Tuesday, August 23, 2016
Thursday, July 28, 2016
கோவில் குளம் - அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயில் கிரிவலம் திருவண்ணாமலை
சமீபத்துல திருவண்ணாமலை
போயிருந்தேன்.அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு கிரிவலமும் சென்று வந்திருந்தேன்.
திருவண்ணாமலையில் கோபுரங்கள், ஆலயங்கள், கருவறைகள் அனைத்தும் புதுப்பிக்கும் பணி நடந்து
கொண்டிருக்கின்றன.அதனால் பரந்து விரிந்த அண்ணாமலையார் கோவில் எங்கும் சாரம் கட்டப்பட்டு தீவிரமாய் பணி நடந்து கொண்டிருக்கிறது.அதே சமயம் பக்தர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் ஆண்டவனின்
தரிசனமும் கிடைக்கிறது. பிரம்மாண்ட கோவில் கோபுரம் முன்பு கடை கண்ணிகள் எப்பவும் போல
நிறைந்திருக்கின்றன.
கிரிவலம்:
மொத்த கிரிவலப்பாதை
14 கிலோ மீட்டர் இருக்கும்.மலையைச்சுற்றி ஒவ்வொரு திசையிலும் எட்டு லிங்கங்கள் இருக்கின்றன.கிரிவலம்
வருபவர்கள் இந்த அஷ்டலிங்கங்களை தரிசனம் செய்து பின் அண்ணாமலையாரை வேண்டினால் பாவங்கள்
போய் புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை.
கிரிவலப்பாதையில்
அமைந்திருக்கும் அஷ்டலிங்கங்கள்:
இந்திரலிங்கம்
அக்னி லிங்கம்
எம லிங்கம்
நிருதிலிங்கம்
வருண லிங்கம்
வாயு லிங்கம்
குபேரலிங்கம்
ஈசானிய லிங்கம்
இதன் சிறப்பு என்னவெனில்
பிரம்மலோகத்தில்
பிரம்ம தேவனால் சாபம் பெற்ற அஷ்டதிக் பாலகர்கள் தம் சாபம் நிவர்த்தி பெற இந்த மலையைச்
சுற்றி எட்டுத்திக்கில் எட்டு லிங்கங்களை பிரதிஷ்டை செய்து கடும் தவம் இயற்றி வழிபாடு
செய்தார்கள்.இவர்கள் இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன்,வாயு, குபேரன், ஈசானன்
ஆவார்கள்.இந்த அஷ்டதிக் பாலகர்கள் தங்கள் சாபம் நிவர்த்தி பெற இத்தலத்தில் எட்டுத்திக்கில்
அமர்ந்து இம்மலையை நோக்கி கடும் தவம் புரிந்தனர்,இவர்களின் கடும் தவத்தால் இந்த மலை
அவர்களுக்கு எட்டு முகமாக காட்சியளித்து, அவர்களின் சாபத்தினை நிவர்த்தி செய்து, இந்த
அஷ்டதிக் பாலகர்கள் அஷ்டதிக்கில் லிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் அந்த லிங்கங்கள்
அவரவர் பெயரிலேயே வழிபடப்பட்டு வருகிறது.
இந்த அஷ்டலிங்கங்களை
நடந்து தரிசனம் செய்தால் கர்மவினை அகலும்.
கிரிவலம் வர ஏற்ற நாட்கள்:
அனைத்து மாதத்திலும் கிரிவலம் வரலாம். ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பௌர்ணமி காலங்கள் மலை வலத்திற்கு ஏற்ற காலங்களும், மாதங்களும் ஆகும். அனைத்து
விசேச தினங்களிலும் கிரிவலம் வரலாம்.
அதிலும் பௌர்ணமி தினத்தன்று மேற்கொள்ளப்படும் கிரிவலத்திற்கு அத்தனை
சிறப்பு உள்ளது என்று முற்றம் உணர்ந்த ஞானிகளும், யோகிகளும் தெரிவிக்கின்றனர்.
ஊழ்வினை நீக்கும் தலம் திருவண்ணாமலை. அண்ணாமலையாரை கிரிவலமாக வந்து
வணங்கினால் மட்டுமே ஊழ்வினை தீரும் என்பது ஐதீகம்.
ஓம் நமச்சிவாய….ஓம் நமச்சிவாய….
