Wednesday, August 1, 2012

கோவை மெஸ் - ID - வெஜிடேரியன் ஹோட்டல் - பரூக் பீல்ட்ஸ்

 ID - வெஜிடேரியன் ஹோட்டல் - பரூக் பீல்ட்ஸ்
நம்ம  பரூக் பீல்ட்ஸ்ல புதுசா ஒரு ஹோட்டல் திறந்து இருக்காங்க.ஹோட்டல் பேரே வித்தியாசமா இருக்கு. ID ...(இட்லில (IDLY) LY கட் பண்ணிட்டாங்க போல..மெனு கார்டுல பார்த்தா இட்லி படம் தான் போட்டு இருக்கு..)நாலாவது மாடியில் தி சினிமா அருகில் இருக்கு.ரொம்ப சிம்பிளா அதே சமயம் ரொம்ப ரிச் லுக்கில் இண்டீரியர் இருக்கு.
நாங்க போன நேரம் சாயந்திரம் ஆதலால் எதுவும் சாப்பிட தோணல.இருந்தாலும் காபி குடிக்கலாம்னு  நண்பர் சொன்னதினால் காபி ஆர்டர் பண்ணிட்டு  சினிமாவிற்கு போற வர்ற அம்மணிகளை பார்த்துட்டே இருந்ததை பார்த்து காண்டாகி சீக்கிரமே காபி கொண்டு வச்சிட்டாங்க...பய புள்ளைக்கு எவ்ளோ காண்டு பாரு நம்ம மேல...அப்படின்னு மனசுக்குள் நினைத்து கொண்டே காபி வித் அனு சாரி...அம்மணிகளை  பருகினோம்.அப்புறம் அதை குடிச்சி முடிக்கிற வரையில்.....(ரொம்ப காபி..அளவு அதிகமா இருக்கு..) வித விதமா பார்த்துட்டு .....எப்படியோ டைம் பாஸ் பண்ணிட்டு கீழே வந்தோம்...காபி விலை 40 ரூபாய்..அதுமட்டுமல்ல அங்க எல்லாமே விலை அதிகமா இருக்கு.நமக்கு இது சரிப்பட்டு வராது.எப்பவாவது போனா சாப்பிட்டு வரலாம்.அப்புறம் சனி ஞாயிறுகளில் கூட்டம் இங்க அலை மோதுமாம்.உட்கார இடம் கிடைப்பது அரிதாம்.
நம்ம ஊரு இப்போ ரொம்ப முன்னேறி விட்டது. செலவு வைக்கிறதுக்குன்னே இந்த மாதிரி கடைகள் வந்து விட்டது.பாருங்க.எப்படி இருந்த கோவை இப்படி ஆயிடுச்சே..பாவம் கணவன் மார்கள்...
(நல்ல வேளை ...கூட என்  நண்பர் இருந்ததால்  நம்ம பர்ஸ் காலி ஆகல)

நேசங்களுடன்
ஜீவானந்தம்

19 comments:

 1. இது அநியாயம் ஒத்தையில போய் சாப்டறது...வயிறு வலிக்கட்டும்.

  ReplyDelete
 2. கடையில் ஈ ஆடுதே !

  ReplyDelete
 3. நல்ல ஹோட்டல்களை பற்றி மட்டும் தான் எழுதணும் என்று ஒரு சீனியர் பதிவர் எனக்கு அட்வைஸ் செய்தார் நண்பரே. சரியா தவறா என தெரியலை. ஜஸ்ட் உங்களுக்கும் சொல்கிறேன்

  ReplyDelete
 4. இப்படியும் ஒரு கடை இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம் . யார் ப்ர்சையாவது காலி செய்யணும்னா கூட்டிட்டு
  போயிடலாம்.

  ReplyDelete
 5. ப்ரூக்பீல்டை பொறுத்த வரை பார்த்து விட்டு வரலாம்...

  ReplyDelete
 6. மோகன் குமார் ///
  ID...இந்த ஹோட்டல் தற்போதுதான் துவங்கி களை கட்ட ஆரம்பித்து இருக்கிறது.நான் போன நேரம் சாயந்திரம் ஐந்து மணி இருக்கும்.அதனால் கூட்டம் இல்லாமல் இருந்து இருக்கலாம்.ஆனாலும் நேரம் போக போக கூட்டம் குவிய துவங்கியது உண்மைதான்.சனி ஞாயிறு களில் உட்கார இடம் கிடைக்காதாம்...

  அப்புறம்...எந்த ஹோட்டல் நல்ல ஹோட்டல் அப்படின்னு சாப்பிட்டு பார்த்ததுக்கு அப்புறம் தானே முடிவு பண்ண முடியும்...அதனால் முடிந்த வரைக்கும் எல்லா ஹோட்டல்களிலும் சாப்பிட்டு பார்க்கணும்..நல்லா இல்லைனா சொல்லி விடுவேன்..

  இனிய நண்பர் தின வாழ்த்துகள்

  ReplyDelete
 7. சங்கவி//
  பார்த்துட்டு ..எதை அப்படின்னு தெளிவா சொல்லல...

  ReplyDelete
 8. உலக சினிமா ரசிகன் /// போலாம் நாம் ஒரு நாளைக்கு...

  ReplyDelete
 9. எழில்/// மேடம்..உங்க கடை திறப்பு விழாவிற்கு நீங்க தான் கூட்டிட்டு போகணும்...

  ReplyDelete
 10. நான் கோவை வர்றப்ப அங்க போலாம் மச்சி.....

  ReplyDelete
 11. எப்படியோ ஒருபதிவ தேத்திட்டியே மச்சி :-)

  ReplyDelete
 12. ஓட்டல் அறிமுகமும்படங்களும் அருமை!
  இன்று என் தளத்தில் வெற்றி உன் பக்கம்! தன்னம்பிக்கை கவிதை! http:// thalirssb.blogspot.in

  ReplyDelete
 13. நமக்கு வெஜிடேரியன் ஆகாது என்றாலும் , நீங்கள் எழுதிய விதம் சாப்பிட தூண்டுகிறது. ஆனால் கடைசியில் "டப்பு" காலியாகும் என்று வார்னிங் வேறு செய்கிறீர்களே!

  ReplyDelete
 14. நானும் போனேன்.. விலைய பார்த்ததும் போன் வந்த மாதிரி ஒரு பில்டப் கொடுத்து எஸ்கேப் ஆகிட்டேன்.

  ReplyDelete
 15. கடையோட படத்தை பார்க்கும்போதே இதெல்லாம் உங்களை போல பெரிய ஆளுங்கலாம் போற கடை போல இருக்கு. நமக்குலாம் இது கட்டுபடியாகாது சாமி.

  ReplyDelete
 16. கோவை வரும் போது சென்று பார்ப்போம்...

  ReplyDelete
 17. வடை 25 ரூபாயா....? அடப் போங்கப்பா.......!

  ReplyDelete
 18. தல கும்கி பாட்டு கேட்டீங்களா, ? did u like it ?

  ReplyDelete
 19. இப்போ கேட்டுட்டு இருக்கேன்...இரண்டு பாடல்கள் ரொம்ப பிடிச்சு இருக்கு.,.,

  அய்யய்யோ...ஆனந்தமே..

  சொல்லிட்டாளே அவ காதல..

  செம...

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....