Wednesday, October 10, 2012

பேஸ்புக் கவிதைகள் - 2

எவ்வளவோ  வேலைப் பளு இருந்தாலும் அவளின் நினைவுகளில் நனைவது சுகம்.அவளின் இடைவிடாத நினைவுகளில் நலிந்து போனதால் வந்த கவிதைகள். இதுவும் பேஸ் புக்கில் கிறுக்கியவை...

னம் லயிக்க
மறுக்கிறது எதிலும்
மங்கை உந்தன்
நினைவுகளால்.......

நாட்கள்
நன்றாய் செல்கிறது
தினந்தோறும்
உன்
நினைவுகளுடன்

ரவைக் கழிப்பதில்
கொஞ்சம்
இடர்பாடாய்
இருக்கிறது
இனியவளின்
நினைவுகளால்....
 
மீண்டு வர 
முயற்சிக்கிறேன்
முடியவில்லை 
நித்தமும்
அவளது 
நீங்காத
நினைவுகளால்
 
னியவளின்
இடைவிடாத
நினைவுகளால்
நிரம்பி வழிகிறது
என்
இதயம்....

ள்ள அள்ள
குறையாத
அட்சய பாத்திரமாய்
அவளின்
ஞாபகங்கள்...

றைக்க இறைக்க
ஊறுகிறது
இனியவளின்
ஞாபகங்கள்
என்
இதய கேணியில்....

விழி மூட
விருப்பமில்லை
விரும்பியவளின்
முகம்
விழித்திரையில்
இருப்பதால்....

ன்
விழிகளின்
உரசலில்
உடைந்து போனது
என்
இதயம்

ரும்பாய்
இருந்த
இதயம்
இளகியது
இனியவளின்
வருகையால்.......
 
ஞ்சி அவளை
வர்ணிக்க
வார்த்தைகளை தேடுகிறேன்
புலப்படவில்லை எதுவும்
புதிதாய்....
ணருகிறேன்
உயிர்ப்புடன்
உள்ள காதலை
அவள்
இல்லாத தினங்களில்....


சிலிர்க்கிறது
என் மனம்
நீ
எனக்குள்
செலுத்தி விட்டு
சென்ற காதலால்.....

 
எனக்குள் இருக்கும்
கவிஞனின் உறக்கம்
கலைத்த பெருமை
உனக்கே வாய்க்கட்டும்...நன்றி ....அவளுக்கு....

கிசு கிசு: அவள் யாருன்னு கேட்டிடாதீங்க... நம்ம அம்மணி கோச்சுக்கும் ......ஹி..ஹி..ஹி....


நேசங்களுடன்
ஜீவானந்தம்.

14 comments:

  1. hi friends uploadgo your photo upload to enjoy unlimit time working upload your sentiment photography. http://uploadgo.wapka.mobi

    ReplyDelete
  2. கனவு
    நினைவால்

    நினைவுகள்
    கனவா


    ரசிச்சேன்
    கிறுக்கள்
    தொடர
    வாழ்த்துக்கள்
    மாப்ள

    ReplyDelete
  3. கனவு
    நினைவால்

    நினைவுகள்
    கனவா


    ரசிச்சேன்
    கிறுக்கள்
    தொடர
    வாழ்த்துக்கள்
    மாப்ள

    ReplyDelete
  4. நல்ல வரிகள்... ரசித்தேன்...

    /// அள்ள அள்ள
    குறையாத
    அட்சய பாத்திரமாய்
    அவளின்
    ஞாபகங்கள்... ///

    இது ஒன்றே போதுமே...!

    ReplyDelete
  5. புலவர் முத்தரசு...நின் புகழ் வாழ்க

    ReplyDelete
  6. நன்றி தனபாலன்..வருகைக்கும்,
    பகிர்வுக்கும்..

    ReplyDelete
  7. கலக்கிட்டிங்க பாஸ்

    ReplyDelete
  8. //அள்ள அள்ள
    குறையாத
    அட்சய பாத்திரமாய்
    அவளின்
    ஞாபகங்கள்...//

    மிகவும் ரசித்த கவிதை....

    பாராட்டுகள் நண்பரே.

    ReplyDelete
  9. கவிதை நன்றாக இருக்கு,ஜீவா..

    //கிசு கிசு: அவள் யாருன்னு கேட்டிடாதீங்க... நம்ம அம்மணி கோச்சுக்கும் ......ஹி..ஹி..ஹி....//

    அடப்பாவமே,இதென்ன கிசு,கிசு????

    ReplyDelete
  10. கவிதை எல்லாம் அழகுதான்...
    காதல் அமர்க்களமாய் கைகூடிவருகிறது கவிதையில்....தொடருங்கள்.....

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....