கிரிவலப்பாதையில் ஏழாவது லிங்கமான குபேரலிங்கத்தினை வழிபட்டவுடன் அடுத்து ஒரு கோவில் இருக்கிறது.இடுக்கு பிள்ளையார் கோவில்.ஒரு சின்ன இடுக்கு மூலம் உள்ளே நுழைந்து வெளியே வரவேண்டும்.கைகால் வலி, இடுப்பு வலி, போன்றவை தீரும் என்பது ஐதீகம்.கிரிவலம் வந்து கொண்டிருப்பவர்களுக்கு கால் வலி, இடுப்பு வலி ஆகியன வந்திருக்கும். இந்த இடுக்கு பிள்ளையாரை தரிசித்தால் நிச்சயம் நிவாரணம் பெறலாம். எனக்கு கடைசியாக நடக்க முடியவில்லை.இந்த இடுக்குபிள்ளையாரை தரிசித்தவுடன் இன்னும் ஒரு சுற்று போய் வரலாம் என்கிற நம்பிக்கையை தந்தது.
ஓம் நமச்சிவாய….ஓம் நமச்சிவாய….
இன்னும் ஒரு ஆறு மாதங்கள் கழித்து சென்றால் கோவில் புதுப்பொலிவுடன் இருக்கும்
நேசங்களுடன்
ஜீவானந்தம்
Friday, June 24, 2016
கரம் - 23
பார்த்தது :
உறியடி...செமயா உரிச்சி தொங்க விட்டுட்டாங்க...செம படம்...சாதிவெறியை அப்பட்டமாக உரிச்ச படம்.இடைவேளை சண்டைக்காட்சி செம மாஸ்.அதுவும் சண்டை போட்டுகிட்டே இருக்கும் போது தீடீர்னு சிகப்பு நிற பேக்ரவுண்டில் இடைவேளை போடுவதும், அந்த மியூசிக்கும் பட்டாசு...
படத்தினை திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
ஹேட்ஸ் ஆஃப் இயக்குநர் விஜயகுமார்.தமிழுக்கு நல்ல படத்தினை தந்தமைக்கு...
*******************************
ஞாபகச்சிதறல்
2005
பட்டுக்கோட்டையில் ஒரு வாரம் பணியின் காரணமாக தங்கியிருந்தேன்.அப்போதான் ஐயா படம் ரிலீஸ் ஆனது.முதல் நாள் காலைக்காட்சி போனேன்.சரத்குமார் படம், ஹரி இயக்குநர் என்பதால் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.தியேட்டரில் படத்தின் போஸ்டர்கள் ஒரு சில மட்டும் ஒட்டப்பட்டிருந்தன.எந்த ஒரு பெரிய பிளக்ஸ் பேனரும் நடிகருக்கோ இயக்குநருக்கோ இல்லை.ஆனால் ஒரே ஒருத்தருக்கு மட்டும் வைத்திருந்தனர்.அவர் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்.
பட்டுக்கோட்டை மைந்தனை வாழ்த்தி அவரது ரசிகர்கள் பட்டுக்கோட்டை காரர்கள் வைத்திருந்தனர்.
பட்டுக்கோட்டை பிரபாகரின் ஊஞ்சல் நாவல்கள் மூலம் அவரது எழுத்துக்கள் பரிட்சயம் ஆனது எனது பள்ளிக்காலங்களில்.அவரின் பரத் சுசிலா கதை மாந்தர்கள் பிடித்த போன ஒன்றாகும்.
ஊஞ்சல் இதழுக்கு வருட சந்தா கட்டி படித்த காலங்கள் உண்டு.
பட்டுக்கோட்டை பிரபாகரை நேரில் சந்திக்க ஆவல் இருந்தது அவரின் நாவல்களை படிக்கும் போது.பத்து பதினைந்து வருடம் கழித்து பதிவர் சந்திப்பில் அவரை நேரில் பார்த்ததோடு சரி..அவரின் கதை வசனத்தில் ஐயா படம் சூப்பராக இருந்தது.பரபரவென சாமி படத்தை கொடுத்த ஹரி இந்தப்படத்தில் அகேலா கிரேன் இல்லாமல் படம் எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன்..
ஒவ்வொரு காட்சியும் மனதை ஈரப்படுத்தியது.எத்தனை தடவை பார்த்தாலும் கண்கலங்க கூடிய வகையில் வசனங்கள், காட்சிகள் இருக்கும்.படம் எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று நினைவில் இல்லை..நாயகன் சரத்..அடிதடியில் பார்த்து பழக்கப்பட்டு போன சரத்குமார் அமைதியாய் இரு வேடங்களில் நடித்து மனதை கொள்ளை கொண்டுவிட்டார்.
