மன தைரியம் அதிகம் தான் கோவை நேரம்.

    ReplyDelete
  21. அந்த விபத்து படத்தை பார்க்கும்போது மனது பிசைகிறது, சோற்று கூடையை பார்க்கும்போது வயிறு பிசைகிறது !! நல்ல பதிவு....தொடர வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  22. தூக்குவாளி நமது கிராமங்களின் - வாசனையை திரும்ப மனக்க வைத்தது - நன்றி

    ReplyDelete
  23. தூக்குவாளி நமது கிராமங்களின் - வாசனையை திரும்ப மனக்க வைத்தது - நன்றி

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....