Showing posts with label MUSSELS. Show all posts
Showing posts with label MUSSELS. Show all posts

Monday, February 4, 2019

கரம் - 34 - கேரள ஸ்பெஷல் - கண்ணூர் - முட்டைமாலை - MUTTAMALA, கல்லுமக்காயா - MUSSELS

கேரளத்தின் ஸ்பெஷல்:

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் பையனூர் சென்றிருந்த போது வித்தியாசமாக இருந்த இந்த உணவுப்பண்டத்தினை ருசித்ததில் மிக நன்றாகவே இருந்தது.பெயரும் அதே போல...

முட்டமால.. முட்டை மாலை.
முட்டையின் மஞ்சள் கருவினை நூடுல்ஸ் மாதிரி செய்து, வெள்ளைக் கருவினை பனீர் மாதிரி செய்து தரப்படும் ஒரு இனிப்பு பண்டம். நன்கு சுவையாகவே இருக்கிறது.முட்டையின் மணம் கொஞ்சம் கூட இல்லை.ஆனால் இனிப்போடு நன்றாக இருக்கிறது.இது ஒரு ஹோம் மேட் தயாரிப்பாகும்.ஸ்வீட் ஸ்டால்களில் கிடைக்கிறது.




யூ டுயூப் களில் இதன் செய்முறை கிடைக்கிறது.

கல்லுமக்காய் - (MUSSIL)
தலச்சேரியின் பிரபலமான கடல் உணவு கல்லுமக்காய்.பாறை இடுக்குகளில் கிடைக்கும் இந்த கல்லுமக்காய்களை கிளிஞ்சல்கள், சிப்பிகள் என்றும் சொல்லலாம்.கால்சியம் சத்து நிறைந்த இந்த கல்லுமக்காய் சாப்பிடுவதற்கு மிக சுவையாக இருக்கும்.கிலோ ரூ 100 டூ 150 வரை விற்கின்றனர்.இந்த கல்லுமக்காயை எண்ணையில் பொரித்தும் அல்லது நன்கு வறுவல் செய்தும் சாப்பிடலாம்...எந்த முறையில் செய்தாலும் சுவை அள்ளுகிறது.






செய்முறை :
கல்லுமக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைக்க வேண்டும்.பாத்திரத்தில் நீர் ஊற்றக்கூடாது.வேக வைக்கும் போது கல்லுமக்காயில் உள்ள நீர் வெளியேறும்.ஒரு ஐந்து நிமிடம் அடுப்பில் இருந்தால் போதும்.பின் எடுத்து அதை இரண்டாக பிளந்து உள்ளே இருக்கும் சதைப்பகுதியை எடுத்து சுத்தம் செய்து, மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் போடு பிரட்டி, பின் பொடியாக நறுக்கின வெங்காயம், தக்காளியோடு வதக்கி, காரத்திற்கு கொஞ்சம் மிளகாய் இட்டால் போதும்.உப்பு தேவைப்படின் சேர்த்துக்கொள்ளலாம்.தேங்காய் எண்ணையில் வதக்கும் போது அதன் வாசம் இருக்கிறதே....ஆஹா...சுவையான கல்லுமக்காய் ரெடி.

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Wednesday, January 22, 2014

கோவை மெஸ் - கல்லு மக்காய் (MUSSEL), தலச்சேரி, கேரளா

கோவை மெஸ் - கல்லு மக்காய், தலச்சேரி, கேரளா...
இந்த பொங்கல் லீவுல கேரளா, கண்ணூர் மாவட்டத்துல இருக்குற தலச்சேரி ங்கிற ஊருக்கு போயிருந்தேன்.நான் போன நேரம் என்னவோ அங்கயும் விடுமுறை தினமா போயிடுச்சு.ஹோட்டல்ல நான் வெஜ் என்பதே இல்லாம போயிடுச்சி.நம்ம கடையும் இல்ல, கறிக்கடையும் இல்ல.. தள்ளுவண்டி கடை கூட லீவ் போட்டிருக்கு.

            தலச்சேரி அரபிக்கடலோரம் இருக்கிற ஒரு கடற்கரை ஊர்.....கடலோரம் இருக்கிறதால் அங்க மீன் வரத்துகள் அதிகமா இருக்கும்.அதுவும் கடலில் கற்பாறைகள் நிறைய இருப்பதால் அங்க கல்லுமக்காய் எனப்படும் சிப்பி (MUSSEL ) நிறைய காணப்படும்.இந்த சிப்பி ஒரு மருத்துவக்குணம் வாயந்த கடல் உணவு.இந்த கல்லுமக்காய் கோழிகோடு, கண்ணூர், மாவட்டங்களில் தான் அதிகமா கிடைக்கும்.இந்த உணவை பத்து வருசம் முன்னாடி கோழிக்கோடுல சாப்பிட்டு இருக்கேன்.செம டேஸ்டா இருந்தது.அப்போ இருந்து இந்த உணவுக்கு அடிமை.எப்போ கோழிக்கோடோ இல்ல கண்ணூரோ போகும் போது சாப்பிடாம வரமாட்டேன்.