அடுத்து நம்ம ஹீரோயின்.இந்த படத்தில் தான் அறிமுகம்.நயன்தாரா.பள்ளி விட்டு வரும் மாணவியாய் நடித்த நயன்தாரா திடிரென்று யூனிபார்மை உருவிவிட்டு மாடர்ன் ட்ரெஸ்ஸில் தோன்றி பாடல் காட்சியில் ஆடிப் பாடியவுடனே..எனது கண்களும் மனதும் நிறைந்து போனது..அன்றில் ஆரம்பித்த நயன்தாரா மோகம் இன்னும் வரை தீரவில்லை.கொழுக் மொழுக்கென்று இருந்த நேரத்திலும் பிடித்த நயன்ஸ் இன்று சிலிம்மாகி ஒல்லியாகிப் போனாலும் பிடிக்கிறது..நான் வயதாகி போனாலும் நயன் இன்னும் பிடிக்கும் என்றே தோணுகிறது..
ஒரு வார்த்தை கேட்டு என்ற பாடலில் நயனின் ஆடலும், பாடலின் வரிகளில் பொதிந்துள்ள அர்த்தமும் இன்னமும் ரசிக்க கூடியவை..வருடங்கள் பல கடந்து போனாலும் நயன்தாராவின் அழகு இன்னமும் பிரமிக்க வைக்கிறது...
இன்று கே டிவில் ஒளிபரப்பான ஐயா திரைப்படத்தை பார்த்ததும் ஏற்பட்ட ஞாபக சிதறல்கள்..
வருந்தியது :
இனிய காலை வணக்கம்..
இன்னிக்கு கொஞ்சம் நேரத்திலேயே எழுந்தாகிவிட்டது.நேரம் என்றால் மணி நான்கு.பேஸ்ட்டும் ப்ரஷ்ஷுமாய் வீட்டை திறந்து வெளியே வந்தால் காற்று ஜில்லிட அடிக்கிறது.சுத்தமான ஆக்சிஜன் சுவாசிக்க கிடைக்கிறது.தெருவிளக்குகள் அணைவதற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது.சுற்றுப்புற வீடுகளில் இன்னும் எழுந்திரிக்கவில்லை.ஐந்தரை ஆகியிருந்தால் இந்நேரம் பக்கத்து வீடுகள், எதிர் வீடுகள் ஆளுக்கொரு விளக்கமாற்றையும் வாளியையும் கொண்டு வீதியில் கொஞ்சமும் வீட்டில் கொஞ்சமும் தண்ணீர் தெளித்து கோலம் போட்டு கொண்டிருப்பர்.
மணி நான்கானதால் என்னவோ இன்னும் எழுந்திரிக்கவில்லை போலும்.அதிகாலை கனவுகள் பலிக்கும் என்பதினால் யார் யாருடன் டூயட் பாடிக்கொண்டிருந்தனரோ இல்லை மற்ற கனவுகள் ஏதாவது கண்டு கொண்டிருப்பார்களோ என்றும் தெரியவில்லை.
சுற்றும் முற்றும் பராக் பார்த்தபடி இருக்கையில் இரண்டு வீடுகள் தள்ளி உள்ள எதிர்வீட்டில் லைட் ஒளிர்ந்தது.கதவை திறந்தபடி வீட்டுக்காரர் வந்தார்.பகலாய் இருந்தால் ஒரு வணக்கம் கிடைத்திருக்கும்.வண்டியை தள்ளி வாசலில் நிறுத்தினார்.அதற்குள் அவரது இல்லாளும் வாசல் பெருக்க கூடிய சாதனங்களுடன் வந்து வீதியை சுத்தம் செய்ய ஆரம்பிக்க, அவர்களது மகள் பள்ளி யூனிபார்மில் கிளம்பி வெளியே வர, தந்தை மகளின் புத்தக பையை வண்டியில் மாட்டிவிட்டு இருவரும் கிளம்ப ஆரம்பித்த போது மணி நான்கரைக்கும் மேல் ஆகியிருந்தது..
அப்பொழுது தான் ஞாபகம் வந்தது.ஓ..அந்த பெண் ஒன்பதாம் வகுப்பு முடிந்து பத்தாம் வகுப்பில் சேர்ந்திருக்கிறாள் என்று.
