Monday, October 1, 2012

நாகாவதி அணை, எர்ரபட்டி, பென்னாகரம், தருமபுரி


தொப்பூர்ல இருந்து குறுக்கு வழியில் ஒகேனக்கல் செல்லும் போது ஜருகு, அரக்காசன ஹள்ளி என்கிற ஊரினை தாண்டி நாகாவதி அணை என்கிற ஒரு போர்டு பார்த்தோம்.எர்ரப்பட்டி என்கிற இடத்தில் இந்த அணை இருக்கிறது.சரி எதோ பெரிய அணை போல ..என்று நம்ம்...பி உள்ளே புகுந்தோம்.இருபுறமும் வயல் வெளிகள் பசுமையுடன் இருக்க இந்த அணை தான் காரணம் என்பது பார்க்கும் போதே தெரிகிறது.கரும்பு தோட்டங்கள், நெல் வயல்கள், பூந்தோட்டங்கள் என வழி நெடுக இருக்கின்றன.
மெயின் ரோட்டிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.ரோடு கொஞ்சம் மோசம்தான்.இருந்தாலும் புதிய இடத்தை காண வேண்டி செல்கையில் ஒன்றும் தெரியவில்லை.ஊரினை அடைந்தவுடன் அணையை தேடிப் பார்த்ததில்  ஊரின் அருகிலேயே ஒதுக்கு புறமாக  நாகாவதி ஆறு மேல் அணை கட்டப்பட்டு இருக்கிறது.
புரட்சித்தலைவர் எம்ஜியார் அவர்களால் திறக்கப்பட்டு இதன் சுற்றுப்புற ஏரியாவில் இருக்கிற பாசன பகுதிகளுக்கு உதவும் வகையில் நீர் தேக்க அணையாக இருக்கிறது.மலைகளுக்கு இடையில் வரும் நாகாவதி ஆறு இங்கு தடுக்கப்பட்டு பாசனத்துக்காக பயன்படுத்த படுகிறது. ஒகேனக்கல் கீழ்பகுதி காவிரியாற்றில் கலக்க கூடிய நான்கு துணையாறுகளாக   சின்னாறு, பாலாறு, தொப்பையாறு, நாகாவதி ஆகியன இருக்கின்றன.
    நாகாவதி அணைக்கட்டில்  இருக்கின்ற தெய்வங்கள்

 
 
 
 
ஏதோ அந்த பக்கம் போனதால் இப்படி ஒரு அணை இருப்பதை தெரிந்து கொண்டேன்.(வரலாறு..?).

இந்த ஊரினை பற்றி நம்ம கூகுளில் தேடியபோது கிடைத்த விசயங்கள்:

தருமபுரியில் இந்தியன் கல்வி அறக்கட்டளை நிறுவி நடத்தி வரும் ஜெயபாண்டியன்  என்பவர் இந்த ஊர் அரசு பள்ளி மாணவர்களோடு சேர்ந்து 3ஜி மொபைல் போன் மூலம் இயங்கும் தானியங்கி ரோபோ துப்பாக்கியை வடிவமைத்துள்ளார்.
இன்னொரு விசயம் இந்த ஊரினை சார்ந்த பரமேஸ்வரன் என்கிற மாணவன் வீர, தீர செயலுக்காக, டில்லி குடியரசு தின விழாவில் விருது பெற்று வந்து இருக்கிறான்.நாகாவதி அணை நீர் பகுதியில் குளித்து பள்ளத்தில் சிக்கிகொண்டு நீரில் உயிருக்கு போராடிய சரண்யா, ஆர்த்தி, புவனேஸ்வரி ஆகியோரை துணிகளை கயிறாக பயன்படுத்தி மேலே மெல்ல இழுத்து, அவர்களின் தலைமுடியை பிடித்து வெளியில் இழுத்து காப்பாற்றினானாம்  நீச்சல் தெரியாத பரமேஸ்வரன்.
எப்படியோ....அணைக்கு போய் இந்த ஊரினை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. 
நல்ல  லொகேஷன்.அமைதியாக இருக்கிறது.அப்படி ஒண்ணும் பெரிய சுற்றுலா தளம் இல்லை.ஒரு நீர்த் தேக்க அணை.ஆனால் மாலைபொழுதை ரசிக்க ஏற்ற இடம்.அப்புறம் எப்பவும் போல நம்ம சொந்த காரங்களுக்கு ஏற்ற இடம்..எல்லாம் செஞ்சு / வாங்கி எடுத்துட்டு போய் ரம்மியமான சூழலில் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டே சாப்பிடலாம்.(எதை அப்படின்னு கேட்க கூடாது..).அணை முழுவதும் வெள்ளம் தேங்கி இருக்கும் போது பார்க்க மிக அழகாக இருக்குமாம்.ஆடி 18 விசேசம் இங்கு மிக நன்றாக இருக்குமாம்.அந்த ஊர் தலைக்கட்டு ஒருத்தர் சொன்னது இது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

8 comments:

 1. புதிய அணை ! அறிமுகம் இல்லாத கிராமம் ! உலகுக்கு அதிகம் தெரியாத ஒரு இடத்தை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி நண்பா !

  பதிவு அழகு ! நன்றி

  ReplyDelete
 2. புதிய அறிமுகம்...

  ReplyDelete
 3. மாப்ளே,
  விரிவா விளக்கமா சொன்னீர்கள் நன்றி

  (யாம் ஏற்கனவே போய் இருக்கோம்ல)

  ReplyDelete
 4. அப்புறம் மனசாட்சி...

  ஆடு அறுப்பு எதுவும் நடந்துச்சா?

  ReplyDelete
 5. ஜீவா இந்தக் கடையை உள் வாடகைக்கு விட்டுட்டார்...

  'நல்லா இருக்கு, நன்னி'ன்னு கமெண்டு போடுறவங்க, வந்த தடமும் தெரியாமா, போகும் இடமும் தெரியாம பொத்துனாப்புல கமெண்டு போட்டுட்டு போகவும்...

  ReplyDelete
 6. ஜீவா,

  நான் கூட செய்தித்தாள்களில் பேரு பார்த்து இருக்கிறேன் பெருசா இருக்கும் போலன்னு நினைத்தேன், பரவாயில்லை , இது போன்ற அதிகம் வெளியில் தெரியாத இடத்தினையும் அறிமுகம்ம் செய்து இடத்தினை நன்கு அறிந்து கொள்ள செய்துள்ளீர்கள்,நன்றி!

  ReplyDelete
 7. எதை அப்படின்னு கேட்க கூடாது.// நாங்க கேட்க மாட்டோமே!!!!!!!!!

  ReplyDelete
 8. ஒருமுறை சென்றதுண்டு...

  விளக்கங்கள் நல்ல சொல்லி இருக்கீங்க... அப்படியே நம்ம ஊர் பக்கம் வாங்க... (தாடிக்கொம்பு..., மலைக்கேணி..., ..., ...,)

  ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....