போன வாரம் சண்டே கேரளா போலாம்னு முடிவு பண்ணி பக்கத்துல இருக்கிற மலம்புழா அணைக்கு போனோம்.ரொம்ப மாறி இருக்கிறது அணை.
3 வருடங்களுக்கு முன்பு செல்லும் போது ரொம்ப பசுமை ஆக இருந்தது.இப்போ வெறும் கான்க்ரிட் இடங்களாக ஆக்கி விட்டார்கள்.அழகு படுத்துகிறார்களாம்..எங்கும் மரங்களை காணோம்.கொஞ்சம் பசுமை மட்டுமே இருக்கிறது.ரொம்ப வெய்யில் காரணமாக ஒதுங்க இடம் இல்லாமல் ஆகி விட்டார்கள்.ஆங்காங்கே அடிக்கிற வெய்யிலிலும் சரசம் கொள்ளும் ஜோடிகளும் இருக்கின்றார்கள்.
ஒரு வருடம் கழித்து செல்லுங்கள்.பார்க்க அழகாய் இருக்கும்.அப்புறம் அணையில் நல்ல நீர்மட்டம் இருக்கிறது.பால் போல் நுரைத்து பொங்கும் அணை நீர் பார்க்க சுவாரஸ்யம்.கார்டன் செல்ல கம்ப்யூட்டர் அக்செஸ் கார்ட் தருகிறார்கள்.அதை ஸ்க்ரப் பண்ணியவுடன் தடுப்பு திறக்கிறது.(அட்வான்ஸ் டெக்னாலஜி யாம்...நம்மள போகவிட்டு புற முதுகுல சாரி பின்னாடி சாத்துது..)
அப்புறம் ரோப் கார் இருக்கிறது.அதில் சென்றால் முழுவதும் கீழே காணலாம்.படகு சவாரியில் செல்லும்போது ஒருவித த்ரில் இருக்கிறது.படகினை இப்படி அப்படி ஒடித்து ஓட்டி நம்மை பயமுறுத்துகின்றனர்..ஆனாலும் நன்றாக இருக்கிறது.6 பேர் செல்ல 180 வசூல் செய்கின்றனர்.ஆனால் 10 நிமிடம் குறைவாகவே இருக்கிறது.
அணையில் திறந்து விடப்படும் நீரின் வெள்ளோட்டம் மிக அருகில் இருந்து காணலாம்.இதெல்லாம் முடித்து விட்டு வெளியில் வந்தோம்.
அப்புறம் பாம்பு பண்ணை இருக்கிறது.(பாவம் பாம்புகள் )ராஜ நாகம் இருக்கிறது.ஒரு பெரிய கூண்டு .அதில் எட்டி பார்த்தால் ஒரே ஒரு பச்சோந்தி மட்டுமே இருக்கிறது ..(மவுசு தான் ..)சொல்லி கொள்கிற மாதிரி இல்லை.
சிறுவர்கள் விளையாட பொழுது போக்கு பூங்கா இருக்கிறது.
வெளியில் வந்து எங்களின் தாகத்தை தீர்க்க அருகிலிருந்த ஹோட்டல் சென்று சாப்பிட்டோம்.கேரள உணவான மீன், மட்டை அரிசி.. மற்றும் இறைச்சி......பின்னர்...... ஒருநாளில் சென்று வர ஏற்ற இடம்..முக்கியமாய் காதல் இளசுகளுக்கு ....கள்ள பெருசுகளுக்கு....
நேசங்களுடன்
ஜீவானந்தம்
வெளியில் வந்து எங்களின் தாகத்தை தீர்க்க அருகிலிருந்த ஹோட்டல் சென்று சாப்பிட்டோம்.கேரள உணவான மீன், மட்டை அரிசி.. மற்றும் இறைச்சி......பின்னர்...... ஒருநாளில் சென்று வர ஏற்ற இடம்..முக்கியமாய் காதல் இளசுகளுக்கு ....கள்ள பெருசுகளுக்கு....
நேசங்களுடன்
ஜீவானந்தம்
படங்களும் பகிர்வும் அருமை !...
ReplyDeleteஅணையில் திறந்து விடப்படும் நீரின் வெள்ளோட்டம் மிக அருகில் இருந்து காணலாம்.இதெல்லாம் முடித்து விட்டு வெளியில் வந்தோம்.
அப்புறம் பாம்பு பண்ணை இருக்கிறது.(பாவம் பாம்புகள் )ராஜ நாகம் இருக்கிறது.ஒரு பெரிய கூண்டு .அதில் எட்டி பார்த்தால் ஒரே ஒரு பச்சோந்தி மட்டுமே இருக்கிறது ..(மவுசு தான் ..)சொல்லி கொள்கிற மாதிரி இல்லை.
இதென்ன சேட்டை இத்தனை பாம்பு கண்டும் பயமின்றி ராஜ நாகம் பாக்கணுமா?...அதிலும்
எந்தப் பயமும் இல்லாமல் குட்டிப் பாம்பை பச்சோந்தி என்குறீர்களே உங்களுக்கு பாம்பு
என்றால் பயமே இல்லைப் போலும்.ராஜ நாகம் சூட்டிங்குக்கு போயிற்றுது ஹா .....ஹா...ஹா....
முடிந்தால் வாருங்கள் கவிதை
ReplyDeleteகாத்திருக்கின்றது ......
மிக்க நன்றி தங்கள் பகிர்வுகளுக்கு ......
ReplyDeleteவாங்க அம்பாள்.ஆமாங்க..ஒரு பெரிய கூண்டுல சின்ன பச்சோந்தி மட்டும் இருக்கு ..வேற பக்கம் ஒரு சில பாம்புகள் மட்டுமே இருக்கிறது.நன்றி வந்ததுக்கு
ReplyDeleteஒரு நாள் போக வர ஒரு நல்ல சுற்றுலாத் தலம். முன்பு (பல வருடங்களுக்கு முன்) போனபோது பூங்கா நன்றாக இருந்தது. கால ஓட்டத்தில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை போலும்.
ReplyDeleteஆமாங்க ..இப்போ ரொம்ப மாறித்தான் இருக்கிறது.நன்றி DR.
ReplyDeleteநல்ல தகவல்கள் சொல்லியிருக்கீங்க. நன்றி
ReplyDeleteமலம்புழா அணையை பற்றி அருமையான் தகவல்.படங்கள் அனைத்தும் மிக அழகு.நன்றி பகிர்வுக்கு.
ReplyDelete