தன் குடும்பத்தினரின் ஆசையை தீர்க்க அதிகாலையிலேயே ட்யூசனுக்கு செல்கிறாள்.ஒரு டாக்டராகவோ எஞ்சினியர்..(இது ஒரு படிப்புன்னு இந்த எண்ணம் இனியும் வராது) ஆகவோ ஆக ரெடியாகிக்கொண்டிருக்கிறாள்..
பாவம்..படிப்பு ஏற வேண்டும், மார்க் வாங்க வேண்டும் என்கிற ஆசையில் தன் சுக துக்கங்களை இழக்கிறாள்..எப்படி இந்தக்குளிரில் ரெடியாகி, காலையில் சாப்பிடாமல் போய், மதிய சாப்பாடு மட்டும் சாப்பிட்டு விட்டு மாலை மற்றுமொரு ட்யூசனை முடித்து விட்டு வரும் இவளின் நிலைமை பார்க்க பரிதாபமாக இருக்கிறது.
பெற்றோரின் நிறைவேறாத ஆசைகளுக்கு பிள்ளைகள் பலிகடா ஆக்கப்படுகின்றனர்..
அந்த பள்ளி மாணவியின் நிலை இன்று கஷ்டப்பட்டாலும் நாளை ஒரு நல்ல நிலைமைக்கு வரலாம் என்பதும் உண்மைதான்.இருந்தாலும் ஒரு வித ஆதங்கம் ஏற்படுகிறது..

வெளியே வானம் வெளுக்க ஆரம்பிக்கிறது..பறவைகளி்ன் கீச்சுக்குரல்கள் ஆரம்பமாகின்றன...இரை தேடி செல்லும் பறவைகள் வெறும் வாயோடு வருவதில்லை...
நேசங்களுடன்
ஜீவானந்தம்
Thursday, June 23, 2016
MR LABOUR
புதிதாய் எங்களது கம்பெனியிலிருந்து சர்வீஸ் மட்டும் ஆரம்பித்து இருக்கிறோம்.சின்ன சின்ன வேலைகள் செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை.அதனால் நாங்களே பகுதி நேர அடிப்படையில் பிளம்பிங், எலக்ட்ரிக்கல், கார்பெண்ட்ரி, பெயிண்டிங்க், மற்றும் வாட்டர்ப்ரூஃப் பணிகள் செய்ய முனைந்துள்ளோம்.
மிஸ்டர் லேபரை எங்களது ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் மூலம் தொடர்பு கொள்ள முடியும். இணைய தளத்தின் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.
மொபைல் எண் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.
மொபைல் எண் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.
கூகுள் பிளே ஸ்டோரில் Mr labour ஐ டவுன்லோட் செய்யவும்.
எங்களது சேவை தற்போது கோவை மாநகரில் மட்டும் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது.விரைவில் ஒவ்வொரு நகரிலும் விரிவு படுத்தப்படக்கூடிய எண்ணம் இருக்கிறது.
தொடர்புக்கு : 95665 30046
எங்களது இணைய தள முகவரி :www.mrlabour.com
தொடர்புக்கு : 95665 30046
எங்களது இணைய தள முகவரி :www.mrlabour.com
MR LABOUR
We have started a new company named Mr Labour.We take care of service works like Plumbing, Carpentry, Painting, Pest control and Water proof leakage works.
People can reach us through Android Application and direct calls.
Initially we have started our service in Coimbatore, Expansion will takes place in near future.
Download our Application in Google play store for easy access.
our website address : www.mrlabour.com
mail : mrlabourcbe@gmail.com
Phone Number : 95665 30046
நேசங்களுடன்
ஜீவானந்தம்
Tuesday, June 21, 2016
கோவைக்கு புதுசு - மல்டி லெவல் கார் பார்க்கிங் (Multi level car parking) - குப்புசாமி நாயுடு மருத்துவமனை, கோவை (GKNM hospital, coimbatore)
கோவைக்கு புதுசு
கடந்த
ஞாயிறு அன்று அவினாசி ரோட்டில் அமைந்துள்ள குப்புசாமி நாயுடு (GKNM) மருத்துவமனைக்கு
சென்றிருந்தேன்.எனது சித்தப்பா அவர்கள் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் அங்கு அட்மிட்
ஆயிருந்தார்.அவரை பார்த்து விட்டு வருவதற்காக சென்றிருந்தேன். அவினாசி ரோட்டில் இருந்து
அந்தப்பக்கம் இருக்கிற ரோடு வரை மருத்துவமனை பரந்து விரிந்து இருக்கிறது.காரில் சென்றதால்
பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள மருத்துவமனை பார்க்கிங்கில் நுழைய முயல, அங்கிருந்த செக்யூரிட்டி,
அந்த பார்க்கிங் போங்க என்று சொல்லவும், வண்டியை மருத்துவமனைக்குள் திருப்பினேன்.ஒரு
லெஃப்டும் ரைட்டும் போட்டு உள்ளே நுழைய ஒரு பணியாளர், சார்…ஒட்டுநர் மட்டும் உள்ளே
போங்க ..மற்றவர்கள் இங்கேயே இறங்கிக்கொள்ளுங்கள் என்றார்.
