உப்பிட்டு (போளி) பொங்கலூர்.
கோவையில் இருந்து கரூர் செல்லும் வழியில் பல்லடம் தாண்டி பொங்கலூர் இருக்கிறது.இந்த ஊருக்கு இரண்டு சிறப்புகள் இருக்கின்றன.ஒன்று பெரும் அரசியல்வாதி பொங்கலூர் பழனிசாமி பிறந்த ஊர்.மற்றது உப்பிட்டு.போளி என்று அழைக்கப்படும் பலகாரம்.மிகுந்த சுவையுடன் செய்யப்படும் இந்த பலகாரம் இங்கு ரொம்ப பிரசித்தம்.வெளியூர் வாசிகள் விரும்பி வாங்கி செல்லும் பலகாரமாய் இருக்கிறது.சுட சுட போட்டு தருகிறார்கள்.சுவையும் அதிகம்.தேங்காய் போளி, பருப்பு போளி என்று இரண்டு சுவைகளில் கிடைக்கிறது.விலையும் குறைவுதான்.5 ரூபாய் மட்டுமே.
அந்த பக்கம் போகும்போது மிஸ் பண்ணி விடாதீர்கள் ...
கிசு கிசு (update - 10.5.2012):
இந்த கடை ரொம்ப நாளா பூட்டி கிடக்குது..ஒருவேளை நம்ம போட்டோ எடுத்த நேரம் சரியில்லையோ...அப்புறம் அந்த ஊர்ல நிறைய கடைகள் இருக்கு.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
ஆஹா படம் பார்க்கவே நாக்கில் எச்சில் ஊறுதே....!!!
ReplyDeleteசாப்பிட்டீங்க எனில் இன்னும் ஊறும்...
ReplyDeleteமனோ
இங்க ஒப்புட்டு என்று சொல்றாங்க
ReplyDeleteவிசேச நாட்களில் முன்பு செய்து கொடுத்துள்ளேன் (பருப்பு)
ருசி அருமையாக இருக்கும்
கிராமத்து சொல்வடை...உப்பிட்டு அல்லது ஒப்பிட்டு..நன்றி M.R
ReplyDeleteஅந்த பக்கம் போகும்போது மிஸ் பண்ணி விடாதீர்கள் ...
ReplyDelete>>
ஓக்கே மிஸ் பண்ணாலை
ஒப்புட்டு....இது கொங்கு மண்ணின் கிராமத்துப் பலகாரம். இங்கு உள்ள ஒவொரு கிராமத்திலும் சுலபமாக செய்யக்கூடிய பலகாரம் இது. அண்மையில் என் அத்தை கிராமத்திலிருந்து வரும்போது செய்துகொண்டு வந்திருந்தார்கள். கடையில் வாங்கி வந்ததைவிட ருசியாக இருந்தது. கூடவே அன்பும் இருந்தது.
ReplyDeleteஉங்கள் இடுகைகள் சுவராஸ்யமாக இருக்கிறது. உங்களை பின்தோடர்கிறேன். நன்றி.
போளி செய்ய நேரம் பிடிச்சாலும் மிக ருசியுள்ள பலகாரம். பகிர்வுக்கு நன்றி சகோ
ReplyDeleteவாங்க வெண்புரவி ...நன்றி ..
ReplyDeleteவாங்க ராஜி ...நன்றி ..
ReplyDeleteசரியா எந்த எடம்ங்க ?
ReplyDeleteபல்லடம் தாண்டி பொங்கலூர் ....கரூர் செல்லும் வழியில் வலது கை பக்கம் .கவிதா ஸ்வீட்ஸ் ....கண்டிப்பா சாப்பிட்டு பாருங்க ...கார்த்திக்
ReplyDeleteஒப்பிட்டு எப்படி சாப்பிடுவதென்று தெரியமா? என்னுடைய இந்தப் பதிவைப் பார்க்கவும்.
ReplyDeletehttp://swamysmusings.blogspot.com/2011/02/blog-post_14.html