Showing posts with label JP சர்பத். Show all posts
Showing posts with label JP சர்பத். Show all posts

Tuesday, February 20, 2018

கோவை மெஸ் – JP சர்பத், காரைக்கால்.JP Sharbat, Karaikkal, Pondicherry

          திருநள்ளாறில் குடி கொண்டுள்ள சனிபகவானின் அருள் பெற்றுவிட்டு, குடிமகன்களின் தேசமான பாண்டிச்சேரியின் மற்றுமொரு சிறப்பான நகரமான காரைக்காலில் கால் பதித்தோம்.நகரம் வெறிச்சோடி வறண்டு கிடக்கிற சூழலை தருகிறது.வெயிலில் வாடமுடியாதோர் நிழல் தேடி அடைக்கலம் புகுந்திருந்தனர்.மக்கள் நடமாட்டம் என்பது குறைவாக இருக்கிறது.வெயில் கொடுமைக்கு இதமாய் தாகம் தீர்க்க சர்பத் கடைக்கு சென்றிருந்தோம்.
             சர்பத், பால் சர்பத், லஸ்ஸி, மோர், பாதாம் மில்க், ஜூஸ் என நிறைய வகைகள் இருக்கின்றன.நன்னாரி சர்பத்தினை ஜிலுஜிலுவென ஐஸ்கட்டிகளுடன் பாதாம்பிசின் சேர்த்து ஒரு டம்ளரில் கொடுக்க, சுவைத்ததும் உள்ளுக்குள் குளிர்ச்சி ஓடுகிறது.அடிக்கிற வெயிலுக்கு இந்த சர்பத் செம குளிர்ச்சியாக இருக்கிறது. சின்ன சின்னதாய் அடித்து நொறுக்கப்பட்ட ஐஸ்கட்டிகள் ஒவ்வொரு மிடக்கின் போது வாயில் கடிபடுவது ஜில்லென்ற அனுபவத்தினை தருகிறது.அடுத்து தயாரித்து கொடுத்த பால் சர்பத் இதுவும் அப்படியே..நல்ல சுவையாக இருக்கிறது.காரைக்காலில் உள்ள சிறந்த சர்பத் கடை இதுவாக இருக்கிறது.





           குடிமகன்களின் தேசத்தில் அடிக்கிற வெயிலுக்கு பாரினை நோக்கி ஓடுவதை விட்டுவிட்டு, இதென்ன சர்பத் கடைக்கு என முணுமுணுப்பது தெரிகிறது.அதையும் விட்டு வைக்க வில்லை.அங்கேயும் ஒரு ரவுண்ட் அடித்து விட்டுதான் கோவைக்கே பஸ் ஏறினோம் என்பது உங்களுக்கு தெரியாது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...