வண்டியில்
இருந்தவர்கள் இறங்கிக்கொள்ள, நான் மட்டும் உள்ளே நுழைந்தேன்.டோக்கன் கொடுக்க ஒரு பூத்
இருக்க, அதற்கு முன் வண்டியை நிறுத்த, உள்ளிருந்தவர் வண்டி எண் எல்லாம் செக் செய்து
விட்டு டோக்கன் ஒன்றினை கொடுத்தார்.கூடவே A 16 ல் நிறுத்துங்க என்றார்.சரி என்றபடியே
வண்டியை கிளப்பினேன்.ஒரு பெரிய ஷெட்…கார்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தபடி இருக்க,
எனது வாய் ஆ வென ஆச்சர்யத்தில் பிளந்தது.
கீழ்
வரிசையில் பல கார்களும், மேல் வரிசை, அதற்கும் மேல் வரிசை என நான்கு வரிசைகள் இருக்க,
அனைத்திலும் கார் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. A , B, C என மூன்று தளங்கள்.ஓவ்வொரு தளத்திலும் ஐந்து வரிசைகள்.கார்கள்
செங்குத்தாக மேல் செல்கின்றன.கிடை மட்டமாகவும் செல்கின்றன.அனைத்தும் லிஃப்ட் வசதியில்
நடக்கின்றன.ஆச்சர்யப்பட்டுக்
கொண்டே எனக்கான இடத்தில் வண்டியை நிறுத்தினேன்.பக்கத்தில் கார்கள் கீழிறங்குவதும் மேல்
ஏறுவதுமாக இருந்தன.
அருகில்
இருந்த பணியாளரை ஆர்வத்துடன் கேட்க, கிட்டத்தட்ட 350 கார்கள் ஒரே நேரத்தில் நிறுத்திவைக்கலாம்
என்றும், எந்த வரிசையில் இருந்தாலும் 10 நிமிடங்களுக்குள் காரை வெளியே எடுத்து விடலாம்
என்றும் சொல்லி ஆச்சர்யப்படுத்தினார்.
இந்த
மல்டி லெவல் கார் பார்க்கிங் நிச்சயம் கோவைக்கு புதுசு.டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில்
இந்த வசதிகள் இருக்கின்றன என்பதை கேள்விப்பட்டும், ஒரு சில திரைப்படங்களில் பார்த்தும்
இருக்கிறேன்.ஆனால் முதன் முறையாக கோவையில் இந்த வசதியினை உபயோகப்படுத்தி பார்த்து இருக்கிறேன்.குறிப்பிட்ட
மணி நேரம் வரைக்கும் ரூ 30, அதிக நேரம் என்றால் ரூ 60 மட்டும் வசூலிக்கின்றனர்.காரில்
வரும் டிரைவர்கள் வண்டியை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்க, ஒரு தனி அறை ஒன்றினை அமைத்திருக்கின்றனர்.
இந்த
மல்டிலெவல் கார்பார்க்கிங் வசதியை மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது
உறவினர்கள் கார்களை பாதுகாப்பாக ஒரே இடத்தில் நெருக்கடி இன்றி நிறுத்தவும், கார்கள்
வெயில் மழை போன்ற இயற்கை சூழல்களால் பாதிப்படையாமல் இருக்கவும், மிகப்பெரும் இடவசதியை
சுருக்கி, குறைந்த இடத்தில் நிறைய கார்களை நிறுத்தும் அமைப்பினை ஏற்படுத்திக் கொடுத்த
குப்புசாமி நாயுடு மருத்துவமனை நிர்வாகத்திற்கு மிகப்பெரும் நன்றி.
