சென்னை அரும்பாக்கம் , வடபழனி நூறடி சாலையில் இருக்கிறது இந்த விஜய் பார்க் ஹோட்டல்.
கிட்டத்தட்ட 13 ஹால் கள் உள்ளன.அனைத்தும் திருமண வரவேற்பு , பிறந்தநாள் விழா, மற்றும் இன்ன பிற விருந்துகள் நடைபெறும் ஹால் களாக இருக்கின்றன.சமீபத்தில் எனது நண்பரின் மகனது முதல் பிறந்த நாள் விழாவினை 6 மாடியில் ஒரு ஹாலில் ஏற்பாடு செய்து இருந்தார்.மொத்தம் 75 பேருக்காக உணவு ஆர்டர் பண்ணியிருந்தார்.பபே முறையில் உணவு வழங்கினர்.கிட்டத்தட்ட ஒரு 12 வகை உணவுகள் இருக்கும்.எந்த ஒரு உணவும் ருசியே இல்லை.ரொம்ப மட்டகரமான சுவையுடன் இருந்தன.தயிர் சாதம் கூட நன்றாக இல்லை என்றால் பார்த்துக்குங்க...
அப்புறம் வந்தவர்கள் எதோ ஒரு வேகத்தில் சாப்பிட்டு கிளம்பிவிட்டனர்.சீக்கிரம் வேறு தட்டுகள் காலி ஆகிவிட்டன.உணவு மட்டும் அப்படியே இருக்கிறது.இன்னும் 50 பேர்கள் சாப்பிடலாம்.ஆனால் தட்டுகள் இல்லை.கூடுதலாக கேட்டால் அவ்ளோதான் தரமுடியும் என்று வீம்புடன் பதில் அளிக்கின்றனர்.குழந்தைகள் சாப்பிட்டதையும் கணக்கில் கொண்டு, தட்டுகளை குறைத்து விட்டனர்.மொத்தம் 75 தட்டுகள் தான் கணக்கு என்று திரும்ப திரும்ப சொல்லி கூடுதல் தர மறுத்து விட்டனர்.
உணவு சுவையாய் இருந்தால் கூட பரவாயில்லை.மட்டம் வேறு.லேட்டாய் வந்த உறவினர்கள், மற்றும் விழாவினை நடத்திய இவென்ட் மேனேஜ்மென்ட் மக்கள் என ஒருத்தரும் சாப்பிடவில்லை..பின்னர் நான் போய் ப்ளோர் மேனேஜரை பயங்கரமாக சத்தம் போட்டுவிட்டு தான் வந்தேன்.ஒண்ணையும் வாய்ல வைக்க முடியல.முதல நீங்க டேஸ்ட் பார்த்தீங்களா என்றும் கேட்டேன்.சுவையும் இல்லை , நல்ல சேவையும் இல்லை பின்னே எதுக்கு வாடகைக்கு விடறீங்க....பண்ணாடைகளா....விலை மட்டும் அதிகம்.ஒரு பிளேட் 350 ப்ளஸ் வரி....வீட்டுல சமைக்கிறத விட ரொம்ப டேஸ்டா இருக்கும்னு தான் ஹோட்டலுக்கு போறோம் ..அங்கேயும் இத விட மோசமா இருந்தா .....
கோவையைப் பற்றிய செய்திகளை அதிகமாக எதிர்பார்க்கிறேன்
ReplyDeleteநல்ல வேலை மற்றவர்களுக்கு தெரியப் படுத்தினீங்க
ReplyDeleteகோவை ஜீவா,
ReplyDeleteசென்னை விஜய் பார்க்கும் பார்த்தாச்சா, பார்ட்டி ஹால் ஃப்ரி என்பதால் அப்படி செய்துட்டாங்க போல. நீங்க சொன்னது போல கல்யாண வரவேற்பு, பிறந்த நாள் ,ஆகியவை தான் அங்கே அதிகம்,
எதிரில் இருக்கும் நம்ம வீடு வசந்தபவனில் இதே வசதி உண்டு ஓரளவு நன்றாக இருக்கிறது.
350 ரூ விட குறைவாக ,நல்ல சுவையாக கொடுக்கும் ஹோட்டல் சென்னையில் இருக்கு, நடத்தியவர்கள் அதே பகுதி என நினைக்கிறேன்.
அதே பகுதியில் அம்பிகா எம்பையர், ஹோட்டல் பீமாஸ் எல்லாம் இந்த வசதிகள் இருக்கு.