Wednesday, January 22, 2014

கோவை மெஸ் - கல்லு மக்காய் (MUSSEL), தலச்சேரி, கேரளா

கோவை மெஸ் - கல்லு மக்காய், தலச்சேரி, கேரளா...
இந்த பொங்கல் லீவுல கேரளா, கண்ணூர் மாவட்டத்துல இருக்குற தலச்சேரி ங்கிற ஊருக்கு போயிருந்தேன்.நான் போன நேரம் என்னவோ அங்கயும் விடுமுறை தினமா போயிடுச்சு.ஹோட்டல்ல நான் வெஜ் என்பதே இல்லாம போயிடுச்சி.நம்ம கடையும் இல்ல, கறிக்கடையும் இல்ல.. தள்ளுவண்டி கடை கூட லீவ் போட்டிருக்கு.

            தலச்சேரி அரபிக்கடலோரம் இருக்கிற ஒரு கடற்கரை ஊர்.....கடலோரம் இருக்கிறதால் அங்க மீன் வரத்துகள் அதிகமா இருக்கும்.அதுவும் கடலில் கற்பாறைகள் நிறைய இருப்பதால் அங்க கல்லுமக்காய் எனப்படும் சிப்பி (MUSSEL ) நிறைய காணப்படும்.இந்த சிப்பி ஒரு மருத்துவக்குணம் வாயந்த கடல் உணவு.இந்த கல்லுமக்காய் கோழிகோடு, கண்ணூர், மாவட்டங்களில் தான் அதிகமா கிடைக்கும்.இந்த உணவை பத்து வருசம் முன்னாடி கோழிக்கோடுல சாப்பிட்டு இருக்கேன்.செம டேஸ்டா இருந்தது.அப்போ இருந்து இந்த உணவுக்கு அடிமை.எப்போ கோழிக்கோடோ இல்ல கண்ணூரோ போகும் போது சாப்பிடாம வரமாட்டேன்.


அப்படித்தான் இந்த முறையும் தலச்சேரி போனா சாப்பிடலாம்னு வந்தேன்..ஆனா லீவா போயிடிச்சு.... தலச்சேரில இருக்கிற நிறைய ஹோட்டல்களில் கேட்க எங்கயும் இல்ல.ஆட்டோ காரங்கிட்ட எங்க கிடைக்கும்னு கேட்டா அவங்களும் உதட்டை பிதுக்கிட்டாங்க.ஒரே ஒருத்தர் மட்டும் நம்பிக்கையா ஒரு வார்த்தை சொன்னாரு..இன்னு லீவு...நாளை கிட்டும்னு....சரின்னு இன்றைய பொழுதை ஓட்டிட்டா நாளைக்கு சாப்பிடலாமே அப்படின்னு லாட்ஜ் எடுத்து தங்கிட்டேன்...
                 அடுத்த நாள் காலை சீக்கிரமே விடிஞ்சது.வாக்கிங் போற மாதிரி காலையிலேயே மீன் விக்கிற இடங்களுக்கு சென்ற போது விற்பனைக்கு காத்திட்டிருந்த கல்லு மக்காய் பார்த்தவுடன் ரொம்ப சந்தோசமா இருந்தது.அவர்கிட்டயே எங்க கிடைக்கும் இந்த பொரிச்ச கல்லுமக்காய்னு கேட்க, இப்போ கிடைக்காது சாயந்திரம் தான் கிடைக்கும், அதுவும் தள்ளுக்கடையில தான் கிடைக்கும்னு சொல்ல, அடடா...இன்னும் சாயந்திரம் வரைக்கும் காத்திருக்கணுமா அப்படின்னு.சரி வெயிட் பண்ணுவோமே அப்படின்னு திரும்பி நடக்கையில்..... பார்ல கிடைக்கும் இப்ப அப்படின்னு ஒரு வழிப்போக்கன் சொல்லவே உடனடியாக பாரில் ஆஜரானோம்....
              பார் திறந்த பத்தாவது நிமிசத்தில நாங்க உள்ளே நுழைந்தோம்..முதல் கஸ்டமரை புன்முகத்தோடு வரவேற்ற சேட்டன்கிட்ட, பொரிச்ச கல்லு மக்காய் இவிட கிட்டோ அப்படின்னு சோதிக்க, கிட்டும் குறைச்ச லேட்டாகும் என்று பறைஞ்ச சேட்டனிடம் ஓகே.வெயிட் பண்றோம் அப்படின்னு சொல்லிட்டு நம்ம பேவரைட்டான பகார்டியை ஆர்டர் பண்ணிட்டு காத்திருக்கிறோம் கல்லுமக்காய்க்கு.... 
இரண்டாவது ரவுண்டில் கல்லுமக்காய் பொரிச்சது இல்லாமல் மசால் ஃப்ரையாக வந்தது.சரி ஓகே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் என்று ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டதில் ஆஹா ....என்னா டேஸ்ட்....வாயில் வைத்ததுமே மெதுவாய் கரைவதும், பல்லிலே கடிபடுவதுமாய் செம டேஸ்ட்..மிக நன்றாக இருந்தது.ஒவ்வொன்றாய் எடுத்து ரசித்து ருசித்து சாப்பிடுகையில் இன்னும் பசி அதிகமாகிக்கொண்டே இருந்தது.இன்னொரு பிளேட் ஆர்டர் செய்ததை ஆச்சரியமாக பார்த்த சேட்டனுக்கு எங்கே தெரிய போகிறது நமது ருசியின் வேட்கை.....
            பகார்டியும், கல்லுமக்காயும் போட்டி போட்டுக்கொண்டு இறங்கின...அனைத்தையும் காலி செய்துவிட்டு மெதுவாய் இடம் பெயர ஆரம்பித்தோம்.விலை ஒரு பிளேட் நூறு ரூபாய் தான்.விலைக்கேற்றவாறு அதிகமான பீஸ்கள் இருந்தது.மனதும் வயிறும் நிறைந்தது.
இந்த மசாலா பிரையை விட பொரிச்ச கல்லுமக்காய் மிக டேஸ்டாக இருக்கும்.கோழிக்கோட்டில் சாகர் என்கிற ஹோட்டலில் இது ரொம்ப பேமஸ்.தள்ளுவண்டிக்கடையில் கிடைக்கிற கல்லுமக்காயும் மிக டேஸ்டாக இருக்கும்.
எப்பவாது கோழிக்கோடு கண்ணூர், தலச்சேரி பக்கம் போனீங்கன்னா, சாப்பிடாம வந்திராதீங்க....