இந்த
மாதிரி நகரத்தில் நிறைய மல்டி லெவல் கார் பார்க்கிங் இருந்தால் ரோட்டில் நன்கு இடவசதி
கிடைக்கும்.காரை கன்னாபின்னாவென்று நிறுத்திவிட்டு ஷாப்பிங் செல்ல மாட்டார்கள்.அதே
போல் அதிக கார்கள் நிற்கக்கூடிய இடத்தின் தேவையும் குறையும்.
இதெல்லாம்
முடித்து விட்டு அடுத்த விஸிட் ஆக கோவை சாய்பாபா கோவில் அருகே உள்ள கங்கா மருத்துவமனைக்கு
சென்றேன்.கோவிலை வலம் வருவது போல் ஒரு முறை சுற்றி வந்தவுடன், அங்கிருந்த செக்யூரிட்டி,
பக்கத்து காலி இடத்தில் எங்களது கார்பார்க்கிங் இருக்கிறது அங்கே நிறுத்திக் கொள்ளுங்கள்
என்றார்.அங்கே போனால் கார்கள் வெட்டவெளியில் நிற்கின்றன.ஒருவர் காரை முன்னும் பின்னும்
எடுக்க முயன்று கொண்டிருந்தார்.அவர் முயற்சி முடிந்து காரை நிறுத்தியவுடன், பிறகு நான்
முயன்று கொண்டிருக்க ஆரம்பித்தேன்.ஒருவழியாய் காரை நிறுத்தி விட்டு வெளியே வர, ரூ
10 ஐ தந்துவிட்டு மருத்துவமனைக்கு சென்றேன்…
கோவையில் குப்புசாமி மருத்துவமனையில் மல்டி லெவல் ஆட்டோமேடிக் கார்பார்க்கிங் ஐ நிறுவியுள்ள நிறுவனம் SIEGER.
கார் இருக்கிறவங்க சும்மா ஒரு ட்ரிப் போய்ட்டு வாங்க...மருத்துவமனைக்கு....... நோயோடு அல்ல........காரோடு.......
நேசங்களுடன்
ஜீவானந்தம்
Friday, June 17, 2016
சமையல் - அசைவம் - வாத்துக்கறி குழம்பு
எங்க ஊர் கரூர்...காவிரியும் அமராவதியும் ஓடற ஊர்.காவிரியின் ஓரப்பகுதிகளில் நன்செய் புன்செய் வயல்கள் உண்டு.அதனாலேயே இங்க வாத்துகள் அதிகம்.வாத்து வளர்ப்பவர்களும் அதிகம்.காவிரியின் ஓரமாக உள்ள வயல்களில் வாத்துக்கள் எப்போதும் மேய்ஞ்சிட்டு இருக்கும்.நெல் அறுத்த வயல்களில் தண்ணீர் இருக்கும் போது வாத்துகள் மேய்ஞ்சிட்டு இருக்கும்.சிறுவயதில் வயல்காட்டில் வாத்துக்களை துரத்தி விளையாடுவோம்.மேஞ்சிட்டு இருக்கும் போதே வாத்து முட்டை போட்டுடும்.அதை மேய்க்கறவங்களுக்கு தெரியாம எடுத்துவந்து வீட்டில் அவிச்சோ ஆம்லெட் போட்டோ சாப்பிடுவோம்...
சாப்பிட்ட பத்தாவது நிமிசத்தில் நம்ம வீட்ல கண்டுபிடிச்சிருவாங்க....வாத்து முட்டை தின்றிருக்கான் என்று...அவ்ளோ கவிச்சி அடிக்கும்.அப்படி கவிச்சி அடிச்சாலும் அதுல ஏகப்பட்ட சத்துக்கள் இருக்கு.சளிக்கு ரொம்ப நல்லது.
வாத்துக்கறின்னாலே கொஞ்சம் கவிச்சி அடிக்கும்னு சொல்வாங்க.ஆனாலும் அதன் சுவையில் சூப்பராக இருக்கும்.
வாத்தினை கோழி வெட்டுவது போல் அதன் கழுத்தை அறுக்ககூடாது.திருகி போடனும்.பின் அதை நன்கு கொதிக்க வைத்த குண்டாவில் போட்டு முக்கனும்.பிறகு அதன் இறகை பிய்த்து எடுக்கவேண்டும்.பிறகு கொஞ்ச நேரம் நெருப்பில் வாட்டி மிச்சமிருக்கிற சிறு சிறு முடிகளை பொசுக்க வேண்டும்.பின் மஞ்சள் போட்டு நன்கு கழுவி வெட்ட ஆயத்தமாகனும்.ரத்தம் வேஸ்டாகாமல் வெட்டி துண்டுகள் போடனும்.
