Showing posts with label ID. Show all posts
Showing posts with label ID. Show all posts

Wednesday, August 1, 2012

கோவை மெஸ் - ID - வெஜிடேரியன் ஹோட்டல் - பரூக் பீல்ட்ஸ்

 ID - வெஜிடேரியன் ஹோட்டல் - பரூக் பீல்ட்ஸ்
நம்ம  பரூக் பீல்ட்ஸ்ல புதுசா ஒரு ஹோட்டல் திறந்து இருக்காங்க.ஹோட்டல் பேரே வித்தியாசமா இருக்கு. ID ...(இட்லில (IDLY) LY கட் பண்ணிட்டாங்க போல..மெனு கார்டுல பார்த்தா இட்லி படம் தான் போட்டு இருக்கு..)நாலாவது மாடியில் தி சினிமா அருகில் இருக்கு.ரொம்ப சிம்பிளா அதே சமயம் ரொம்ப ரிச் லுக்கில் இண்டீரியர் இருக்கு.
நாங்க போன நேரம் சாயந்திரம் ஆதலால் எதுவும் சாப்பிட தோணல.இருந்தாலும் காபி குடிக்கலாம்னு  நண்பர் சொன்னதினால் காபி ஆர்டர் பண்ணிட்டு  சினிமாவிற்கு போற வர்ற அம்மணிகளை பார்த்துட்டே இருந்ததை பார்த்து காண்டாகி சீக்கிரமே காபி கொண்டு வச்சிட்டாங்க...பய புள்ளைக்கு எவ்ளோ காண்டு பாரு நம்ம மேல...அப்படின்னு மனசுக்குள் நினைத்து கொண்டே காபி வித் அனு சாரி...அம்மணிகளை  பருகினோம்.அப்புறம் அதை குடிச்சி முடிக்கிற வரையில்.....(ரொம்ப காபி..அளவு அதிகமா இருக்கு..) வித விதமா பார்த்துட்டு .....எப்படியோ டைம் பாஸ் பண்ணிட்டு கீழே வந்தோம்...



காபி விலை 40 ரூபாய்..அதுமட்டுமல்ல அங்க எல்லாமே விலை அதிகமா இருக்கு.நமக்கு இது சரிப்பட்டு வராது.எப்பவாவது போனா சாப்பிட்டு வரலாம்.அப்புறம் சனி ஞாயிறுகளில் கூட்டம் இங்க அலை மோதுமாம்.உட்கார இடம் கிடைப்பது அரிதாம்.
நம்ம ஊரு இப்போ ரொம்ப முன்னேறி விட்டது. செலவு வைக்கிறதுக்குன்னே இந்த மாதிரி கடைகள் வந்து விட்டது.பாருங்க.எப்படி இருந்த கோவை இப்படி ஆயிடுச்சே..பாவம் கணவன் மார்கள்...
(நல்ல வேளை ...கூட என்  நண்பர் இருந்ததால்  நம்ம பர்ஸ் காலி ஆகல)

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...