அப்படித்தான் இந்த முறையும் தலச்சேரி போனா சாப்பிடலாம்னு வந்தேன்..ஆனா லீவா போயிடிச்சு.... தலச்சேரில இருக்கிற நிறைய ஹோட்டல்களில் கேட்க எங்கயும் இல்ல.ஆட்டோ காரங்கிட்ட எங்க கிடைக்கும்னு கேட்டா அவங்களும் உதட்டை பிதுக்கிட்டாங்க.ஒரே ஒருத்தர் மட்டும் நம்பிக்கையா ஒரு வார்த்தை சொன்னாரு..இன்னு லீவு...நாளை கிட்டும்னு....சரின்னு இன்றைய பொழுதை ஓட்டிட்டா நாளைக்கு சாப்பிடலாமே அப்படின்னு லாட்ஜ் எடுத்து தங்கிட்டேன்...
                 அடுத்த நாள் காலை சீக்கிரமே விடிஞ்சது.வாக்கிங் போற மாதிரி காலையிலேயே மீன் விக்கிற இடங்களுக்கு சென்ற போது விற்பனைக்கு காத்திட்டிருந்த கல்லு மக்காய் பார்த்தவுடன் ரொம்ப சந்தோசமா இருந்தது.அவர்கிட்டயே எங்க கிடைக்கும் இந்த பொரிச்ச கல்லுமக்காய்னு கேட்க, இப்போ கிடைக்காது சாயந்திரம் தான் கிடைக்கும், அதுவும் தள்ளுக்கடையில தான் கிடைக்கும்னு சொல்ல, அடடா...இன்னும் சாயந்திரம் வரைக்கும் காத்திருக்கணுமா அப்படின்னு.சரி வெயிட் பண்ணுவோமே அப்படின்னு திரும்பி நடக்கையில்..... பார்ல கிடைக்கும் இப்ப அப்படின்னு ஒரு வழிப்போக்கன் சொல்லவே உடனடியாக பாரில் ஆஜரானோம்....
              பார் திறந்த பத்தாவது நிமிசத்தில நாங்க உள்ளே நுழைந்தோம்..முதல் கஸ்டமரை புன்முகத்தோடு வரவேற்ற சேட்டன்கிட்ட, பொரிச்ச கல்லு மக்காய் இவிட கிட்டோ அப்படின்னு சோதிக்க, கிட்டும் குறைச்ச லேட்டாகும் என்று பறைஞ்ச சேட்டனிடம் ஓகே.வெயிட் பண்றோம் அப்படின்னு சொல்லிட்டு நம்ம பேவரைட்டான பகார்டியை ஆர்டர் பண்ணிட்டு காத்திருக்கிறோம் கல்லுமக்காய்க்கு.... 
இரண்டாவது ரவுண்டில் கல்லுமக்காய் பொரிச்சது இல்லாமல் மசால் ஃப்ரையாக வந்தது.சரி ஓகே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் என்று ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டதில் ஆஹா ....என்னா டேஸ்ட்....வாயில் வைத்ததுமே மெதுவாய் கரைவதும், பல்லிலே கடிபடுவதுமாய் செம டேஸ்ட்..மிக நன்றாக இருந்தது.ஒவ்வொன்றாய் எடுத்து ரசித்து ருசித்து சாப்பிடுகையில் இன்னும் பசி அதிகமாகிக்கொண்டே இருந்தது.இன்னொரு பிளேட் ஆர்டர் செய்ததை ஆச்சரியமாக பார்த்த சேட்டனுக்கு எங்கே தெரிய போகிறது நமது ருசியின் வேட்கை.....
            பகார்டியும், கல்லுமக்காயும் போட்டி போட்டுக்கொண்டு இறங்கின...அனைத்தையும் காலி செய்துவிட்டு மெதுவாய் இடம் பெயர ஆரம்பித்தோம்.விலை ஒரு பிளேட் நூறு ரூபாய் தான்.விலைக்கேற்றவாறு அதிகமான பீஸ்கள் இருந்தது.மனதும் வயிறும் நிறைந்தது.
இந்த மசாலா பிரையை விட பொரிச்ச கல்லுமக்காய் மிக டேஸ்டாக இருக்கும்.கோழிக்கோட்டில் சாகர் என்கிற ஹோட்டலில் இது ரொம்ப பேமஸ்.தள்ளுவண்டிக்கடையில் கிடைக்கிற கல்லுமக்காயும் மிக டேஸ்டாக இருக்கும்.
எப்பவாது கோழிக்கோடு கண்ணூர், தலச்சேரி பக்கம் போனீங்கன்னா, சாப்பிடாம வந்திராதீங்க....


நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...