ஒரு சிலர் கறியை நன்கு கழுவி விடுவர்.இருந்தாலும் டேஸ்ட் இருக்கும்.ஆனால் ரத்தத்தோடு சமைக்கிற வாத்துக்கறி இன்னும் டேஸ்டாக இருக்கும்.
செய்முறை:

வேண்டிய பொருட்கள்:
வாத்து - 1 (நல்லா மஞ்சள் போட்டு கிளீன் பண்ண கறி )
சி - வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 2
தேங்காய் - ஒரு மூடி அரைத்தது
பூண்டு - 10 பல்
இஞ்சி - கொஞ்சம்
பட்டை, கிராம்பு, - 2 எண்ணம்
மிளகாய்த்தூள்- தேவையான அளவு
மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொ.மல்லி - தேவையான அளவு
செய்முறை :
முதலில் வாத்தினை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.( வாத்தினை அதன் ரத்தத்தோடு சமைப்பது நல்ல ருசியை தரும் )
வாணலியில் கொஞ்சம் எண்ணை விட்டு பட்டை,கிராம்பு வெங்காயம் போட்டு நன்கு வதக்க வேண்டும்.பின் அதை ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும்.தேங்காயை துருவி நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.பூண்டு, இஞ்சி அரைத்துக்கொள்ளவும்.தக்காளி அரிந்து கொள்ளவும்.
குக்கரில் எண்ணைய் விட்டு இஞ்சி பூண்டு விழுதை நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.பின்பு சுத்தம் செய்த வாத்தினை போட்டு நன்கு வதக்க வேண்டும்.இரண்டு டீஸ்பூன் மஞ்சளை சேர்த்து வதக்கவும்.வாத்திலிருந்து எண்ணைய் நிறைய பிரியும்.அவ்வாறு பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.பிறகு அரிந்து வைத்திருக்கிற தக்காளியையும் சேர்த்து வதக்க வேண்டும்.
நன்கு வதங்கிய பின் அரைத்து வைத்திருக்கிற தேங்காய், வெங்காய கரைசலை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து குக்கர் மூடி போட்டு எட்டு முதல் பத்து விசில் வரை விடவும்.(புளி வேண்டுமென்பவர்கள் கொஞ்சம் கரைச்சு ஊத்திக்கொள்ளலாம்)
பின் விசில் இறங்கியவுடன் கொத்தமல்லி தழை போட்டு மூடிவிடவும்.சுவையான வாத்துக்குழம்பு தயார்.குக்கரில் வேண்டாம் என்பவர்கள் அரை மணி நேரம் வாணலியில் கொதிக்க வைத்தால் சுவையான குழம்பு ரெடி....
இதையே கொஞ்சம் சுண்ட வைத்தால் வாத்து வறுவல் ரெடி...
குழம்பில் என்னதான் மஞ்சளும் மிளகாயும் சேர்த்தினாலும், குழம்பின் நிறம் கொஞ்சம் கருப்பாகவே இருக்கும்.அதுதான் வாத்துக்கறியின் சுவை....
காலையில் சூடாய் இட்லிக்கு சாப்பிட்டால் செமயாக இருக்கும்.வாத்துக்கறி கொஞ்சம் எலும்பாகத்தான் இருக்கும்.ஆனால் சாப்பிட சூப்பராக இருக்கும்.

Wednesday, June 8, 2016
கரம் - 22
கோவையின் டிராபிக்...
இப்போது சென்னை போல் மாறிக்கொண்டிருக்கிறது கோவை.கோவையின் அனைத்து ரோடுகளிலும் ஏதாவது ஒரு இடத்தில் ஒன்வே ஆக்கி வைத்து இருக்கின்றனர்.மேம்பால பணிகளும், மின்கம்பி பதிப்பு வேலைகளும் நடப்பதால் நிறைய இடங்களில் பள்ளங்கள் தோண்டி வைத்து இருக்கின்றனர். எல்லா ரோடுகளிலும் மிகுந்த ட்ராபிக் ஏற்படுகிறது.வாகனப்பெருக்கம் வேறு அதிகமாகி விட்டதால் ஒவ்வொரு சிக்னலிலும் பல நிமிட நேரங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது.அதுவும் மழைக்காலங்களில் சொல்லவே வேண்டாம்.ரோடே வெள்ளக்காடாக ஆகி வாகனங்கள் மிதந்தபடியே செல்லும்.இப்போது மழைக்காலம் வேறு ஆரம்பித்து இருப்பதால் கோவை நகரம் வாகன நெரிசலால் ஸ்தம்பிக்க போவது உறுதி.
