Saturday, November 26, 2011

கோவில் குளம் - அகஸ்தீஸ்வரர் கோவில் - திருமுக்கூடலூர்(THIRUMUKKUDALUR), கரூர்

திருமுக்கூடலூர் (THIRUMUKKUDALUR)                
முதல் முறையாக தமிழில் அர்ச்சனை செய்யப்பட்ட கோவில் உள்ள ஆலயம்.(புதியதாய் கட்டிய கோவிலுக்கு மட்டுமே தமிழில் அர்ச்சனை). மூன்று ஆறுகள் கூடும் இடம் திருமுக்கூடலூர்.இங்கு அமராவதி நதிக்கரை ஓரமாக இக்கோவில் அமைந்து இருக்கிறது.பல நூற்றாண்டு களுக்கு முன்னரே  இக்கோவில் கட்டப்பட்டு இருக்கிறது.இக்கோவிலின் தல வரலாறு தெரியவில்லை.ஆனால் சோழ மன்னன் கட்டிய கோவில் என்று நம்பப்படுகிறது.இப்போது இக்கோவில் பராமரிப்பின்றி சிதில மடைந்து இருக்கிறது.கல்வெட்டுகள், ஒரே கல்லில் செதுக்கிய தூண்கள், அதில் சிற்பங்கள், கருங்கல்லில் செய்யப்பட்ட மண்டபங்கள், இப்படி நுண்ணிய அரிய கட்டிட சான்றுகள் இருக்கின்றன.தொல் பொருள் துறையினரால் அடையாளம் காணப்படாமல் இருக்கிறது.
 பிரதோஷம் , பௌர்ணமி அன்று மிகவும் சிறப்பாய்  பூஜை செய்யப்படுகிறது. அன்று நல்ல கூட்டம் காணப்படும். 























கோவிலை சுற்றி கோட்டை மதில் சுவர் உள்ளது.தற்போது இந்த கோவிலை கிருஷ்ணன் மற்றும் அவரது வாரிசுகள் நிர்வகித்து பூஜை செய்து வருகின்றனர்.


செல்ல வழி : கரூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவு.4 ம் எண் பேருந்து திருமுக்கூடலூர் செல்லும்.

கிசுகிசு: இந்த ஊர்ல தான் நான் பொறந்தேன் வளர்ந்தேன்.எப்படியோ எங்க ஊரை பத்தி ஒரு பதிவ போட்டுட்டேன்..

THIRUMUKKUDALUR, KARUR DISTRICT

நேசங்களுடன்

ஜீவானந்தம் 

16 comments:

  1. முதல்முதலில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டது என்பது தவறு. அதில் உள்ள மணி முத்தீஸ்வரர் ஆலயத்திற்கு மட்டும் தமிழில் குடமுழுக்கு செய்யப்பட்டது. இக்கோயிலில் தினமும் ஒருகால பூஜையும் மாலையில் தீபமும் ஏற்றப்பட்டு வழிபாடு நடக்கிறது.இவ்வூர் நான் பெண்ணெடுத்த ஊர் என்பதாலும் இதை நிர்வகிக்கும் கிருஷ்ணசாமி குருக்கள் என் மாமனார் என்பதாலும் இந்த தகவல்களை தந்துள்ளேன்!

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி.திருத்திவிட்டேன்.நானும் அந்த ஊரில் பிறந்து வளர்ந்தவன்.என் பள்ளிபருவத்தில் இக்கோவிலின் மேலே ஏறி விளையாண்டு இருக்கின்றேன்.இப்போதுதான் அதன் சிறப்பு பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி தளிர்

    ReplyDelete
  3. அழகா படங்களுடன் பகிர்ந்ததற்கு நன்றிங்க!

    ReplyDelete
  4. அழகான படங்களுடன் சிறப்பான கோவில் பற்றிய தகவல் பதிவு. நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  5. கோவிலை நேரில் பார்த்த அனுபவம் புகைப்படங்கள் அருமை நண்பரே

    ReplyDelete
  6. படங்கள் அருமையாக இருக்கிறது நீங்கள் எடுத்ததா...?

    ReplyDelete
  7. இப்படியான தொண்மையான கோவிலை சிதிலமடையாமல் காப்பதும் நாட்டுப் பற்று மொழிப் பற்று சார்ந்த விஷயம் தான். அரசிடம் முறையிட ஏதும் வழி இருக்கிறதா என்று ஆராய்ந்தீர்களா?

    படங்களுடன் செய்தி வெளியிட்டு, மறைந்திருக்கும் இந்தக் கோவிலை வெளிக் கொணர்ந்தமைக்கு நன்றி...

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி ஷர்மி அவர்களே... ஊர் மக்களின் ஒற்றுமை இல்லாதால் பாழ்பட்டு கிடக்கிறது ...

    ReplyDelete
  9. கண்டிப்பாய்.... நானே எடுத்த புகைப்படங்கள் நன்றி மனோ

    ReplyDelete
  10. வாங்க M .R .வருகைக்கு நன்றி

    ReplyDelete
  11. கோவிலை நேரில் பார்த்த அனுபவம் புகைப்படங்கள் அருமை thank you nanba..............d.rajeshkumar from erode

    ReplyDelete
  12. ஸார் ஒரு சந்தேகம் கோவிலில் இருக்கும் ஜீவ சமாதி எந்த சித்தர் உடையது

    ReplyDelete
  13. can you provide contact number of Gurukal.So that we can fix the time to visit.Thanks.

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....