நேசங்களுடன்
ஜீவானந்தம்


26 comments:

  1. வணக்கம்
    தாங்கள் சுவைத்த உணவு பற்றி சிறப்பாக எடுத்துச்சொல்லியுள்ளிர்கள்... சொல்லுவதைப்பார்தால் நாங்களும் வந்து சாப்பிட வேண்டும் என்ற ஆசைதான்.... உணவகத்திற்கு நல்ல விளம்பரமாகவும் உள்ளது.... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ரூபன்....

      Delete
  2. வணக்கம்
    த.ம 1வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. ம்ம்ம்ம்...... சரி சரி அடுத்த முறை அங்கே போனா கண்டிப்பாக மூன்று வேளையும் இதைதான் சாப்பிடபோறேன் !!

    ReplyDelete
    Replies
    1. வரவிற்கு நன்றி சுரேஷ்....கண்டிப்பா உங்க பிளாக்ல பார்க்கணும்,,,

      Delete
  4. பகார்டியா இல்லாம ஒரு எஞ்சாய் மெண்டா!?

    ReplyDelete
    Replies
    1. அதானே...பார்ல பகார்டி இல்லாம ஒரு எஞ்சாய்மெண்டா...?

      Delete
  5. லாட்ஜ் எடுத்து தங்கினது சரி தான்...

    ReplyDelete
    Replies
    1. என்ன பண்றது ....சாப்பிட்டே ஆகணும்.....

      Delete
  6. Replies
    1. சாப்பிட்டா இன்னும் சுவையா இருக்கும்,,,,

      Delete
  7. "படித்ததே செம டேஸ்ட்"

    டேஸ்டாக இருந்திச்சிள்ள அதுக்கு பணத்தை அண்ணனோட அக்கௌன்ட்க்கு அனுப்பி வையுங்க விஜி அக்கா

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப தேங்க்ஸ்னா......அக்கவுண்ட் நம்பரை அவங்களுக்கு மெயில் பண்ணிடறேன்...

      Delete
  8. "பகார்டி"

    அப்படி என்றால் என்ன ?

    ReplyDelete
    Replies
    1. பகார்டி என்பது ஒரு வகையான மூலிகை திரவம்...அது சாப்பிடும் போது மனம் மகிழ்ச்சியாகும்....

      Delete
  9. கேரளாவில் தான் அரபி கடலோரம் பார்க்கலாம்.
    ஆனா இங்கே ஒரு மொக்கை எழுத்தாளர் சாரு நிவேதிதா என்கிற இன்டெர் நெட் பிச்சைகாரன் பாண்டிச்சேரியில் அரபிகடலை பார்த்ததாக எழுதியிருக்கான் அந்த முட்டாள்

    ReplyDelete
    Replies
    1. பாஸ் விடுங்க....அவரு பாண்டில இருந்திருக்காரு..அதான் அப்படி சொல்லிட்டாரு.....

      Delete
  10. நம்மூருல(யாழ்ப்பாணம்)இத 'மட்டி' அப்புடீன்னு சொல்லுவாங்க.நாங்களே கடலுக்குப் (கடற்கரைக்குப்) போய் 'பொறுக்கி' எடுத்துட்டு வந்து தண்ணியில போட்டு அவிச்சு சாப்புடுவோம்.கறி(மாமிசம்/இறைச்சி)மாதிரி செம டேஸ்டா இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி.....மட்டி அப்படின்னு இங்கயும் சொல்வாங்க...கேள்விப்பட்டிருக்கேன்...செம டேஸ்ட் தான்....

      Delete
  11. காத்திருந்து சுவைத்த அனுபவம் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தளிர் சுரேஷ்.....

      Delete
  12. பக்கத்துலயே கண்ணூர்ல அருமையா இருக்கும்... எல்லா ஹோட்டல்களிலும் மதிய சாப்பாட்டுக்கு சைட் டிஷ்ஷா வாங்கிக்கலாம்....

    ReplyDelete
  13. inga pona kandipa try pani pappen... Thanks for the post...

    ReplyDelete
  14. நாவில் எச்சில் ஊறவைக்கும் வர்ணனை..

    நல்ல பதிவு

    கல்லுமக்காய் சாப்பிட்டு சொல்கிறேன்... பகார்டி பழக்கமில்லை ...

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....