தள்ளுவண்டிக்கடை:
கவுண்டம்பாளையம் சிக்னல்
மாலை நேரத்தில் மேட்டுப்பாளையம் ரோட்டில் இருக்கிற இந்த சிக்னல்ல, கொஞ்ச நஞ்ச நேரத்தில் நிற்கிற வாகன ஓட்டிகளின் நாசியானது நிச்சயம் ஒரு சுவையான, வாசனை மிகுந்த மணத்தினை உணர்வார்கள் கூடவே பசியையும்.. அதுவும் மழைக்காலத்தில் வாசனை ஊரைக்கூட்டும்.
காரணம் சிக்னலின் இருபுறமும் தள்ளுவண்டிக்கடை இருக்கிறது.சுடச்சுட போண்டா, பஜ்ஜி, வடை முட்டைப்போண்டா, பக்கோடா ன்னு விதவிதமா போட்டுத்தள்ளுவாங்க.
கடலை எண்ணையின் வாசத்துடன் மாவு எண்ணையில் பொரிகிற வாசமும் ஊரைக்கூட்டும்.
அதுவும் வெங்காய பக்கோடா செம வாசமா இருக்கும்.சாப்பிட்டா அப்படியே நாக்கு நரம்புகளை உசுப்பேத்தும்.அவ்ளோ டேஸ்டா இருக்கும்..
விலையும் கம்மிதான்..
சிக்னல் அருகே எதிர் எதிர் இரண்டு கடைகள் இருக்கின்றன. காந்திபுரம் செல்லும் வழியில் சிக்னல் அருகே இருக்கும் கடை செம டேஸ்ட்..
பார்த்த படம்
இப்போதெல்லாம் தியேட்டருக்கு போய் நிறைய நாட்கள் ஆகிவிட்டன.ஆனாலும் மொபைலில், டிவிடியில் படங்களை பார்த்து கொண்டிருக்கிறேன்.எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக பார்க்கிறேன்.
சமீபத்தில் மருது பார்த்தேன்.பழைய கதை..ஒன்றும் சுவாரஸ்யமில்லை. இந்தப்படத்தையே முழுதாய் பார்க்க மூன்று நாட்கள் ஆனது.
மலையாளத்தில் மகேஷிண்ட பிரதிகாரம், டார்விண்டே பரிணாமம்,ஆக்சன் ஹீரோ பிஜி பார்த்தேன்.இதுல ஆக்சன் ஹீரோ பிஜி தான் நல்லா இருந்தது.
நிவின்பாலி செம...படமும் பிடிச்சது.
பு(து)த்தகம்:
சமீபத்தில் இடக்கை, வலம் வாசித்தேன்.இரண்டும் வரலாற்று நாவல்கள்.இதில் இடக்கையை விட வலம் மிக நன்றாகவே இருக்கிறது.நரிவேட்டை பற்றின குறிப்புகள் மிகுந்த ஆர்வத்தையும், ஆச்சர்யத்தையும் தருகின்றன.படிக்க சுவராஸ்யமான நாவல் வலம். இதன் எழுத்தாளர் விநாயக முருகன்.
இடக்கையை பொறுத்த வரை ஒளரங்கசீப் வரலாற்று கதை.மன்னர் இறந்ததுக்கு அப்புறம் ஏற்படும் பிரச்சினைகள், குருட்டுத்தனமான அதிகாரம் கொண்ட மன்னனின் ஆட்சியின் அவலங்கள்,சாதாரண குடிமகனான இடக்கை பழக்கம் கொண்ட ஒருவனின் கதையோடு வரலாற்று கதை.இதன் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.
இப்போது புதிதாக ஆங்கில நாவல்களை வாசிக்கலாம் என்றிருக்கிறேன்.Dongri to Dubai, The Taj conspiracy, RIP, The page 3 murders, இப்படி நான்கு நாவல்களை வாங்கியிருக்கிறேன். எப்போது படித்து முடிப்பேன் என்று தெரியவில்லை.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
Subscribe to:
Posts (Atom)